எக்மோ சிகிச்சை? எப்படி, எதற்காக இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதைத்தான் எக்மோ என்று சுருக்கமாக சொல்கிறோம்.
இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும்.
நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம். 1970களில் இருந்து இந்த கருவி மருத்துவ பயன்பாட்டில் உள்ளது. இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும்.
ஆக்சிஜனை உடலுக்கு சேர்க்கும் பணியை நுரையீரல் செய்ய வேண்டும். ஆனால் அது செயல்படாமல் போகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும்.
ஆக்சிஜனை உடலுக்கு சேர்க்கும் பணியை நுரையீரல் செய்ய வேண்டும். ஆனால் அது செயல்படாமல் போகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும்.
அப்போதுதான், இந்த கருவி மிகுந்த அவசியப்படுகிறது. இதற்காக, catheter என்ற சிறு கருவி (பேஸ்மேக்கரை போல), இதயத்தின் அருகேயுள்ள மைய ரத்த நாளத்தில் பொருத்தப்படும். செயற்கை பம்ப் ஒன்று, இந்த கருவிக்குள், ரத்தத்தை செலுத்தும்.
அப்படி ரத்தம் செலுத்தப்படும் முன்பாக, ஆக்சிஜனை கலக்கும் ஒரு கருவி வழியாக அந்த ரத்தம் பாயும். அப்போது உரிய ஆக்சிஜன் ஏற்றப்ட்டு, உடலுக்குள் ரத்தம் செய்வது உறுதி செய்யப்படும். சுவாச கோளாறால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்போது, இது பயன்படுத்தப்படுகிறது.
பம்ப் போன்ற கருவி மூலம், ரத்தத்தை வெளியே எடுத்து, அதில் ஆக்சிஜனை கலந்து மீண்டும், மத்திய நரம்பு மூலமாக அதை செலுத்தும் நடைமுறைக்கு பெயர் வெனோவெனஸ் எக்மோ என அழைக்கப்படுகிறது.

இது காற்று மாற்று செயல்பாடு மட்டுமே. நரம்பு வழியாக வெளியே எடுக்கப்படும் ரத்தம், மீண்டும், arteryவுக்குள் செலுத்தப்படும் நடைமுறைக்கு பெயர் வெனோரடேரியல் எக்மோ. இவ்விரு செயல்பாடுகள் மூலம், சுவாசப்பிரச்சினை, ரத்தம் உந்தி தள்ளப்படும் பிரச்சினை ஆகிய இரண்டும் தீர்க்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக