An exotic used car dealership designed to resemble a vending machine in Singapore May 15, 2017. The dealership houses up to 60 exotic cars in a 15 storey building which uses a fish-bone type lift system to deliver cars to clients within minutes. REUTERS/Thomas White
வென்டிங் மெஷின்-ஐ இந்தியாவில் பெரு நகரங்களில் எளிதாகப் பார்க்க கூடிய ஒரு இயந்திரம், ஏடிஎம் இயந்திரத்தை போலவே இருக்கும் இதில் காசு போட்டால் பெப்ஸி, கோக் பாட்டில் முதல் சிப்ஸ் பாக்கெட் வரை அனைத்தும் கிடைக்கிறது.
இதே வென்டிங் மென்ஷில் பெராரி, பென்ட்லி, லாம்போர்கின் போன்ற ஆடம்பர கார் வந்தால் எப்படி இருக்கும்..?
This 15-storey glass building is the world’s largest supercar vending machine
சிங்கப்பூர்
ஆட்டோபஹன் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் 15 அடுக்குகள் கொண்ட ஷோரூம்-ஐ சிங்கப்பூரில் திறந்துள்ளது. இதில் மொத்த 60 கார்கள் மட்டுமே நிறுத்தக்கூடிய ஒரு கட்டிட வடிமைப்பை கொண்டுள்ளது.
இது வெறும் ஷோரூமாக மட்டும் அல்லாமல் பெரிய சைஸ் வென்டிங் மெஷினாகச் செயல்படுகிறது. இதன் மூலம் உலகிலேயே மிகக் காஸ்ட்லியான வென்டிங் மெஷினாக இந்தக் கட்டிடம் பெயர் எடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
இந்தப் புதிய ஷோரூம்-யின் தரைதளத்தில் இருக்கும் தொடுதிரையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான காரை தேர்ந்தெடுத்தால் மட்டும் போது. 60 முதல் 120 நொடிகளில் நீங்கள் தேர்வு செய்யப்பட்ட கார் உங்கள் முன் நிற்கும்.
ஈர்ப்பு
சிங்கப்பூர் போன்ற விலை உயர்ந்த நகரங்களில் குறைவான முதலீட்டில் வர்த்தகத்தைச் செய்ய இதுபோன்ற புதிய ஐடியாக்கள் சிறப்பான முறையில் உதவுகிறது என் ஆட்டோமஹன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கேரி காங் தெரிவித்தார்.
அமெரிக்கா
இதேபோன்ற திட்ட வடிவடத்தில் அமெரிக்காவில் கார்வானா பகுதியில் 8 தளத்தைக் கொண்ட 30 கார்கள் அடங்க கூடிய ஒரு வடிவம் அமைக்கப்பட்டது.
அதனை முன்மாறியாகக் கொண்டு தற்போது இந்தச் சிங்கப்பூர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய கார்கள்
இங்கு இருக்கும் அனைத்து கார்களும் பயன்படுத்தப்பட்ட பழைய கார்கள் தான். மேலும் இத்திட்டத்தின் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களுக்குக் கார்களை வாடகைக்கு அளிக்க முடியும் எனக் கேரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக