முதலிடத்தில்...முப்பதாவது இடத்தில் என தொலைக்காட்சிகள் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கு காரணமான டெலிவிஷன் ரேட்டிங் பாய்ன்ட்ஸ்...கிராஸ் ரேட்டிங் பாய்ன்ட்ஸ் என்பதெல்லாம் எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்று பார்த்தால் நம்பலாமா நம்பப்படாதா என வடிவேலு கேட்பது போலவே நமக்குள்ளும் கேள்விகள் எழுகின்றன.
எந்த தொலைக்காட்சியை...அதிலும் அந்த தொலைக்காட்சியின் எந்தெந்த நிகழ்ச்சிகளை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பதை சதவீதமாக மாற்றி அதன் அடிப்படையிலேயே முதலிடம்..இரண்டாம் இடம் என்றெல்லாம் சட்டை காலரை தூக்கி விட்டுக்கொள்கின்றன தொலைக்காட்சிகள்.
சரி...இதை எப்படி கணக்கிடுகிறார்கள் ? வீடு வீடாக சென்று தினசரி யாராவது கணக்கெடுக்கிறார்களா என்றால் இல்லை. அப்புறம்..எப்படி? பீப்பிள் மீட்டர் என்ற மக்கள் மீட்டர் அல்லது மானி ஒன்றை குறிப்பிட்ட சில வீடுகளில் பொறுத்துகிறார்கள். இது விலை அதிகமான ஒரு கருவி. உதாரணத்திற்கு சுமார் ஒன்னேகால் கோடி பேர் வசிக்கும் சென்னையில் சுமார் 80 லட்சம் டிவி கனெக்ஷன்ஸ் உள்ளது என்றால் ஒரு உதாரணத்திற்கு சுமார் 250 மக்கள் மீட்டர் அமைக்கப்படுகிறதாம். அந்த மீட்டர் பொறுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் அந்த வீட்டார்கள் பார்க்கும் அத்தனை நிகழ்ச்சியையும் இந்த மீட்டர் பதிவு செய்கிறது. இதில் அந்த வீட்டார் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகள் எது என்று கணக்கிட்டுப்பார்த்து அதாவது அந்த மீட்டரில் உள்ள சிக்னல்களை டீ கோட் செய்து அந்த கணக்கை சதவீதமாக மாற்றுகிறார்கள்.
உதாரணத்திற்கு...பத்து பார்வையாளர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதில் மகாபாராதத் தொடரை அந்த பத்து பேரில் ஆறு பேர் குறைந்தது ஒரு நிமிடத்திற்கு பார்க்கிறார்கள் என்றால் அந்த மகாபாரத தொடரின் "ரீச்" அதாவது மக்களிடம் சென்றைடையும் அளவு பத்தில் ஆறு (6/10)...இதையே சதவீதமாக மாற்றினால் 60 சதவீதம்.
இப்படி முதல் வாரத்தில் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள்...இரண்டாவது வாரத்தில் இரண்டாயிரம் பேர் பார்க்கிறார்கள்...மூன்றாவது வாரத்தில் ஆயிரத்து ஐநுறு பேர் பார்க்கிறார்கள்..நான்காவது வாரத்தில் ஆயிரத்து இருநுறு பேர் பார்க்கிறார்கள் என்று இருந்தால்
1000+2000+1500+1200=5700 எனக்கணக்கிடுகிறார்கள். அதாவது Gross Reach 5,700.
இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியையும், தொலைக்காட்சியையும் பிற தொலைக்காட்சிகளுடனும், தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது செய்திகளுடனும் ஒப்பிட்டு டிஆர்பி..ஜிஆர்பி ஆகியவை கணக்கிடப்படுகிறது.
இந்த கணக்கீடு என்பது பார்வையாளர்கள் பற்றிய தகவல்களை தொலைக்காட்சிகள் அறிந்து கொள்வதைவிட...அந்த தொலைக்காட்சிகளுக்கு விளம்பரத்தை தரும் விளம்பர நிறுவனங்களுக்கு ஒரு அளவு கோல் என்பதே இந்த கணக்கீட்டின் முதன்மையான நோக்கம். இந்த கணக்கீட்டின் அடிப்படையிலேயே ...கோபால் பல்பொடி விளம்பரமும் அளிக்கப்படுகிறது கேல்கேட் பேஸ்ட் விளம்பரமும் அளிக்கப்படுகிறது. மேலும், இதே கோல்கேட் நிறுவனம் "உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு" இருக்கா ? என்ற விளம்பரத்தை டிஆர்பியும், ஜீஆர்பியும் அதிக புள்ளிகளைப் பெற்ற தொலைக்காட்சிக்கு ஒரு பத்து வினாடிக்கு (உதாரணத்திற்கு) பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விளம்பரம் தருகிறது என்றால் புள்ளிகள் குறைந்த தொலைக்காட்சிக்கு பத்து வினாடி விளம்பரத்திற்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே அளித்து விளம்பரம் தரும்.
ஆக...இது ஒரு நம்பர் மற்றும் சதவீத கணக்கு விளையாட்டு.
சரி..இருக்கட்டும் பரவாயில்லை. நல்லதுதானே என்று கேள்வி எழுப்பலாம்.
நானும் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம். மீண்டும் கொஞ்சம் நமது நினைவு டார்டாஸ்சை சுழற்றுவோம்.
பாய்ன்ட் நம்பர்
ஒன்று : மக்கள் மீட்டர் பொறுத்தப்படும் இடம் கேபிள் ஆபிரேட்டர்களுக்கு தெரியாமல் இருக்குமா ?
இரண்டு : தெரியும் என்பதே 97.5 சதவீத பதிலாக இருக்கும்பட்சத்தில் கேபிள் ஆபிரேட்டர்களே தொலைக்காட்சிகளையும் நடத்துவதை இங்கு நினைவு படுத்திக்கொள்ளலாமா?
மூன்று: மக்கள் மீட்டர் என்பது ஒரு குறிப்பிட்ட Frequency அதாவது அலைவரிசையின் சிக்னல்களை மட்டுமே கணக்கில் கொள்ளும்...அதுக்கு எக்ஸ் டிவியா ஒய் டிவியா என்றெல்லாம் கணக்கில் கொள்ளத் தெரியாது என்று எடுத்துக்கொண்டால்...23 சேனலில் காலையில் A டிவி ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் மதியம் அதே 23 ல் B டிவி ஓடிக்கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது. அப்படியானால் மீட்டர் எந்த நிகழ்ச்சி என்பதை எப்படிக் காண்பிக்கும் ?... அதாவது சேனல் மாற்றவேபடாத தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சி சிக்னல்களை மட்டுமே அப்பழுக்கில்லாமல் கணக்கில் கொள்ளும். ஆக...துக்கடா சேனல்கள் எல்லாம் அடிக்கடி சேனல்கள் மாற்றி மாற்றி காண்பிக்கப்படும்போது அந்த சேனல்களை எப்படி ஒரே கணக்காக எடுத்துக்கொள்ள முடியும் ?
நான்கு : மக்கள் மீட்டர் பொறுத்தப்பட்ட ஒரு பகுதியில் அங்குள்ள தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு பணம் கொடுத்தோ அல்லது அந்த பகுதியில் வேண்டுமென்றே தனது ஆட்களுக்கே அதிகம் இணைப்பு கொடுத்தோ ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியை மட்டுமே 24 மணி நேரமும் ஓட விட்டு மக்கள் மீட்டரின் கண்களில் மண்iணைத் தூவினால் என்ன செய்வது ?
இப்படி பல கேள்விகள் இந்த டெலிவிஷன் ரேட்டிங் பஞ்சாயத்தில் வரிசை கட்டி நிற்கின்றன. ஏனென்றால்....நாம் சந்திக்கும் பல ஆண் நண்பர்களைக் கேட்டால் கேப்டன் டிவியின் தலையணை மந்திரம் நிகழ்ச்சியை தவிர்க்காமல், மறக்காமல் பார்ப்பதாக கூறுகின்றனர். அப்படி கணக்குப்பார்த்தால் 10 பேர் கொண்ட ஆண் குழுவில் 12 பேர் அந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்க்கின்றனர். இப்போ அந்த நிகழ்ச்சிக்கு ரேட்டிங் எவ்வளவு ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!! //

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக