வெள்ளி, 1 ஜூன், 2018

ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி?

பயனர்கள் தங்களுக்கு தேவையில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எளிதில் தடை செய்யமுடியும். ஐ ஓ.எஸ் அல்லது ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை பயன்படுத்தியோ அல்லது உங்கள் தொலைதொடர்பு நிறுவனத்தின் உதவியுடனோ அல்லது நேசனல் டு நாட் கால் ரிஜிஸ்டரி மூலமோ இதை செய்யலாம். எப்படி இலவசமாகவும் எளிதாகவும் தேவையில்லா எண்களை நீங்களே தடை செய்யும் வழிமுறையை இங்கே காணலாம்.



ஐ ஒ.எஸ்7 அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகளில் அழைப்புகளை ப்ளாக் செய்தல்

ஆப்பிள் போன்களில் உள்ள உள்ளார்ந்த வடிவமைப்பின் மூலம் உங்களை அழைப்புகளை தடை செய்ய அனுமதித்து, தேவையில்லா அழைப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. தடை செய்யப்பட்ட எண்களில் இருந்து அதன்பிறகு குறுஞ்செய்திகள், அழைப்புகள், ஃபேஸ்டைம் வேண்டுகோள்கள் என எவையும் வந்து தொந்தரவு செய்யாது.

ஆனால் அனுப்பப்பட்டது என்பதற்கான குறியீடு மற்றும் இதர எச்சரிக்கைகள் அனுப்பியவர் போனில் எப்போதும் போல இருக்கும். இதன் மூலம் நீங்கள் அவர்களை ப்ளாக் செய்துள்ளீர்கள் என்பது தெரியாமல் இருக்கும். அதற்கான வழிமுறை இதோ.

படி#1
போன் என்ற பகுதிக்கு செல்லவும். ஐ ஓ.எஸ் 11-ல் முதலில் ஜெனரல் சென்று அதில் போன்-ஐ தேர்வு செய்யவும்.

படி#2
கால்ஸ்(Calls) என்ற பகுதிக்கு கீழே கால் ப்ளாக்கிங் (Call Blocking & Identification) என்பதை தேர்வு செய்தால் புதிய பக்கத்திற்கு கூட்டிச் செல்லும்.

படி#3
அங்கு நீங்கள் ப்ளாக் செய்ய விரும்பும் எண்களை சேர்த்துக்கொள்ளலாம்.

படி#4
மெசஜ் மற்றும் பேஸ்டைமிலும் ப்ளாக் செய்ய, அவற்றின் செட்டிங்ஸ் க்கு சென்று இதே ப்ளாக் மெனுவை பெறலாம்.

படி#5
'block contact' என்னும் நீல நிற பட்டனை செய்து , ப்ளாக் செய்யவேண்டிய எண்களை தேர்வு செய்யலாம்.

படி#6
எண்களை அன்-ப்ளாக் செய்ய, மேல் வலது மூலையில் உள்ள எடிட்-ஐ தேர்வு செய்து, அன்-ப்ளாக் செய்ய வேண்டிய எண்ணிற்கு அருகில் உள்ள சிவப்பு கழித்தல் குறியீடை கிளிக் செய்யவும்.

படி#7
பின்னர் சிவப்பு நிற 'unblock' பட்டனை கிளிக் செய்து மாற்றங்களை உறுதி செய்யவும்.

படி#8
மேலும் தெரியாத எண்களை ப்ளாக் செய்ய, 'recents' ஐ கிளிக் செய்து ப்ளாக் செய்யவேண்டிய எண்ணை தேர்வு செய்து, அதற்கு அருகில் உள்ள '|' ஐ கிளிக் செய்யவும்.


ஆன்ட்ராய்டு கருவிகளில் அழைப்புகளை ப்ளாக் செய்தல்
உங்கள் ஆண்ராய்டு போன்களில் தேவையற்ற அழைப்புகளை தடை செய்வதற்கான வழிமுறை இதோ.

படி#1
போன் பகுதிக்கு சென்று மூன்று புள்ளி குறியீடை கிளிக் செய்யவும்.

படி#2
அதில் செட்டிங்ஸ் என்பதை தேர்வு செய்து, அங்கு Blocked numbersஐ கிளிக் செய்யவும்.

படி#3
பின்னர் நீங்கள் தடை செய்ய விரும்பும் எண்களை அதில் சேர்க்கவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல