புதன், 31 மே, 2017

தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

சென்னை தியாகராய நகரில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் புதன்கிழமையன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.  ஏற்பட்ட விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியே புகை மூட்டத்தால் ஸ்தம்பித்தது. அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

45க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் வாகனங்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீ அணைப்பதில் சிரமம் நீடித்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து உள்ளேயே விழுந்தது. முகப்பின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.

சென்னை தியாகராயநகர் பகுதி பரபரப்பு மிக்க வர்த்தக மையமாக விளங்குகிறது.
தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ என்ற 7 மாடி துணிக் கடை செயல்படுகிறது.

இக்கடையின் தரைத்தளத்தில் துணிக்கடையின் பரிசு பொருட்கள் வழங்கும் பிரிவும், ‘ஸ்ரீகுமரன் தங்க மாளிகை’ நகைக்கடையும் உள்ளது.

கடையின் 1-வது தளத்தில் பட்டுப்புடவைகள் பிரிவும், 2-வது தளத்தில் பல ரக சேலைகள் பிரிவும், 3-வது தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் பிரிவும், 4-வது தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான ஆடை பிரிவும், 5-வது தளத்தில் ஆடவர் பிரிவும், 6-வது தளத்தில் வீட்டு அலங்கார பொருட்கள் பிரிவும், 7-வது தளத்தில் நவீன ரக ஆடைகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பிரிவும் உள்ளது.

மொட்டை மாடியில் நவீன ரக பிளாஸ்டிக் கூரை வேயப்பட்டு துணிக்கடை ஊழியர்களுக்கான ‘கேண்டீன்’ செயல்பட்டு வருகிறது. நகைக்கடை மற்றும் துணிக்கடையில் வேலை பார்க்கும் 1,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த கேண்டீனில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

‘தி சென்னை சில்க்ஸ்’ மற்றும் ‘ஸ்ரீகுமரன் தங்க மாளிகை’ கடைகள் தினமும் இரவு 10 மணி வரை இயங்கும். அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு கடையின் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்டு, இரவு 11.30 மணிக்கு கடை மூடப்பட்டது. கடையின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள வாசல்களை பூட்டி, பாதுகாப்பு பணியில் சுமார் 10 பாதுகாவலர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

கடையின் மொட்டை மாடியில் செயல்படும் கேண்டீனில் பணியாற்றும் ஊழியர்கள் இரவில் அங்கேயே தங்கி இருந்தார்கள். எப்போதும் காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால், கேண்டீனிலேயே ஊழியர்கள் தங்கி, சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு காலை உணவுகளாக இட்லி, கிச்சடி, சாம்பார், தேங்காய் சட்னி போன்ற உணவுகளை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அதிகாலை 4.15 மணி அளவில் கடையின் தரைத்தளத்தில் தீப்பொறிகள் வெடிப்பது போல சத்தம் கேட்டது. தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் என்னவோ, ஏதோவென்று பதறி கடையின் கதவை லேசாக திறந்து பார்த்தனர். அப்போது தரைத்தளத்தில் உள்ள பரிசு பொருட்கள் வினியோகம் செய்யும் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் புகை மேலும் தீவிரமாகி திடீரென்று கடையின் உள்ளே தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் பாதுகாவலர்கள் கடைக்கு மேலே இருந்த கேண்டீன் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடையின் நிர்வாகத்தினர், தீயணைப்பு பிரிவு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் தியாகராயநகர் பகுதி அதிகாலை வேளையிலேயே பரபரப்படைய தொடங்கியது.

தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், வண்ணாரப்பேட்டை, தியாகராயநகர், தேனாம்பேட்டை நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் முதற்கட்டமாக சம்பவ இடத்துக்கு விரைந்தன. அதனைத் தொடர்ந்து ‘எப்.54-எச்.டி.டி.’ எனும் 170 அடி உயரமுள்ள ராட்சத உயிர் காக்கும் ‘ஸ்கை லிப்ட்’ வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

இதற்கிடையே பாதுகாப்பு கருதி அப்பகுதி முழுவதுமே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ‘போர்ம் காம்பவுண்ட்’ மட்டுமே தெளிக்கப்பட்டு வந்தநிலையில், அடுத்தகட்டமாக தண்ணீரை பீய்ச்சியடிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து உடனடியாக தடை செய்யப்பட்டது. நகரின் பிற பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மெட்ரோ தண்ணீர் லாரி வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

காலை 9 மணி அளவில் புகை வெளியேற வசதியாக கடையின் முன்பக்க கண்ணாடிகள் மற்றும் விளம்பர பலகைகள் உடைக்கப்பட்டன. சரியாக காலை 9.30 மணிக்கு உஸ்மான் சாலை மற்றும் மேம்பாலம் என 2 பகுதிகளிலும் மெட்ரோ லாரிகள் நிறுத்தப்பட்டு, ராட்சத பைப் மூலம் கடைக்குள் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட மறுகணமே வெளியேறும் புகையின் அளவு பல மடங்கு அதிகமானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீவிபத்து பற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெயவர்தன் எம்.பி., மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், சென்னை மாநகர காவல் துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வருவாய்த்துறை அதிகாரி மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி சுகாதார மற்றும் பணிகள் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

பிற்பகலில் கடையின் முன்புறம் உள்ள நுழைவுவாயிலில் பற்றியிருந்த தீ ஓரளவு அணைக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைய தொடங்கினர். ஆனாலும் தொடர்ந்து முன்னேறுவதில் சிரமம் நீடித்ததால் பெரும் சவாலாகவே மீட்பு பணி அமைந்தது. எனினும் கிரேன் உதவியுடன் கடையின் முன்பக்கம் லேசாக பெயர்க்கப்பட்டு, புகையை வெளியேற்றும் பணி நடந்தது.

அதிகாலை 4.15 மணிக்கு பற்றி எரிய தொடங்கிய தீ, மாலை 4.15 மணி கடந்தும் குறைந்தபாடில்லை. தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர்.

மாலை 6 மணி வரை கடையின் சுவர்களில் துளை போட்டு புகையை வெளியேற்றும் முயற்சி நடந்து வந்தது. இதனால் தியாகராயநகர் பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

21 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின.

என்றாலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.

மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நுரைக்கலவை எந்திரம் ஒன்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் நேற்று இரவு கட்டிடத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இந்த தீ விபத்து குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் புகை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, எங்கிருந்து தீ விபத்து தொடங்கியது? என்பது தெரிந்தால் மட்டும் தான் விபத்துக்கான உண்மை காரணத்தை தெரிந்துகொள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக தகவல் வந்துள்ளது.







Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல