பொதுவாக ஹார்மோன் பிரச்சனை என்றாலே பலரும் அது பெண்களுக்கு வரக்கூடியது என்று தான் நினைப்போம். ஆனால் ஹார்மோன்கள் என்பவை பெண்களின் உடலில் மட்டுமின்றி, ஆண்களின் உடலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். பெண்களை ஹார்மோன்கள் பாதிக்கும் அதே அளவில் ஆண்களையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
பெரும்பாலும் பெண்கள் தங்களின் வாழ்நாளில் பல கட்டங்களில் ஹார்மோன் மாற்றங்களை சந்திப்பார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். இந்த நிலையைத் தான் மெனோபாஸ் என்று சொல்வர்.
இந்த மெனோபாஸ் காலத்தில் பெண்கள் தங்கள் உடலில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் ஆண்களுக்கும் மெனோபாஸ் காலம் உள்ளது என்பது தெரியுமா? ஆய்வுகளின் படி 50 வயதிற்கு பிறகு ஆண்களும் ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். இருப்பினும் இது பெண்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமானது.
ஆண் மெனோபாஸ் (Male Menopause) என்றால் என்ன?
"ஆண் மெனோபாஸ்" என்பது ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்று அழைக்கப்படும். இது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதைக் குறிக்கிறது. ஆண்ட்ரோபாஸ் நிலையால், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது.
டெஸ்டோஸ்டிரோன்
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு முக்கியமான ஆண் ஹார்மோன் ஆகும். இது ஆண்களின் உடலில் அதிகம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான ஹார்மோன் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இது பருவமடையும் போது மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நிர்வகிக்கிறது, தசையின் அடர்த்தியை பராமரிக்கிறது, உடலுறவில் சிறப்பாக ஈடுபட செய்கிறது மற்றும் உடலின் பிற முக்கிய செயல்பாடுகளுக்கு எரிபொருளாக விளங்குகிறது. ஒரு ஆண் ஆண்ட்ரோபாஸ் நிலையில் இருப்பதை ஒருசில அறிகுறிகளை வைத்து முன்பே அறிந்து கொள்ள முடியும். கீழே அந்த அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல் பருமன்
அழகான கட்டுமஸ்தான உடலமைப்புடனும், ஆண்மையுடனும் இருப்பதற்கு, ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் தான் முக்கிய காரணம். இந்த ஹார்மோனின் அளவு குறையும் போது, உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்க ஆரம்பித்து, உடல் பருமனாக ஆரம்பிக்கும். அதோடு, கார்டிசோல் என்ற மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவையும் உயர்த்தும்.
களைப்பு
நன்கு தூங்கி எழுந்த பின்பும் களைப்புடன் இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியெனில், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்திருக்க வாய்ப்புள்ளது. உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் போது, உடல் சோர்வும், தூக்கமின்மையும் ஏற்படும். ஒருவரது தூக்கத்தை சீராக்க உதவுவது கார்டிசோல் என்னும் ஹார்மோன் தான். இந்த கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் இருந்தால், மன அழுத்தம் அதிகரித்து, தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டு, அதன் விளைவாக உடல் சோர்வடையும்.
மனக்கவலை அதிகரிக்கும்
ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் போது மனக்கவலை அதிகரிக்கும். அதேப் போல் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்படாவிட்டாலும் மனக்கவலை அதிகரிக்கும். தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை சுரக்காத போது, அது மனநிலையில் மாற்றம், சந்தோஷமின்மை போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
ஆண்மை குறைவு
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இந்த ஹார்மோனின் அளவு குறையும் போது, விந்தணுக்களின் அளவு, அதன் நீந்தும் திறன் போன்றவை குறையும். இதன் விளைவாக ஆண்மை குறைவு ஏற்படும்.
தலைமுடி உதிர்வது
ஆண்களுக்கு வயதான காலத்தில் வழுக்கை விழுவதற்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவும் ஓர் காரணம். பொதுவாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனுக்கு தேவைக்கு ஏற்றவாறு மாறும் திறன் உண்டு. ஆண்களுக்கு வயதாகும் போது முடியில் உள்ள ஒரு நொதிப் பொருள் டெஸ்டோஸ்டிரோனை டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோனாக மாற்றிவிடுகிறது. இந்த ஹார்மோன் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் இதுவே வழுக்கையை ஏற்படுத்துவதும் கூட. இப்படியொரு ஹார்மோன் ஆண்களின் உடலில் அதிகரிக்கும் போது முடி பலவீனமாகி உதிர ஆரம்பிக்கிறது.
மார்பக மாற்றம்
பெண்களின் மார்பக அமைப்புக்கு காரணம் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் தான். பொதுவாக இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை விட குறைவாக உற்பத்தி செய்யப்படும். அதனால் தான் ஆண்களுக்கு மார்பகங்கள் தட்டையாக உள்ளது. ஆனால் எப்போது ஒரு ஆணின் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறதோ, அப்போது அந்த ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாகவும், ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் உற்பத்தி செய்யப்படும். இதன் விளைவாக ஆண்களின் மார்பகங்களில் மாறுதல்கள் ஏற்படும். அதாவது மார்பகங்கள் வளர்ச்சி அடைந்து காணக்கூடும்.
ஆகவே மேலே சொன்ன அறிகுறிகளை ஒரு ஆண் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இதனால் உடலில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், அதை ஆரம்பத்திலேயே அறிந்து சிகிச்சை மேற்கொண்டு சரிசெய்ய வசதியாக இருக்கும்.

Thatstamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக