தாய்லாந்து மன்னர்
தாய்லாந்து மன்னர் வாஜிராலங்கோர்ன் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. பின்னர், விசாரணையில் சிறுவர்களின் பொம்மைத் துப்பாக்கி எனத் தெரியவந்தது.
தாய்லாந்து மன்னர் வாஜிராலங்கோர்ன் ஜெர்மனியில் தங்கி அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஜெர்மனி நகரின் முனிச் நகரிலுள்ள லேக் ஸ்டர்ன்பெர்க்கில் தங்கியிருந்த மன்னர், நகரைச் சுற்றிப்பார்க்க தன்னுடைய மோட்டார் சைக்கிள் வாகனத்தில் நகர்வலம் சென்றார்.
பாதுகாவலர்களோடு நகர் வலம் வந்த மன்னர் மீது திடீரென ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அது பிளாஸ்டிக் குண்டு என்பதால் முதலில் அதிர்ச்சியடைந்த மன்னர் நிதானமடைந்தார். இச்சம்பவத்தால் அந்த இடத்தில் உடனடியாக ஜெர்மனி போலீஸாரும் தாய்லாந்து பாதுகாவலர்களும் விரைந்து பாதுகாப்பைப் பலப்படுத்தினர்.
பின்னர் விசாரணையின்போது மன்னர் சென்ற தெருவில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் பொம்மைத் துப்பாக்கியிலிருந்து அந்தக் குண்டுகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அச்சிறுவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக