ஞாயிறு, 17 ஜனவரி, 2021

Bigg Boss: பாலாஜியின் ஒருநாள் சம்பளம் வெறும் ரூ.10,000... ஆரிக்கு எவ்வளவு தெரியுமா?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று பார்க்கலாமா?

 விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் ஆரி முதல் இடத்தையும், பாலாஜி முதல் ரன்னர்அப்பாகவும், ரியோ, ரம்யா, சோம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளனர். இந்த ஐவரில் சோம் சற்று நேரத்துக்கு முன்னர் எவிக்ட்டாகி வெளியே வந்துள்ளார்.

ஃபைனல் ரவுண்டுக்கு வந்த இந்த ஐந்து பேர் இன்றைய நாளையும் சேர்த்து 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருக்கிறார்கள். மிகவும் குறைந்த நாள் அந்த வீட்டுக்குள் இருந்தவரென்றால் நடிகை ரேகாதான். முதல் எவிக்‌ஷனிலேயே இவர் வெளியேறி விட்டார்.

சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்ன?


பிக்பாஸ் போட்டியாளர்கள்

முதலில் பெண் போட்டியாளர்களின் சம்பளம் பார்க்கலாம்.

பெண் போட்டியாளர்களில் ரேகா, சனம் ஷெட்டி இருவருக்கும் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் சம்பளம். இவர்கள் இருந்த நாட்களைக் கணக்கிட்டு அதில் வரி பிடித்தம் போக மீதியைப் பெற்றுக்கொண்டார்கள்.

அடுத்து சுசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 80,000 ரூபாய். அர்ச்சனா, ரம்யா பாண்டியன் இருவருக்கும் ரூ. 75,000.

கேப்ரியல்லாவின் ஒருநாள் சம்பளம் ரூ. 70,000. அவர் ஃபைனலில் இருந்து வெளியேற விரும்பிப் பெற்றுக் கொண்ட ஐந்து லட்சம் இதில் எக்ஸ்ட்ரா.

ஷிவானிக்கு ரூ.60,000. நிஷா, சம்யுக்தா, அனிதா சம்பத் மூவருக்கும் ரூ.40,000.

அடுத்ததாக ஆண் போட்டியாளர்களின் சம்பள விபரம்:
ஆரி

ஆண் போட்டியாளர்களில் ஆரிக்குத்தான் அதிக சம்பளம். இவரது ஒருநாள் சம்பளம் ரூ. 85,000. 105 நாட்களுக்குக் கணக்கிட்டு அந்தத் தொகையுடன் டைட்டில் வென்றதற்காக வழங்கப்படும் ஐம்பது லட்சமும் சேர்த்து வழங்கப்படும். மொத்தம் சேரும் தொகையில் வரி பிடித்தம் போக மீதி கையில் கிடைக்கும்.

ஆரிக்கு அடுத்தபடியாக ரமேஷின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை தவிர்த்து நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் விரும்பி வழங்கும் பரிசுப் பொருட்களும் சில போட்டியாளர்களுக்குக் கிடைக்கலாம். அது அந்தச் சூழலைப் பொறுத்தது என்கிறார்கள்.

 vikatan

 

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல