ஒரு பெண்ணுக்கும் விளாம்பழத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் முறை நேபாள நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்குக் குறைவான நெவாரி இனத்தை சேர்ந்த பெண் விளாம்பழத்தை திருமணம் செய்கிறாள்.
இந்த திருமண நிகழ்வு இஹி அல்லது 'பெல் பிபாஹா' (ஒரு விளாம்பழத்துடன் திருமணம்) என்று அழைக்கப்படுகிறது, இது பருவமடைவதற்கு முன்பு நெவார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்கும் முதலாவது வகை திருமணமாகும்.
"பருவமடைவதற்கு முன், குறிப்பாக 5 முதல் 9 வயதுக்கு இடைப்பட்டபெண்கள் சுபர்ணா குமாரின் சிலையாகக் கருதப்படும் பெல் (விளாம்பழம்) ஐ திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் கன்யாதானம் செய்து கொடுக்கிறார்கள்.
நம்பிக்கைகளின் அடிப்படையில், நெவார் அல்லது நியூவா சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது வாழ்நாளில் குறைந்தது மூன்று முறையாவது திருமணம் செய்து கொள்கிறாள். முதலாவது, இளம்பருவத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 'இஹி' அல்லது "பெல்பிபாஹா" முறையில் அவர்கள் 'விளாம்பழத்துடன்' திருமணம் செய்துகொள்கிறார்கள்.
பின்னர் "பஹ்ரா" முறையில் அவர்கள் சூரியனை திருமணம் செய்துகொள்கிறார்கள், இவை அனைத்தும் பருவமடைவதற்கு முன்பே நிகழ்த்தப்படுகிறது.
எங்கள் நெவாரி கலாச்சாரத்தின்படி, ஒரு பெண் தனது வாழ்நாளில் 3 முறை திருமணம் செய்து கொள்கிறாள். முதலில், அவர்கள் நாராயணராகக் கருதப்படும் 'பெல்' (விளாம்பழம்) உடன் திருமணம் செய்துகொள்கிறார்கள், பின்னர் சூரியனுடன் 'குபா' சடங்கிற்கு உட்படுத்தப்படும்போது, கடைசியாக, அவர்கள் ஒரு மனிதனை திருமணம் செய்து கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்கள்.
விஷ்ணு மற்றும் சூரியக் கடவுள்களுடன் திருமணம் செய்து கொள்வதால், ஒரு புதுப் பெண் தனது கணவர் வாழ்க்கையின் பிற்பகுதியில் காலமானாலும் ஒரு விதவையாக கருதப்படுவதில்லை என்று நம்பப்படுகிறது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக