வெளிநாட்டுப் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக பிரபல சீரியல் நடிகை சங்கீதா பாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், திரைத்துறையில் இருப்பவர்கள் சிலரே பாலியல் தொழில் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே, பாலியல் தொழில் செய்ததாக நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு பிரபல நடிகை இதே புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா பாலன். ராம்கி நடித்த கருப்பு ரோஜாக்கள் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அதற்குப்பின் சில படங்களில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து சீரியலில் நடிக்கத் தொடங்கிய சங்கீதா பாலன், குணச்சித்திர வேடங்களை விட வில்லி வேடங்களிலேயே அதிகமாக நடித்து வருகிறார். சீரியல் ஒன்றில் இவர் நடித்த 'சொர்ணாக்கா' கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தற்பொழுது பிரபல டிவி தொடரான 'வாணி ராணி'யில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பனையூரின் விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில், அந்த விடுதியில் பாலியல் தொழில் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இது தொடர்பாக நடிகை சங்கீதா பாலன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கீதாவுடன் சேர்ந்து மேலும் பல சின்னத்திரை நடிகைகள் பாலியல் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, சங்கீதாவின் கைதால், விரைவில் அவர்களது பெயரும் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக