பஹ்ரைனின் ஜூஃப்பைர் பகுதியில் ஒரு பெண் விநாயகர் சிலையை உடைப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியானது. அந்த காணொளியில் பஹ்ரைன் முஸ்லிம்களுக்கான நாடு என அந்த பெண் குறிப்பிடுகிறார்.காணொளியில் இடம்பெற்ற 54 வயதாகும் அந்தப் பெண் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பஹ்ரைன் காவல்துறையினர் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட மத நம்பிக்கையை அவமதித்தற்காக அந்த பெண் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பஹ்ரைன் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் மூலம் பஹ்ரைன் உள்துறை அமைச்சகமும் கருத்து தெரிவித்துள்ளது. ''பஹ்ரைனில் 1.7 மில்லியன் (17 லட்சம்) மக்கள் வசிக்கின்றனர். இதில் பாதிப்பேர் வெளிநாட்டினர். எனவே ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமதிப்பது குற்றச் செயலாகும்'' என பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டது.
கடையை அடித்து நொறுக்கியதாகவும், ஒரு மதக்குழுவின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அப்பெண் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் விசாரணை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளார்.
பஹ்ரைனில் நடந்த இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ''இவ்வாறான செயல்களை ஆதரிக்கக் கூடாது,'' என பஹ்ரைன் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் காலித் அல் காலிஃபா கூறியுள்ளார்.

(மக்கள் நண்பர் - அன்சார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக