வெள்ளி, 31 ஜூலை, 2020

விவாகரத்து காரணங்கள் மற்றும் சட்டங்கள்

திருமணமான புதிதில் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தாம் இப்படி மாறிவிட்டார்கள். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

திருமண உறவில் இணையும் தம்பதியர் கூட்டுக்குடும்பத்தை அறியாதவர்கள். ஆணும் பெண்ணும் பெரும்பாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரே ஓருபிள்ளையாக இருப்பதையும் பார்க்கலாம். ஒரே பிள்ளையாக வளர்க்கப்படும குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும அவ்வளவு எளிதில் வருவதில்லை.

அதிகமான விவாகரத்துகளுக்கு வலுவான காரணங்கள் இருக்கிறதா என்பதை ஆராயும் போது அதிர்ச்சிகரமாக சில காரணங்கள் தெரியவருகின்றன.
சில சமயங்களில் கணவன், மனைவியின்  தாய், தந்தையாரே விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கின்றனர். சிறு, சிறு பிரச்சனைகளைக் கூடப் பெரிய  பிரச்சனைகளாக  மாற்றி விவாகரத்துக்கு உட்படுத்துகின்றனர்.
“கணவன் – மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்ச கட்டம்தான் விவாகரத்து.
 
மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது.
 
விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், எதிர்பார்ப்பு.

1)  அதீதமான எதிர் பார்ப்பு ! கணவனிடம் மனைவிககும்,  மனைவியிடம் கணவனுக்கும் இருப்பதனால்,

2)கணவன், மனைவியின் ஆசைகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார். அதுபோல மனைவி, கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார். இதனால் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் வருகின்றன.

3) கணவனும், மனைவியும் திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறான தேவைகள் இருக்கும். ஆனால் என் ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற மாதிரி நீ மாற வேண்டும் என்று கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் எதிர்பார்ப்பார்கள்; கட்டாயப்படுத்துவார்கள். தன்னுடைய ஆசைகளை, தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள்.

4) கணவன் மனைவியை, மனைவி கணவனை  அடக்கி ஆழ வேண்டுமென நினைப்பதனாலும், திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வரும். அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல் உண்டாகிறது. ‘ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்’ என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர்.

5)  என்னடா வாழ்க்கை இது? இவளைப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டோமே என்று ஆண்களும் இவரைப் போய் கட்டி வைத்துவிட்டார்களே என்று பெண்களும் புலம்புவார்கள். வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொல்வார்கள். அப்பா, அம்மா கட்டி வைத்துவிட்டார்கள், அவர்களுக்காகப் பார்க்கிறேன். இல்லையென்றால் பிரிந்துவிடுவேன் என்பார்கள். குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழ்கிறேன் என்பார்கள். இவையெல்லாம் இந்த “கமிட்மென்ட் ஃபோபியா’வின் அறிகுறிகள்.

6) புரிந்து நடந்து  கொள்ளும் தன்மை இன்மை:
ஒருவருடைய மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம், உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு அது பெரிது.   இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பிடித்த ஒரு விஷயத்தை இகழக் கூடாது.

7)கணவனும், மனைவியும் நேர் எதிரான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.

எடுத்துக்காட்டாக, கணவன் மிகவும் கஞ்சனாக இருப்பார்.மனைவி தாராளமாகச் செலவு செய்வார்.

வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பார். மனைவி வீட்டைச் சுத்தம் செய்யமாட்டார். போட்டது போட்டபடியே கிடக்கும்.
கணவன் குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். அவர்களை அடிக்கக் கூடாது என்று நினைப்பார். மனைவி குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கமாட்டார். அடித்து, கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்.
மனைவி எப்போது பார்த்தாலும் கோயில், குளம் என்று வெளியே சுற்றி வருவதில் ஆர்வமுடையவராக இருப்பார். கணவனோ அலுவலகம், வீடு தவிர வேறு எங்கும் போக விரும்பமாட்டார்.

மாமனார் வீட்டில் தான் விரும்பிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்று கணவனுக்கு மனக்குறை இருக்கும். அதனால் மனைவியை அவருடைய அம்மா வீட்டுக்குப் போக கணவன் அனுமதிக்க மாட்டார். மனைவிக்கோ தனது அப்பா, அம்மாவைப் பார்க்க அதிக விருப்பம் இருக்கும்.

இப்படி நேர் எதிரான எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் பல குடும்பங்களில் இருக்கின்றன.

இதனால் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. பின்னர் அவை வெறுப்பாக வளர்கின்றன. பிரிந்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கின்றன.

விவாகரத்து நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு போன்றவற்றை புரிந்து நடக்க வேண்டும்.

இரு பாலரும் ஒருவருக்கொருவர்,  விட்டுக் கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை!

முதலில் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வேறு.      ஆணுக்கு பெண்ணின் உடல் பெரிதாகத் தோன்றும். பெண்ணுக்கு ஆணின் அன்புதான் பெரிதாகத் தோன்றும்.     இந்த இயல்பை இருவரும் புரிந்து கொண்டு நடந்தால் நிறையப் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க எப்போதும் முயற்சிக்கக் கூடாது.

அடுத்தவரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி அன்பாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

 காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே மண விலக்கு கேட்கும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காதலிக்கும்போது ஆண், பெண் இருவருக்கும் ஈர்ப்பும், அன்பும்தான் இருக்கும். புரிதல் இருக்காது. நல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் அவசியம்.
 
இவற்றை இல்வாழ்க்கையில் சிக்கல் உள்ளவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மாற்றிக் கொள்ளவும் அவர்களால் முடியாது. இதற்குக் காரணம், விருப்போ, வெறுப்போ, ஒருவிஷயம் பிடிப்பதோ, பிடிக்காமல் இருப்பதோ இவை எல்லாமும் அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போய் இருக்கும்.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்காக வருகிறவர்களுக்கு, அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போயிருக்கும  எண்ணங்களை மாற்றினால். அதற்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். .
நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று,     நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.

 

பொதுவாக இந்து திருமணச்சட்டம், கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம்  ஆகியவற்றின் கீழ் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.

Naveen Kohli Vs Neelu Kohli (AIR 2006 SC 1675)

ஒரு நிறுவனத்தில் 94.5 சதவிகிதம் பங்கு வைத்திருக்கும் ஒரு மனைவி அந்த நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணி செய்யும் கணவர் மீது, ‘கம்பெனி  விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நஷ்டம் ஏற்படுவதால் அவருடன் கம்பெனி சார்பில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று நாளிதழில்  அறிவிப்பு வெளியிட்டதை மேற்கோள் காட்டி, ‘மனதளவிலான கொடுமை’ என்று அந்தக் கணவர், மனைவி மீது விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.  இதன் தீர்ப்பில் தாம்பத்யத்தில் கணவனோ மனைவியோ சுயநலமாகவோ, கஞ்சத்தனமாகவோ, வெறுப்பூட்டும் வகையிலோ அல்லது சிறு கோபத்தின்  வெளிப்பாடாக சிறுமையுடன் நடந்து கொள்வது, திருமண உறவு நீர்த்துவிட்டதைக் காட்டுகிறதே தவிர, ‘மனக்கொடுமை’ என்று கூற இயலாது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மனைவி வீம்புக்காகவே தொடர முடியாத திருமண உறவை தொடர நினைப்பது யாருக்கும் எந்த பயனையும்  தரப்போவதில்லை என்று கூறி விவாகரத்து வழங்கியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையே, ‘முறிந்து மீள முடியாத திருமண பந்தத்தைத் தொடர  இயலாத நிலை’யையும் விவாகரத்துக்கு அடிப்படைக் காரணமாக கொண்டுவர, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய காரணமாக அமைந்தது.  அந்த மசோதா இன்னும் நிலுவையிலேயே உள்ளது.

Kamaleshwar Bai Vs Peelu Ram Sahi

மனைவி தனக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை போன்றவற்றுக்காக சட்டப்படி புகார் கொடுப்பதை விவாகரத்துக்கான  மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறுகிறது.

Usharani Lenka Vs Panigrahi Subash Chandra Dash

கணவன், தன் மனைவி மீது தங்கள் திருமணத்துக்கு முன்னர் யார் மூலமாகவோ கருவுற்று கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் திருமணம்  செல்லாது என்று கூறும் ஒரு வழக்கு… மேலும், தன் மனைவி தொடர்ந்து பல ஆண்டு காலம் தன்னுடன் எந்தவித திருமண உறவிலும் ஈடுபடாதது  விவாகரத்துக்கான மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாகவும் காட்டி விவாகரத்துக்கான ஒரு வழக்கும் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பில்  எந்த முகாந்திரமோ, சாட்சியமோ இல்லாமல் ஒரு பெண்ணின் மீது அவதூறு கூறுவது தவறு என்ற கண்டனத்தை பதிவு செய்தது.

ஆனால், ‘தாம்பத்ய உறவு மறுக்கப்பட்டது மனக்கொடுமைதான்’ என்பதை ஏற்று, மனைவியின் வாழ்வாதாரத்துக்கு நிதி நிவாரணம் அளித்து  தீர்ப்பளிக்கப்பட்டது. தகுந்த காரணம் இன்றி பிரிந்து செல்லுதல்… குறிப்பிட்ட காலம் வரை இணையாமல் இருத்தல் கணவனோ, மனைவியோ தகுந்த  காரணமில்லாமல் மனைவியையோ, கணவரையோ விட்டுப் பிரிந்து செல்லுதல். இவ்வாறு பிரிந்து செல்லும் நபர் திருமண உறவில் தனக்கு இருக்கும்  சட்டப்படியும் தர்மப்படியுமான கடமையிலிருந்து தவறுவது ஆகும். ஒருவேளை பிரிந்து இருப்பதற்கான தகுந்த காரணத்தை எதிராளி காண்பிக்கும்  வேளையில், இந்தப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் விவாகரத்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம்.

Vikas sharma  Vs Anita Sharma

திருமணமான பெண் கணவருடன் இணைந்து வசிக்க விரும்பினாலும், கணவர் இல்லாமல் அவரின் பெற்றோருடன் வசிக்க விரும்பாதது சட்டப்படி  இணையாமல் இருத்தல் என்று கூற முடியாது என்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்ளும்போது இருக்கும் மதத்தை மாற்றி  வேறு மதம் ஏற்றுக் கொள்ளுதல் ஆணோ, பெண்ணோ தான் திருமணம் செய்து கொள்ளும்போது பின்பற்றிய மதத்திலிருந்து, அந்தத் திருமணம்  நிலுவையிலிருக்கும் போதே வேறு மதத்துக்கு மாறுவதால், ஒரு வேளை அந்தத் திருமண உறவில் சிக்கல் ஏற்பட்டால், இந்தக் காரணத்துக்காகவும்  விவாகரத்து கோரலாம். இந்த அடிப்படைக் காரணம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிக்கு பொருந்தாது.
மனநலப் பாதிப்பு… மனநலம் சம்பந்தப்பட்ட நோய் சிறு கோபமோ, மன அழுத்தமோ மனநலப் பாதிப்பு அல்ல. தொடர்ந்து கட்டுக்கு அடங்காமல்,  தன்னையும் அறியாமல் செய்யும் செயல்கள் மருத்துவ ரீதியாக மனநலப் பாதிப்பு என்று சான்று அளிக்கப்படக்கூடியவை இதன் கீழ் அடங்கும்.

Hema Reddy  Vs  Rakesh Reddy

மனைவியின் தொடர் அமைதி அல்லது அவரின் கணவரின் குடும்பத்தாருடன் நல்ல முறையில் பழகாதது அல்லது கையைக்கொண்டு தலையை  சொரிந்து கொண்டிருக்கும் விதம் போன்றவற்றை மனநலப் பாதிப்பு என்று கூற இயலாது. மேலும் இந்த வழக்கில் அந்தப் பெண் தன் தாயார் தவறிய  காரணத்தினால் சிறிது காலம் கவலையில் இருந்தார். இந்நிலையை மனநோய் என்று கூற இயலாது.  இதற்காக விவாகரத்து கொடுப்பது இயலாது.
தொழுநோய் கொடிய தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் துணையுடன் தொடர்ந்து திருமண உறவை தொடர விருப்பம் இல்லாவிட்டால், அதற்கான  போதிய மருத்துவ சான்றிதழ்களோடு விவாகரத்து கோரலாம்.

Swarajya Lakshmi Vs G.G.Padma Rao

திருமணத்தைத் தொடர்ந்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட பிறகு தன் மனைவிக்கு தொழுநோயும் காசநோயும் இருப்பதற்கான போதிய மருத்துவ  சான்றிதழ் பெற்று, தொடர்ந்து அந்த மனைவியுடன் வாழ்வது தனக்கும் குழந்தைக்கும் ஆபத்தும் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயமும் இருப்பதால்  விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட கணவனின் மனு, மனிதாபிமான அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் விவாகரத்துக்கு  மறுக்கப்பட்டாலும், மேல் முறையீட்டில், இவ்வாறு இருக்கும் நோயாளிகளுடன் தொடர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடகட்டாயப்படுத்த முடியாது என்று  விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

பாலியல் நோய்  

உடல் உறவின் மூலம் தொற்றிக்கொள்ளும் பாலின நோய்கள், எய்ட்ஸ் போன்றவற்றின் மூலம் பாதிக்கப்பட்டிருப்பின் அந்தக் காரணத்துக்காக  விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். உலக வாழ்வை துறந்து துறவறம் மேற்கொள்ளுதல் திருமணமான ஆணோ, பெண்ணோ இல்லற வாழ்வை  துறந்து, சந்நியாசம் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதன் மூலம் பாதிக்கப்படும் துணை, இந்த அடிப்படைக் காரணத்துக்காக விவாகரத்து கோரலாம்.  இந்து திருமணச் சட்டத்தில் மட்டுமே இது விவாகரத்துக்கான ஒரு அடிப்படைக் காரணம்.  உயிருடன் இருப்பதற்கான 7 ஆண்டுகள் வரையில்  கேள்வியுறாமல் இருப்பது  ஒரு தனிநபர் திருமண பந்தம் நிலுவையில் இருக்கும் போது, 7 ஆண்டுகள் வரை எங்கே இருக்கிறார் என்ற எந்த  விவரமும் தெரியவில்லை என்றாலும், அவர் உயிருடன் இருப்பதற்கான எந்தச் சான்றும் ஆதாரமும் யாராலும் சமர்ப்பிக்கப்பட இயலாத பட்சத்திலும்,  பாதிக்கப்பட்டவர் இந்த அடிப்படைக் காரணத்துக்காக விவாகரத்து கோரலாம்.

தற்காலிக நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பின் ஒரு ஆண்டுக்கு மேல் ஒன்று சேராமல் இருத்தல் கணவருக்கோ, மனைவிக்கோ எதிராக தற்காலிக நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்வதற்காக தாக்கல் செய்யப்படும் மனு, அவருக்கு  சாதகமாக தீர்ப்பாகி ஒரு ஆண்டுக்குப் பிறகும் இருவரும் திருமண பந்தத்தில் இணையாத பட்சத்தில், யாரேனும் ஒருவர் அதன் அடிப்படையில்  விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.

கிரிமினல் குற்றத்துக்காக 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை பெறுதல்

ஒரு நபர் திருமண உறவில் இருக்கும்போது 7 ஆண்டுகளோ அதற்குக் கூடுதலாகவோ கடுங்காவல் சிறைத்தண்டனை பெறும் குற்றம் இழைப்பின்,  பாதிக்கப்பட்ட துணை விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய, பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட  இஸ்லாமிய திருமண ரத்து சட்டத்தின் கீழ் ஒரு அடிப்படைக் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.

திருமண – உடல் உறவில் ஈடுபடாமல் இருத்தல்

திருமணத்தின் அடிப்படையே அடுத்த சந்ததியினரை உருவாக்குவதே. அதற்கு மனதளவிலும் உடலளவிலும் முழு ஈடுபாடு அவசியம்.  கிறிஸ்தவர்களுக்கான 1969 விவாகரத்துச் சட்டத்திலும், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திலும் தாம்பத்ய உறவில் ஈடுபடாமல்  தவிர்ப்பது விவாகரத்து கோர அடிப்படைக் காரணமாக உள்ளது.

பெண்களுக்கு மட்டுமே ஆனவை…

விவாகரத்து கோர ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான உரிமை உண்டு. இருப்பினும், சில அடிப்படைக் காரணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து  கோர வரையறுக்கப்பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறிய தவறான உறவு மேற்கொள்ளுதல் (ஆண் ஆணுடனோ, மிருகத்துடனோ  உடலுறவு வைத்துக்கொள்ளுதல்).

ஒரு திருமணம் சட்டப்படி நிலுவையில் இருக்கும் பொழுதே மறுமணம் செய்து கொள்ளுதல்.

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு இருந்தும்  கணவன் திருமண உறவில் ஈடுபடாமல் அதற்கான கடமை ஆற்றாமல் இருக்கும் போது… இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம்  ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். ஒரு பெண் 15 வயதுக்குள் திருமணம் செய்து  வைக்கப்பட்டால் அவள் 18 வயதுக்கு முன் அதனை ரத்து செய்ய கோருதல்… இந்து திருமணச் சட்டம் மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட  இஸ்லாமிய திருமணங்கள் ரத்து சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.

ஒரு சில நேரங்களில் தங்களுடைய திருமண உறவு தொடர்வதனால் எந்தப் பயனுமே இல்லை என்று நினைக்கும் தம்பதி, ஒருமனப்பட்டு விவாகரத்து  மனு தாக்கல் செய்யவும் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், சிறப்புத்  திருமணச் சட்டம் ஆகிய அனைத்துச் சட்டங்களின் கீழும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதன் கீழ் கணவர், மனைவி இருவரும் விவாகரத்துக்கு  முழுமனதுடன் சம்மதித்து அவர்களுடைய ஜீவனாம்சம், எதிர்கால வாழ்வாதாரம், குழந்தை இருப்பின் அவற்றின் காப்பாளர் உரிமை, அவரவர் சொத்தின்  மேலுள்ள உரிமை ஆகியவற்றை முடிவு செய்து, ஒரு தீர்வு கண்ட பின், இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து இறுதி விசாரணைக்கு 6 மாத கால அவகாசம் அளிக்க  அனைத்துச் சட்டங்களும் வகை செய்துள்ளது. இந்தக் கால அவகாசம் கொடுப்பதற்கான அடிப்படைக் காரணம் – தம்பதி தங்களுக்குள் ஏற்பட்டுள்ள  கருத்து வேற்றுமையை மறந்து ஒன்றுகூட இந்த கால அவகாசம் உதவலாம் என்ற எண்ணமே. இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்த  தினத்திலிருந்து 18 மாதங்கள் மட்டுமே நிலுவையில் இருக்கும். அதற்குள் விவாகரத்து பெறாவிடில் தள்ளுபடி செய்யப்படலாம். அது போல 6 மாத  கால அவகாசம் முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது இருவரில் யாரேனும் ஒருவர் விவாகரத்துக்குச் சம்மதிக்காத  பட்சத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம். பெரும்பாலானோர் இந்த கால அவகாசம் தேவையற்றது என்று எண்ணுவதன் காரணத்தினால்,  திருமணச் சட்டங்களுக்கான சட்ட திருத்த மசோதாவிலும் இயற்றப்பட்டுள்ளது.

tamilthagaval





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல