வெள்ளி, 25 ஜூன், 2021

உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி நிறுத்துவது?


சாதாரண குரல் அழைப்புகளால் கூட பயனர்கள் தொந்தரவு அடைய விரும்பாத நேரங்கள் என்று சில உள்ளது, குறிப்பாக கேம் விளையாடும்போது, திரைப்படங்கள் பார்க்கும் போது அல்லது நீங்கள் நண்பர்களுடன் வெளியே இருக்கும்போது அல்லது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது என்று பட்டியல் நீளும். சிலர் அழைப்புகள் வருவதை மொத்தமாக விரும்புவதில்லை. இப்படியானவர்களுக்கு எப்படி இன்கம்மிங் கால்களை நிறுத்துவது என்று கற்றுக்கொள்ளலாம்.

இன்கம்மிங் அழைப்புகள் நிறுத்த வேண்டும் என்று கூறியதும், பெரும்பாலானோர் ஃபிலைட் மோடு ஆன் செய்தால் போதும் என்று நினைத்திருப்பீர்கள். ஃபிளைட் மோடு பயன்படுத்தாமல் எப்படி உங்களுக்கு வரும் இன்கம்மிங் அழைப்புகளை நிறுத்துவது என்று பார்ப்போம் .

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'call settings' என்ற அழைப்பு அமைப்புகளுக்குச் செல்லவும்.
 
ஒவ்வொரு சாதனத்திற்கும் இது வேறுபட்டது. பின்னர் call forwarding விருப்பத்தை கிளிக் செய்யவும்.
 
நீங்கள் அதைக் கிளிக் செய்தவுடன், 'always forward', 'forward when busy' மற்றும் 'forward when unanswered' ஆகிய மூன்று விருப்பங்களைக் காண்பீர்கள்.

இதில் always forward என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.

சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட அல்லது இணைப்பு இல்லாத எண்ணை உள்ளிடவும்.

பின்னர், enable பட்டனை கிளிக் செய்க.

இது உங்கள் எண்ணில் உள்ள அனைத்து அழைப்புகளையும் நிறுத்தும்.

எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் மொபைல் டேட்டாவையும் பயன்படுத்தலாம்.

இந்த காரணத்தினால் தான் ஃபிளைட் மோடு ஆக்டிவேட் செய்யும் முறையை பரிந்துரைக்கவில்லை.
 
ஃபிளைட் மோடில் டேட்டா சேவையை நீங்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களின் இன்கம்மிங் அழைப்புகளை நிறுத்த கூடுதல் வழிகள்

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள settings சென்று, 'Sound' என்பதைத் கிளிக் செய்யவும். 'Do Not Disturb' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து Calls என்பதைக் கிளிக் செய்க. நீங்கள் Calls தட்டியதும், பாப்அப் மெனுவிலிருந்து 'Do not allow any calls' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'allow repeat callers' என்பதை நிலை மாற்றுங்கள்.

அதேபோல், நீங்கள் 'கால் பேரிங் (call barring)' முறையையும் பயன்படுத்தலாம். அதற்காக, உங்கள் தொலைபேசி பயன்பாட்டைத் திறந்து, திரையின் மேல் வலது மூலையில் உள்ள 'menu overflow button' என்ற மூன்று புள்ளிகள் கொண்ட விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பொதுவாக Android சாதனங்களுக்கு, பிற சாதனங்களுக்கு இது வேறுபட்டது. பின்னர் Settings கிளிக் செய்து, Calls என்பதைக் கிளிக் செய்யவும். அழைப்புகள் மெனுவுக்குள், 'கால் பேரிங்' விருப்பத்தை கிளிக் செய்யவும். உள்வரும் அனைத்து அழைப்புகளையும் நிறுத்த all incoming calls கிளிக் செய்து பாஸ்வோர்டை உள்ளிடவும். பெரும்பாலும் 0000 அல்லது 1234 என்பது தான் பாஸ்வோர்டாக இருக்கும். பின்னர் 'ஆன்' என்பதை கிளிக் செய்து முடிக்கவும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல