வியாழன், 5 அக்டோபர், 2017

இந்த 8 அறிகுறிகளில் 5 இருந்தால் நீங்களும் இணையதள அடிமைதான்! #InternetAddictionDisorder

நம்முடைய வாழ்க்கையை 1990 -க்கு முன்பு, 1990-க்குப் பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். 1990-க்கு முன்பு பிறந்தவர்கள் கிரிக்கெட் பேட்டுடனோ, டென்னிஸ் பேட்டுடனோ, வாலிபாலுடனோ தங்கள் பொழுதுகளைக் கழித்திருப்பார்கள். 1990-க்குப் பின் பிறந்தவர்களின் நிலை வேறு மாதிரி. பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறுவதே இல்லை.



கையில் மொபைல் போனுடனோ, லேப்டாப்புடனோதான் அவர்களின் நேரம் கழிகிறது. விளையாடுவதாக இருந்தால் கூட ஆன் - லைனில்தான் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும்தான். அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்துவதும், இணையம் இல்லாமல் இருக்கவே முடியாது என்பதும், மது, புகை போல ஒருவித அடிமைப்பழக்கம்தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். மனநல மருத்துவர் திவ்யா

“இணையதள அடிமைப் பழக்கத்தைப் பற்றி முதன்முதலில் 1995 - ம் ஆண்டு
அமெரிக்காவைச் சேர்ந்த மனநலவியலாளர் இவான் கோல்ட்பெர்க் (Ivan K. Goldberg) என்பவர் கண்டறிந்தார். அதற்கு முன்பாக வேதிப்பொருள் அல்லாத, இணையதள அடிமைப் பழக்கத்தைப் பற்றி முதலில் பேசியவர் இவர்தான். யார் ஒருவர் ஒரு வாரத்துக்கு 38.5 மணி நேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறாரோ அவர் மனதளவில் அடிமையாக இருப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நாளடைவில் வேலைக்காக இணையதளம் பயன்படுத்தும் நேரம் அதிகமாவிட்டதால் அப்படி கணக்கிடுவது இயலாத காரியமானது. அதனால் குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்துக் கணக்கிடப்பட்டது. அந்த அறிகுறிகளைப் பார்ப்பதற்கு முன்பாக எந்தெந்த விஷயங்களுக்காக அடிமையாகிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்" என்கிறார் மனநல மருத்துவர் திவ்யா தனஞ்செயன்.

எந்தெந்த விஷயங்களுக்காக இணையதளத்துக்கு அடிமையாகிறார்கள்?

தகவல்களை அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக (web search for information overload),

கட்டுப்பாடில்லாமல் இணையதள விளையாட்டுக்களை கணினி அல்லது கைபேசியில் விளையாடுவதற்காக (net games addiction),

சூதாடுவதற்காக (online gambling),

விதவிதமான பொருள்கள் வாங்குவதற்காக (shopping),.

பேஸ்புக், ட்விட்டர், மூலம் கிடைத்த இணைய நண்பர்களுடன், உறவுகளுடன் சாட் செய்வதற்காக ((cyber relationship addiction),

பாலின்பத்துக்காக (cyber sex)

- இந்தக் காரணங்களுக்காகத்தான் அதிகளவில் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பழக்கமானது நாளடைவில் இவர்களை அடிமைகளாக மாற்றிவிடும். அதற்குக் காரணம் போதைப்பழக்கத்துக்கு காரணியாய் விளங்கும், மூளையின் இன்ப மையத்தில் (pleasure centre) சுரக்கும் டோபமைன்(dopamine) செயல்பாடும், இன்பம் தரும் எந்தவொரு செயலையும் திரும்பத் திரும்ப செய்ய தூண்டும், செயல்முறைப் பழக்குதல் (operant conditioning) என்ற கோட்பாடும்தான்.

கீழ்கண்ட எட்டு அறிகுறிகளில் ஐந்து அறிகுறிகள் இருக்குமாயின் நீங்கள் இணையதளத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்று பொருள்.

1. நாள் முழுவதும் இன்டெர்நெட் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பது ((pre occupation).

2. மன திருப்திக்காக, நெட்டிலேயே அதிக நேரத்தை செலவழிப்பது (tolerance)

3. நெட் உபயோகத்தை குறைக்கவோ, நிறுத்தவோ முயன்று மீண்டும் மீண்டும் தோற்றுப் போவது (loss of control)

4. நெட் உபயோகத்தை குறைக்கவோ நிறுத்தவோ முயன்றால் அமைதியின்மை, மூளை மந்தமாகுதல், மன அழுத்தம், எரிச்சல் போன்ற பாதிப்புகளை உணர்வது (withdrawal)

5. உத்தேசித்த நேரத்தைவிட அதிக நேரத்தை நெட்டில் செலவிடுவது

6. முக்கிய உறவுகள், தொழில், கல்வி, வேலை வாய்ப்புகளை இழக்கும் அளவுக்கு /ஆபத்து ஏற்படும் அளவுக்கு இணையத்தை உபயோகிப்பது (dysfunction and harmful use)

7. இணையத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை மறைக்க, குடும்பத்தார் /சிகிச்சை அளிப்பவரிடம் பொய் கூறுவது (lying)

8. பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கவோ/ மன உளைச்சலிலிருந்து விடுபடவோ இணையத்தை உபயோகிப்பது (avoidance/escapism)

யார் யாரெல்லாம் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்கள் :

வெளிப்படையானவர்கள். இவர்கள் (extrovert) தங்களின் சமூக நிலையை உயர்த்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள்.

கூச்ச சுபாவம் உள்ளவர்கள் (introvert). தன் தாழ்வு மனப்பான்மை, மன குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளவார்கள்.

எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், சுயக் கட்டுப்பாடு குறைவாக உள்ளவர்கள்.

பெற்றோர்/குடும்பத்தினரின் கவனிப்பு இல்லாதவர்கள்.

யதார்த்தத்தை தவிர்ப்பவர்கள்/தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் (anonymity.)

தனிமை விரும்பிகள்.

மேற்கண்ட அனைவரும் எளிதாக இனையதளத்துக்கு அடிமையாகிவிடுவார்கள்.

அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன ?

நேரத்தை கையாளுவதில் சிரமம் ஏற்படும்;

பொறுப்புக்கள் அனைத்தும் அரைகுறையாக நிற்கும்

குடும்பத்துடன்/ஆக்கபூர்வமாக செலவுசெய்ய நேரம் இருக்காது.

ஓய்வு நேரத்தில் இணையம் உபயோகிப்பது கடந்து, இணையம் உபயோகிக்காத மீத நேரத்தில் உறங்குவது. இதனால் பல உடல்நல, மனநல பாதிப்புகள் உண்டாகும்.

பொய் கூறுவது (குடும்பத்தாரிடமும், இணையத்தில் உள்ளவர்களிடம் தன் போலி அடையாளத்தை பற்றியும்)

மன அழுத்தம், பதற்றம், தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, தற்கொலை எண்ணங்கள், குடி மற்றும் பிற போதைக்கு அடிமையாதல்

உறவுகள், கல்வி, வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடுதல்

இதிலிருந்து நாம் எப்படி மீள்வது ? பிறரை எப்படி மீட்பது ?

எதிர்மறை நேரம் (practising opposite time) செலவிட பழக்குதல்; ஒருவர் இணையத்தில் செலவிடும் தினசரி முறையைக் கண்டுபிடித்து, அதை படிப்படியாக நீக்கி, அவரது அன்றாட செயல்பாட்டில் அவரது சிந்தனையை கவரும் வகையில் உள்ள மாற்று பழக்கங்களை கண்டறிந்து பழக்க வேண்டும்.

வெளிப்புற தூண்டுபொருள்கள் (External stoppers) கொண்டு நிறுத்த செய்வது. Eg:alarm clock.

இணைய அடிமைப் பழக்கத்தால் கைவிடப்பட்ட அவரது வாடிக்கையான பழக்கவழக்கங்களை (eg: walking, painting, outdoor games) பட்டியலிட வைத்து, அவருக்கு அதனை மீண்டும் தொடங்க வலியுறுத்துவது.

சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்தல். (Short term goals) வெகு நாள் பழக்கத்தை, ஒரே நாளில் விடுவது கடினம். Eg: நாள் முழுக்க இணையம் உபயோகிப்பவரை, தினமும் மாலை 2 மணி நேரம் மட்டும் உபயோகிக்க வைப்பது.

ஒருசில குறிப்பிட்ட ஆப்கள் (apps) மட்டுமே மீண்டும் மீண்டும் உபயோகிக்க காரணமாய் இருப்பின், அவற்றை மட்டும் தவிர்த்து (block), பயன் தரும் மற்ற வலைத்தளங்களை பயன்படுத்துவது.

நினைவூட்டல் அட்டைகள் (reminder cards); இதனால் உண்டாகும் நன்மை தீமைகளை, தன் கைப்பட ஒரு அட்டையில் எழுதி வைத்துக்கொண்டு, அதை அடிக்கடி படித்து நினைவூட்டி கொள்வது.

கவனிப்பு அல்லது மேற்பார்வை இல்லாதவர்களை ஆதரவு மற்றும் சுயஉதவி குழுக்களில் (support & self-help groups) சேர்ப்பது.

குடும்பம் சார்ந்த உறவுமுறை பிரச்சனைகளுக்கு சிகிச்சை (family therapy) எடுத்துக்கொள்வது.

மன நலப் பிரச்சனைகளுக்கு தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது” என்கிறார் திவ்யா.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல