திங்கள், 8 மே, 2017

குவைத்தில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கை வந்த பின் உயிரிழந்தார்!!

குவைத்தில் எஜமானர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்

குவைத்­தில் பணிப் பெண்­ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரி­மை­யா­ளர்­களால் தாக்கு­த­லுக்கு இலக்­கான நிலையில் இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்டு சிகிச்சை பெற்றுவந்த நொச்­சி­யா­கம நொகுன்­னேவ பிர­தே­சத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்­துள்ளார்.



முள்­ளந்­தண்டு உடை­பட்டு நட­மாட முடி­யாத நிலையில் குவைத்­தி­லி­ருந்து அழைத்து வரப்­பட்ட சுஜானி ராஜ­பக் ஷ (32) என்ற, இரு பிள்­ளை­களின் தாயொ­ரு­வரே இவ்­வாறு அநு­ரா­த­புரம் பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த நிலையில் கடந்த நான்காம் திகதி சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார்.

2014 ஆம் ஆண்டு அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக குவைத்­துக்கு பணிப்­பெண்­ணாக சென்ற அவர் தாக்­கு­த­லு­குள்­ளாகி அந்நாட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்­த­தா­கவும் அதன்­பின்னர் அவர் கொழும்பு தேசிய மற்றும் அநு­ரா­த­புரம் பொது வைத்தியசாலைகளில் சுமார் 5 மாதங்­க­ளாக சிகிச்சை பெற்­று­வந்­த­தாகவும் உறவினர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இது தொடர்பில் உயி­ரி­ழந்­த­வரின் சகோ­தரி தெரி­விக்­கையில், தனது தங்கை கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்­பரில் குவைத் சென்­றி­ருந்த நிலையில் இரண்டு மாதங்­க­ளாக அவர் தொடர்பில் எவ்­வித தக­வல்­களும் கிடைக்­க­பெற்­றி­ருக்­க­வில்லை.

அதன் பின்னர் அவ­ரது கண­வரும் தந்­தையும் அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள முகவர் நிலையத்தை அணுகி தங்கை தொடர்பில் தக­வல்­களை பெற்று அவரை தொலை­பேசியில் தொடர்பு கொண்ட போது அவர், பணி­யாற்றும் வீட்டின் எஜ­மா­னர்கள் தன்னைத் தாக்கி கொடூ­ர­மாக சித்தி­ர­வதை செய்­வ­தா­கவும் உட­ன­டி­யாக நாடு திரும்ப வழி செய்­யு­மாறும் கோரி­யி­ருந்தார்.

அத­னை­ய­டுத்து, கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் முறைப்பாடு செய்­த­போதும் எவ்­வித தக­வல்­களும் கிடைத்­தி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில், கடந்த 2015.12. 02 ஆம் திக­தி­யன்று அவர் வைத்­தி­ய­சா­லையில் அனும­திக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டி­லுள்ள இலங்­கை­யர்கள் சிலர் தொலை­பேசி மூலம் தொடர்­பு­ கொண்டு தெரி­வித்­தனர்.

அத்­தி­னத்தில் தங்கை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி­யாகி 22 நாட்கள் கழிந்­தி­ருந்­தன.

வீடு தேடி­வந்த வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­தி­னரின் உத­வி­யுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்­பரில் தங்கை இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டி­ருந்த போதிலும் அவரால் நட­மாட முடி­யா­த­வாறு முள்­ளந்­தண்டு பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சுஜானி பணி­யாற்றி வந்த வீட்டில் உடை­களை சரி­யாக கழு­வ­வில்லை என்­ப­தற்­காக நான்கு தும்­புத்­த­டிகள் முறியும் அள­வுக்கு அவரை அவ்­வீட்டு எஜ­மானி தாக்­கி­யுள்ளார்.

அதன்­பின்னர் அவ்­வீட்டின் எஜ­மானன், சுஜானியை உதைத்து கடு­மை­யாக தாக்கி­ய­தோடு அவ்­வீட்டின் இரண்­டா­வது மாடியின் படிக்­கட்­டு­களில் உருட்­டி­விட்டதாகவும் அதன்­பின்னர் தான் சுஜானி கண்­வி­ழித்துப் பார்க்­கையில் பொலிஸார் உத­வி­யுடன் வைத்­திய சாலையில் அனுமதிக்கப்பட்டமை தனது தங்கை சுஜானிக்கு தெரியவந்ததாக சுஜானியின் சகோதரி தெரிவித்தார்.

இந்நிலையில் நாடு திரும்பிய அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் கடந்த 5 மாதங்களாக கடும் சிரமத்துக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல