ஞாயிறு, 21 ஜூன், 2020

வாட்ஸ்அப் டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகின்றது. வாட்ஸ்அப் மக்களின் தொலைதொடர்பு முறையை செயலி வாயிலாக எளிமையாக்கியிருக்கின்றது என்றும் கூறலாம்.
இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை வாட்ஸ்அப் செயலி  உருவாக்கியுள்ளது. இவையெல்லாம் தங்களுக்கு தெரிந்திருந்தாலும் நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

whatsapp last seen tricks: 1

வாட்ஸ்அப் செயலியின் உள்ளே செல்லாமலேயே தங்களுடைய நண்பர்களுக்கு அல்லது யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்ப முடியும்.

அதற்கு முதலில் Google Assistant என்பதற்கு செல்லுங்கள், அவற்றில் Send the whatsapp message to XXX. அதாவது XXX என்பதில் தாங்கள் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய பெயரை கூற வேண்டும்.

பின் அவர்களுக்கு என்ன மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த மெசேஜையும் வாய்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பின் சென்ட் என்பதை கிளிக் செய்திர்கள் என்றால் தங்கள் அனுப்பிய மெசேஜ், தங்களுடைய நண்பரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு சென்ட் செய்யப்படும்.

இவ்வாறு மெசேஜ் செய்வதன் மூலம் தாங்கள் வாட்ஸ்அப் செயலியை இறுதியாக எப்பொழுது off செய்திர்களோ, அந்த last seen-ஐ தான் தங்களுடைய நண்பர்களுக்கு last seen ஆக ஆட்டும்.

உதாரணத்திற்கு தாங்கள் இரவு 9.30 மணிக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி விட்டு off செய்தீர்கள் என்றால். மறுநாள் இந்த ட்ரிக்ஸை செய்து பார்த்தீர்கள் என்றால்.. தங்களுடைய last seen 9.30 தான் காட்டும் ஆனால் தங்களுடைய நண்பர்களுக்கு தங்கள் அனுப்பிய மெசேஜ் சென்ட் ஆகிவிடும்.

Read receipts in whatsapp: 2

வாட்ஸ்அப் செயலியில் Read receipts என்று ஒரு அம்சம் இருக்கிறது, அதனை Off செய்தீர்கள் என்றால், நாம் அனுப்பு மெசேஜ் சென்ட் ஆகும். ஆனால் நாம் அனுப்பிய மெசேஜ் அவர்கள் பார்த்திருந்தாலும், நமக்கு Blue tick ஆகாது.

அப்பொழுது தாங்கள் அவர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் செய்தீர்களானால்,  அந்த வாய்ஸ் மெசேஜை தங்களுடைய நண்பர் கிளிக் செய்து கேட்பார்கள், அதன்போது தாங்கள் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ப்ளூ நிறத்தில் டிக் ஆகும்.

அதனை வைத்தே தாங்கள் தங்கள் நண்பருக்கும் அனுப்பும் மெசேஜ் சென்டாகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

Phone storage full using whatsapp: 3

பொதுவாக வாட்ஸ்அப் பயன்படுத்தினாலே நமது போன் ஸ்டோரேஜ் full ஆகிவிடும். இருந்தாலும் சிலருடைய சாட்டினை நாம் கிளியர் செய்வதற்கு விரும்பமாட்டோம். இருந்தாலும் தேவை இல்லாதவர்களின் சாட்டினை மட்டும் டெலிட் செய்யலாம்.
அதாவது வாட்ஸ்அப் செயலியில் உள்ள setting உள்ளே செல்லுங்கள் அவற்றில் data and storage usage என்பதை கிளிக் செய்யுங்கள்,

பின் storage usage என்பதை கிளிக் செய்யுங்கள் இப்பொழுது உங்கள் வாட்ஸ்அப் செயலியில் contacts உள்ளவர்களை view செய்து காட்டும்,

அவற்றில் தங்கள் contacts-யில் உள்ளவர்கள் எவ்வளவு MB ஸ்டோரேஜியில் உள்ளது என்பதை, வரிசையாக காட்டும் அதாவது எவ்வளவு text message உள்ளது, எவ்வளவு வீடியோ உள்ளது மற்றும் எவ்வளவு போடோஸ் உள்ளது அதற்கு எல்லாம் எவ்வளவு ஸ்டோரேஜ் என்பதையும் வரிசையாக காட்டும்.

அவற்றில் தங்களுக்கு தேவை இல்லாதவர்களின் ஸ்டோரேஜ்களை மட்டும் கிளியர் செய்து கொள்ளலாம். இதன் மூலம் போன் ஸ்டோரேஜ் full ஆக்குவதை நாம் தவிர்த்து கொள்ளலாம்.

Book mark your important message: 4

வாட்ஸ்அப் செயலியில் நாம் யாருக்காவது ஏதேனும் முக்கியமான தகவலை அனுப்பியிருப்போம் அல்லது நமக்கு யாராவது ஏதாவது முக்கியமான தகவலை அனுப்பி இருப்பார்கள் அதனை நாம் BOOK MARK செய்து வைத்து கொள்ளலாம்.

அதாவது யாருடைய வாட்ஸ்அப் மெசேஜை Book mark செய்ய வேண்டுமோ அதனை லாங் பிரஸ் செய்யுங்கள், பின் அந்த பேஜில் ஸ்டார் போன்று ஒரு சிம்பிள் காட்டப்படும் அதனை கிளிக் செய்தால் அந்த மெசேஜ் மட்டும் புக் மார்க் செய்யப்படும்.

பின் வாட்ஸ்அப் ஹோம் பேஜிக்கு வந்து வலது புறத்தின் மேல் பகுதியில் மூன்று புள்ளிகள் போன்று இருக்கும் அவற்றை கிளிக் செய்திர்கள் என்றால் starred messages என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்ய வேண்டும்.

அவற்றில் தாங்கள் புக் மார்க் செய்து வைத்த மெசேஜ் புக் மார்க் ஆகி இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல