உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு 1957 இல் தொடங்கப்பட்ட இந்த பஸ் சேவை “ஆல்பர்ட்” என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது.பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது. 1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது.
இப்பேருந்து பயணம் லண்டனில் தொடங்கி பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கெரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் நியூ டெல்லி, ஆக்ரா, அலகாபாத், பனாரஸை கடந்து கொல்கத்தாவை சென்றடையும்.
பயணிகளுக்கு தேவையான உணவு, படுக்கை, விசிறிகள், கார்பேட் தரை, ரேடியோ, இசை என சொகுசான வசதியை ஏற்படுத்தி தந்துள்ளனர். பயணத்தின் போது நியூ டெல்லி, டெக்ரான், சால்ஸ்பேர்க், காபூல், இஸ்தான்புல், வியன்னா உள்ளிட்ட நகரங்களில் ஷாப்பிங் செய்ய நாட்கள் ஒதுக்கப்பட்டன.
இது அப்போது...
இது இனி வரப்போகும் சேவை..
(இணையம்)
இது அப்போது...
இது இனி வரப்போகும் சேவை..
(இணையம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக