ஞாயிறு, 30 ஜூலை, 2017

பாகிஸ்தான் பிரதமர் பதவியைக் காலிசெய்த Calibri ஃபான்ட்… பரபர சஸ்பென்ஸ் கதை! #Fontgate

ணினியில் பயன்படுத்தும் ஃபான்ட் (Font) எனப்படும் ஓர் எழுத்துரு, பிரதமர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கும் அளவுக்கு வலிமையுடையது எனச்சொன்னால் நம்பமுடிகிறதா? ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலையையே புரட்டிப்போடக்கூடிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? கொஞ்ச காலம் முன்புவரை யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் விஷயத்தில் இதுதான் தற்போது நடந்திருக்கிறது.



தொடரும் சாபம் :

இந்தியாவைப் போல், பாகிஸ்தான் நாட்டிலும் பிரதமரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை, இதுவரை ஒருவர் கூட ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் நீடித்ததில்லை. பனாமா பேப்பர் ஊழல் விவகாரத்தில், சொத்துக்குவிப்பு செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை செய்யவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியேற்ற நவாஸ் ஷெரிஃப், 4 ஆண்டுகள் 54 நாள்கள் பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார்.

பனாமா பேப்பர் ஊழல் :

மத்திய அமெரிக்க நாடான பனாமா என்றதும் பலருக்கும், அட்லாண்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் செயற்கையாக உருவாக்கப்பட்ட, 48 மைல் நீள 'பனாமா கால்வாய்' தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது 'பனாமா பேப்பர்ஸ்' என்றழைக்கப்படும் ஊழல் விவகாரம், அந்நாட்டைப்பற்றி சர்வதேச அரங்கில் பேச வைத்திருக்கிறது. பனாமாவைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல பிரபலங்களும், நிறுவனங்களும் வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துக்குவித்திருப்பதாகக் கடந்த ஆண்டு தகவல்கள் வெளியானது. இதில், 3,60,000 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் டேட்டாபேஸில் இருந்து, சுமார் 1.15 கோடி பக்கங்கள் ஆவணங்கள் வெளியே கசிந்தது. இதை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டபின், இந்தச் செய்தி உலகையே உலுக்கியது.

உலகின் மிகப்பெரிய டேட்டா லீக் என்று இது அழைக்கப்படுகிறது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வினோத் அதானி உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இதில் அடிபட்டன. 90-களில் பிரதமராக இருந்தபோது, சட்டவிரோதமாக லண்டனில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சொத்துகளை அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் நிர்வகிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து ஷெரிஃப்பை பதவிநீக்கம் செய்து, அவருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் வாஜித் ஜியா தலைமையிலான கூட்டு விசாரணைக்குழுவை இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்பலமான ஊழல் :

கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணையில், ஷெரீஃப் குடும்பத்தினரின் வருவாய் மற்றும் சொத்து குறித்த ஆவணங்களில் நிறைய குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், லண்டன் சொத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும்வகையில், நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மரியம் நவாஸ் இக்குழுவிடம் சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இந்த ஆவணங்கள்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக மாறியது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேதியிட்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் 'கலிப்ரி' (Calibri) என்ற எழுத்துருவில் தயாரிக்கப்பட்டிருந்தன. விண்டோஸ் 2007 ஆபரேட்டிங் சிஸ்டத்தின் டீஃபால்ட் ஃபான்ட் ஆக இதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எழுத்துரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2007-ம் ஆண்டில் இருந்துதான் வர்த்தகரீதியாக வெளியிடப்பட்டது. லூகாஸ் டி க்ரூட் (Lucas De Groot) என்பவர்தான் இந்த எழுத்துருவை வடிவமைத்தவர். இந்த எழுத்துருவை வடிவமைக்கும் பணி 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2004-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின், 2006-ம் ஆண்டு மே மாதம்தான் முதல்முதலாக டெவலப்பர்களுக்கான பீட்டா வடிவமாக இது வெளியிடப்பட்டது. ஆனால், மரியம் நவாஸ் சமர்ப்பித்த ஆவணங்கள் பிப்ரவரி மாதம், 2006-ம் ஆண்டு தேதியிடப்பட்டிருந்தன. எனவே, இந்த ஆவணங்கள் போலியானவை என்ற முடிவுக்கு விசாரணைக்குழு வந்தது.



ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் அரசியல் தொடர்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாகத் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் பதவி விலகியுள்ளார்.

'எவ்வளவு சாமர்த்தியமான குற்றவாளியும் ஒரு தடயத்தையாவது விட்டுச்செல்வான்' என்பதை கிரைம் திரில்லர் படங்களில் புலனாய்வுக் கதாபாத்திரங்கள் பேசிக்கேட்டிருப்போம். ஆனால், எழுத்துருவால் ஊழல் அம்பலமாகி, பிரதமர் பதவியிழந்த கதையை இப்போதுதான் கண்முன்னே பார்க்கிறோம்.

-vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல