சனி, 5 மே, 2018

ட்ரூ காலரில் மறைந்திருக்கும் பயனுள்ள அம்சங்கள்

ட்ரூ காலர் (true caller) பொறுத்தவரை மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் பெரிய பயனுள்ள செயலி ஆகும். குறிப்பாக ட்ரூ காலர் செயலியை இந்தியாவில் 15 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர். தற்சமயம் இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.



அதன்படி ட்ரூ காலர் செயலி இந்தியாவில் பிரபல வங்கியான ஐசிஐசி வங்கியுடன் இணைந்து பணம் அனுப்பும் வசதியைக் கொண்டு வந்துள்ளது. மேலும் இதன் மூலம் போன்றிக்கு மிக எளிமையாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் பின்பு இதில் யு.பி.ஐ-ஐடியை உருவாக்கி இன்னொரு யு.பி.ஐ-ஐடியை கொண்ட நபருக்கு பணம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரூ காலரில் மறைந்திருக்கும் சில சிறப்பு அம்சங்கள்:

பிளாக் கால்:
தேவையில்லாத நமக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் உடனே இந்த செயலி செயல்பட்டு அவற்றை பிளாக் செய்துவிடும்.

டெலிமார்க்கெட்டிங், ரோபோட் அழைப்புகள் போன்றவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் இந்த செயலிக்கு உண்டு.

ஒரு ஒயிட்லிஸ்ட் உருவாக்கி அதில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி வந்தால் பிளாக் செய்யக்கூடாது என்று செட் செய்யும் வசதியும் இதில் உண்டு.

இணையம்:
உங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவையில்லை. முதல் முறை ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வரும்போதே, அந்த எண்ணுக்குரியவரின் பெயர் எங்கேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை, ட்ரூ காலர் அறிந்து வைத்துக் கொள்கிறது. அடுத்த முறை அழைப்பு வருகையில், தன் நினைவிலிருந்தே அதனை உங்களுக்குக் காட்டுகிறது.

ஸ்பேமர்:
தொடர்ந்து ஓர் எண்ணிலிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் எரிச்சல் தரும் பேச்சினைத் தொடர்ந்து அளிப்பவராயின், அந்த எண்ணுக்குரியவரை ஸ்பேமர் என அடையாளக் குறியிட்டு வைக்கலாம். குறிப்பாக இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

ட்ரூ டயலர்:
இதே செயலியைப் போன்று, இதனை வழங்கும் நிறுவனம், 'ட்ரூ டயலர்' என்ற (True Dialer) என்ற செயலியையும் தருகிறது. இதனை, உங்கள் போனின் டயலராக செயல்படுத்தலாம். நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டி அமைத்தால், நீங்கள் குறிப்பிட்ட அடையாளத்துடன், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகையில் தகவல் கிடைக்கும். வழக்கமாக, நீங்கள் டயல் செய்திடுவதனை, இந்த செயலியின் மூலமும் செயல்படுத்தலாம்.

தேடல் பெட்டி:
எண்களை அடையாளப்படுத்தவும் எந்த தொலைபேசி எண்ணையும் எளிமையாக அடையாளம் காண இந்த தேடல் பெட்டி (Search bar) பயன்படும் வகையில் உள்ளது. குறிப்பாக இந்த பயன்பாடும் மிக எளிமையாக இருக்கிறது.

சுயவிவரம் (profile):
உடன் நீங்கள் உங்கள் சொந்த சுயவிவரத்தை அமைத்து உங்களுக்கு தேவையான வழியில் தனிப்பயனாக்கலாம். இதன் பயன்பாடு என்னவென்றால் அழைப்பாளர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை பெற உதவுகிறது. உங்கள் தொடர்புகளின் வசதிக்காக வலைத்தளம் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற தகவல்களை நீங்கள் ட்ரூ காலரில்சேர்க்கலாம்.

தரவுத்தளம்:
இந்த ஆப் பயன்பாடானது உங்கள் தரவுத்தளத்தில் இருந்து உங்கள் எண்ணை நீக்க உதவுகிறது.

நீங்கள் இந்த இணைப்பை http://www.truecaller.com/unlist  ஐ பார்வையிட வேண்டும்.

பின்னர் நாட்டின் குறியீடு உள்ளிட்ட உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.

அடுத்து, எண் அகற்றலுக்கான காரணத்தைத் தேர்வுசெய்து, கேப்ட்சா உள்ளிட்டு, பட்டியலிடப்படாத பொத்தானைக் கிளிக் செய்யவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல