நோர்வேயில் கொரோனாவை தடுக்க நோர்வே அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானது `எந்தவொரு நிகழ்விலும் 10 பேருக்கு மேல் கூடக் கூடாது' என்பது தான்.
ஆனால் நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் (Erna Solberg) கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, தனது 60-வது பிறந்தநாளைத் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் 13 பேர் கலந்துகொண்டனர். இதனால், அரசின் கட்டுப்பாட்டை பிரதமரே மீறிவிட்டார் என சர்ச்சை கிளம்பியதும், தாமாகவே முன்வந்து மன்னிப்பும் கேட்டார்.
இருந்தபோதிலும், பிரதமர் எர்னா சோல்பெர்க் கொரோனா விதிமுறையை மீறியதற்காக அந்நாட்டு காவல்துறை, வெள்ளிக்கிழமை அன்று 20,000 Norwegian crowns ($2,352)அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இது குறித்து, நார்வேயின் தலைமை காவல் அதிகாரி ஓலே சாவெருட் (Ole saeverud),``சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருப்பதில்லை. சமூகக் கட்டுப்பாடுகள் குறித்த அரசின் விதிகளில், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது சரிதான்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக