வெள்ளி, 25 ஜூன், 2021

அழிக்கப்பட்ட விண்டோஸ் 10 அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்வது எப்படி?


விண்டோஸ் 10 இயங்குதளத்தில் கெஸ்ட் யூசர் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என இருவித யூசர் அக்கவுண்ட்கள் இருக்கின்றன. இதில் ஸ்டான்டர்டு யூசர் அக்கவுண்ட்டினை பயன்படுத்துவது எப்போதும் சிறப்பான ஒன்றாகும். சமயங்களில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது, அவற்றை அழிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.ஒருவேளை அப்படியாகும் பட்சத்தில் அழிக்கப்பட்ட அட்மின் அக்கவுண்ட்டினை ரிக்கவர் செய்வது எப்படி என்பதையும், ஸ்டான்டர்டு யூசர் அக்கவுண்ட்டை உருவாக்குவது மற்றும் புதிய அட்மின் அக்கவுண்ட்டை உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.

மைக்ரோசாஃப்ட் தளத்தில் பில்ட்-இன் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் விண்டோஸ் இல் இருக்கிறது. இதனை அழிக்க முடியாது.

எனினும், இதனை தேடி, திறக்க முடியும்.

அதன்பின் கமாண்ட் பிராம்ப்ட்டை திறக்க வேண்டும்.

சர்ச் பகுதியில் ரன் என தேர்வு செய்தோ ரைட் க்ளிக் செய்தோ பில்ட்-இன் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

இதை கொண்டு ஏற்கனவே உள்ள ஸ்டான்டர்டு அக்கவுண்ட்டினை எடிட் செய்து பெயரை மாற்ற வழி செய்யும்.

இனி புதிய யூசர் அக்கவுண்ட்டினை அட்மினிஸ்ட்ரேட்டர் ரைட்ஸ் மூலம் உருவாக்கி கொள்ள முடியும்.

மேலும் பில்ட் இன் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்யவும் முடியும்.

கமாண்ட் பிராம்ப்ட் ஆப்ஷனை செயல்படுத்த முடியாத பட்சத்தில் ஸ்டார்ட் மெனு சென்று ஷிஃப்ட் பட்டனை அழுத்திப்பிடித்து ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது விண்டோஸ் 10 ரிக்கவரி என்விரான்மென்ட் பூட் ஆகும்.

இனி அட்வான்ஸ்டு ஆப்ஷனில் கமாண்ட் பிராம்ப்ட் தேர்வு செய்து பில்ட் இன் அட்மின் அக்கவுண்ட்டை ஆஃப் செய்ய வேண்டும்.

ஸ்டார்ட் மெனுவில் லோக்கல் செக்யூரிட்டி பாலிசியை தேட வேண்டும். கமாண்ட் பிராம்ப்ட் வேலை செய்யாத பட்சத்தில், அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஸ்டேட்ஸ் எனேபிள் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை எனேபிள் செய்யப்படவில்லை எனில், ஆப்ஷனை டபுள் க்ளிக் செய்து திறக்க வேண்டும். பின் செட்டிங் பகுதியில் எனேபிள் செய்யலாம்.

இந்த அம்சத்தை முயற்சிக்கும் முன், முதலில் எக்ஸ்டெர்னல் டிரைவில் உள்ள தரவுகள் அனைத்தையும் பேக்கப் செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். கம்ப்யூட்டரை ரீபூட் செய்து விண்டோஸ் 10 ரிக்கவரி என்விரான்மென்ட் ஆப்ஷனை திறக்க வேண்டும். மீண்டும் கமாண்ட் பிராம்ப்ட்டை திறந்து, Regedit என பதிவிட வேண்டும். ரெஜிஸ்ட்ரி எடிட்டரை டபுள் க்ளிக் செய்து திறக்க முடியும். இனி ஃபைல் மெனுவை தேர்வு செய்து ஹைவ் லோடு செய்து பெயரை மாற்றலாம். ஃபைல் நேமினை தேர்வு செய்ததும் ஃபைலை திறக்க வேண்டும். இனி ஃபோல்டர் ஸ்டிரக்ச்சர் சென்று FDWord ஃபைலினை க்ளிக் செய்து அதனை திறக்க வேண்டும். கம்ப்யூட்டரை ரிபூட் செய்து புதிய யூசரை அட்மின் ரைட்ஸ் ஆப்ஷனுடன் உருவாக்கி கொள்ளலாம்.

கம்ப்யூட்டரை பேக்கப் எடுத்து முடித்ததும், கம்ப்யூட்டரை ரீசெட் செய்யலாம். அட்வான்ஸ்டு ஸ்டார்ட் அப் ஆப்ஷன்களை பதிவிட விண்டோஸ் கீ மற்றும் 1 க்ளிக் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் ஆப்ஷனில் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்து ரீசெட் செய்ய வேண்டும். இனி அனைத்து விவரங்களையும் நீக்கிவிட்டு, செட்டிங்ஸ்-ஐ மாற்றி சி டிரைவினை அழிக்க வேண்டும். திரையில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றி கம்ப்யூட்டரை ரீசெட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது சரியான மின் இணைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல