ஞாயிறு, 18 ஜூன், 2017

கோடரி கொலை வழக்கு விசாரணை கொடிய ஸ்ரீலங்கா தமிழ் கும்பல்கள் ஐக்கிய இராச்சியத்தினுள் தம்முள்; சண்டையிடுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது

 Clockwise from top left: Prashad Sothalingham, Sugan Selvarajan, Sivakaran Ockersz and Visuparathan Dayaparan

மே 2009ல் ஸ்ரீலங்காவில் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் 25 வருடங்களுக்குப் பின்னர், தீவின் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கிளர்ச்சிக் குழுவை தோற்கடித்ததுடன் முற்றுப்பெற்றது. சமீப வருடங்களில் ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்காத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்கள் மற்றும் அதில் ஒரு சிறிய சிறுபான்மைக் குழுவினர் உணர்வற்றவர்களாக தரம் தாழ்ந்துள்ளார்கள் என்பதை அவர்கள் வளர்த்துவரும் வன்முறைகள் சாட்சி பகர்கின்றன.


2000க்கும் மற்றும் 2003க்கும் இடையில் லண்டனில் உள்ள தமிழ் கும்பல்களுக்கு இடையில் நடைபெற்ற வன்முறையில் 10 கொலைகள் மற்றும் ஒரு தொடரான வேறு இரத்தக்களரி சம்பவங்கள் உச்சம் பெற்றன. இந்தக் கும்பல்கள் தங்கள் சொந்த இடமான ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களையும் வெளிக்கொண்டு வந்தார்கள்.

அந்தக் நகரங்கள் மற்றும் கிராமங்களில் மிகவும் முக்கியமானவை மன்னார், அரியாலை, உருந்தரை மற்றும் விவிரி என அழைக்கப்படும் வல்வெட்டித்துறை என்பனவாகும். ஸ்கொட்லன் யார்ட் அவர்கள்மீது திடீர் தாக்குதல்கள் நடத்தி ஒரு தொகை வழக்கு விசாரணைகளை நடத்தி கொலையாளிகளை சிறையில் அடைத்ததினால் அந்த வன்முறைகள் நின்று போயிருந்தன.

மே 2009ல் தமிழ் புலிகளை அவர்களது காட்டுப்பகுதி மறைவிடங்களை ஸ்ரீலங்கா இராணுவம் சுற்றி வளைத்து அவர்களைக் கொன்றதுடன், ஸ்ரீலங்காவில் உள்நாட்டு யுத்தம் ஒரு இரத்தக்களறியான முடிவுக்கு வந்தது.

தீவின் பெரும்பான்மையினரான சிங்கள இராணுவ வீரர்களினால் புலிகளின் புகழ்பெற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் மற்றும் அவர்களது ஒட்டுமொத்த தோல்வி இடம்பெற்றதினால் ஈழம் என அழைக்கப்பட்ட தாயகத்தைப் பற்றி கனவு கண்டிருந்த அநேக ஸ்ரீலங்கா தமிழர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) மற்றும் அதன் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு சுதந்திர தமிழ் நாடான தமிழ் ஈழம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என விரும்பிய தமிழர்களுக்கு எதிரான உள்நாட்டுப் போர் 1983ல் வெடித்தது.

இங்கே 2009 வசந்த காலத்தின் போது, லண்டனில் உள்ள அநேக ஸ்ரீலங்கா புலம்பெயர் தமிழர்கள், பிரித்தானிய அரசாங்கம் இந்த வன்முறையின் இடையில் சிக்கிக்கொண்ட தமிழர்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Neal Croos was found to have died from head wounds caused by an axe

மேலும் பல ஸ்ரீலங்கா தமிழ் அகதிகள் பிரித்தானியாவில் வாழ்வதற்காக வந்தார்கள், அவர்களில் பலர் தாங்கள் சாட்சியாக இருந்த சம்பவங்களின் காரணமாக உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். லண்டன் வீதிகளில் புதிய கும்பல்கள் தோன்றலாயின - யாழ்ப்பாண பையன்கள், டூட்டிங் தமிழர்கள், ஹரோ கும்பல் மற்றும் வெம்ளியை சேர்ந்த மோசமான டிஎம்எக்ஸ் என்று பல கும்பல்கள் உருவாயின.

டூட்டிங் தமிழர்களிடையே இருந்த இரண்டு நண்பர்கள் குழுக்கள் அவர்கள் தொடர்பு கொண்டிருந்த பண இயந்திர மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தின் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையினால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.

நவம்பர் 23, 2015ல் இந்த இரண்டு குழுக்களும் தெற்கு லண்டன் புறநகர் பகுதியான மிற்சாம் மையத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் போட்டிக்கு நடத்தப்படும் மதுபான விருந்துகளில் கலந்து கொண்டார்கள், இந்த இரண்டு விருந்தும் மொறிசன் பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தின் அருகே நடைபெற்றது.

பி.ப 7 மணிக்குப் பிறகு ஒரு கும்பல் கோடரிகள், வாள்கள் மற்றும் மச்செட்ஸ் எனப்படும் அகலமான பெரிய கத்திகள் போன்ற ஆயுதங்களுடன் மற்றைய குழுவை துரத்த ஆரம்பித்தது.

26 வயதான ஜஸ்டின் நீல் குறூஸ் என்பவர் சுற்றி வளைக்கப்பட்டு கோடரியால் தாக்கப்பட்டார்.

ராஜேந்திரன் மகிந்தாஸ்கரன் என்கிற மற்றொருவர் தனது தலையை நோக்கி வந்த ஆயுதத்தை தடுப்பதற்ககாக தனது கரத்தை கவசமாக பயன்படுத்தியதினால் அவரது மூன்று விரல்களும் கிட்டத்தட்ட துண்டிக்கப் பட்டன. மூன்றாவதாக பாதிப்புக்குள்ளான நபருக்கு மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டது.

இந்த தாக்குதலாளிகளின் தலைவர் ‘புள்ளட்’ என்கிற தெருப்பெயரால் அறியப்படும் பிரசாத் சோதிலிங்கமம் ஆவார், இவர் போட்ஸ்மவுத்துக்கும் பின்னர் எசெக்ஸ்க்கும் தப்பியோடியபோது அங்கு வைத்து கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவர் யோர்க்ஸெயாருக்கு தப்பியோடிய அதேவேளை கொலைக்குற்ற சந்தேக நபர்களில் ஒருவரான ஐங்கரன் பாஸ்கரன் நாட்டை விட்டே முழுதாக வெளியேறிவிட்டார், மற்றும் அவர் இன்னும் வெளிநாட்டிலேயே இருப்பதாக நம்பப்படுகிறது, அநேகமாக இந்தியா அல்லது ஸ்ரீலங்காவில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. திரு. குறூஸின் கொலைக்காக எட்டுப்பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது மற்றும் இந்த வாரம் தொடர் விசாரணைகளில் இறுதி விசாரணை முடிவுக்கு வந்தது, ஒருவர் கொலைக்குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டும் மற்றும் சிலர் வன்முறைக் கோளாறுகளில் ஈடுபட்டதுக்காகவும் தண்டிக்கப்பட்டார்கள்.

அரச வழக்கறிஞரான இராணி வழக்கறிஞர் மார்க் பென்ஹோல்ஸ் பழைய பெய்லில் வாதிடும்போது, அது மனக்குறைபாடு மற்றும் வன்முறை வரலாறு கொண்ட மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

புதன் அன்று (ஜூன் 14), 25 வயதான சோதிலிங்கத்துக்கு திரு. குறூஸினைக் கொலை செய்ததுக்காக சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இராணி வழக்கறிஞரான நீதிபதி பெவன், குறைந்தது 29 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியதுடன் தண்டனை முடிவில் அவர் நாடு கடத்தப்படுவார் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

சோதிலிங்கம் தனது 15வது வயதில் ஒரு சட்ட விரோத குடியேற்றக்காரனாக பிரித்தானியாவுக்கு வந்தார் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தங்குவதற்காக தனது கடந்த காலத்தைப் பற்றி பொய் கூறியுள்ளார்.

“சாட்சிக் கூண்டில் நின்று தமிழ் கும்பல்கள் தம்மில் சண்டையிடுவது மரியாதை அடிப்படையில் என்று நீங்கள் பிரதிபலித்தீர்கள். ஆனால் உங்களை உள்ளே எடுத்து மற்றும் உங்களுக்கு ஆதரவு காட்டிய நாட்டுக்கு நீங்கள் காட்டவேண்டிய சிறிதளவு மரியாதைகூட எங்கே போனது?” என்று நீதிபதி அவரைப் பார்த்துக் கேட்டார்.

“சிறப்பான வாழ்க்கையை தேடி அல்லது அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா போன்ற யுத்தத்தால் சீரழியும் ஒரு நாட்டில் இருந்து தப்புவதற்காக இந்த நாட்டுக்கு வருபவர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் முன்னரைப் போல வாள்கள், கோடரிகள் மற்றும் அகலக்கத்திகள் போன்றவற்றை ஏந்திக்கொண்டு சண்டையிடும் குற்றவாளிக் கும்பல்களாக அலைய முடியாது. அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது” என்று நீதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜூரிமார்களிடம் ஒரு சாட்சி, சோதிலிங்கம் கோடரியை ஏந்திக்கொண்டு திரு. குறூஸின் தலையில் அதன்மூலம் தாக்கியதை தான் பார்த்ததாகத் தெரிவித்தார்.

சுகன் செல்வராஜன் கொலைக் குற்றத்தில் சம்பந்தப்படவில்லை எனச் சொல்லப்பட்டது.

வேறு இரண்டு பேர்களும் - 21 வயதான அரண்வேந்தன் புவனேந்திரன், மற்றும் 18 வயதான சிவகரன் ஒக்கேர்ஸ் - கடந்த வருடம் ஜூரியினரால் கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிக்கப் பட்டார்கள், ஆனால் வன்முறைக் குழப்பத்துக்காக புவனேந்திரனுக்கு 33 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வேறு நான்கு பேர்கள் - 21 வயதான கௌரிசாந்த் லோகநாதன், 21 வயதான ஜெரோம் ஜெயகுமார், 23 வயதான விசுபரன் தயாபரன் மற்றும் 20 வயதான விதுஷன் பாலமுரளி ஆகியோரும் கொலைக்குற்றத்தில் இருந்து ஒரு நீதிபதியின் கட்டளைப்படி விடுவிக்கப் பட்டார்கள்.

செல்வராஜன், ஒக்கேர்ஸ் மற்றும் தயாபரன் ஆகியோர் காயங்கள் ஏற்படுத்தியது, வன்முறைக் குழப்பம் என்பனவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப் பட்டார்கள்.

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல