ஞாயிறு, 18 ஜூலை, 2021

பாலியல் வல்லுறவு: ஓர் எழுத்து மாறியதால் தண்டனையில் தப்பித்த விநோதம் - திருத்தி எழுதிய உயர் நீதிமன்றம்


தமிழ்நாட்டில் குழந்தை பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றில் 'செமன் (semen)' என ஆங்கிலத்தில் எழுத வேண்டிய இடத்தில் 'செம்மண்' (Semman) என்று பிழையாகப் பதிவு செய்ததால் குற்றம்சாட்டப்பட்ட நபர் தண்டனையில் இருந்து தப்பித்த விநோதம் அம்பலமாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தபோது இந்தப் பிழை வெளியானது மட்டுமல்லாமல் தண்டனையில் இருந்து தப்பித்தவருக்கு தண்டனையும் கிடைத்துள்ளது.
 
என்ன நடந்தது?
 
திருவாரூர் மாவட்டம், வடுவூர் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட ஒரு பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தையை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரகாஷ் என்ற நபரிடம் கொடுத்துவிட்டு தாய், கடைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய தாயிடம் குழந்தை சில விஷயங்களை தெரிவித்துள்ளது. இதனால் பதற்றமடைந்த தாய், ஆடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளார். அப்போது குழந்தைக்குப் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துள்ளதை அறிந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு நடந்த சோதனையில் பாலியல் துன்புறுத்தல் நடந்தது உறுதியாகவே, உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக திருவாரூர் பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்தக் சம்பவம் தொடர்பாக, காவல்துறை பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையில், குழந்தையின் பெண்ணுறுப்பில் ஆங்கிலத்தில் Semen என குறிப்பிடப்படும் விந்து திரவம் இருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செமன் செம்மண் ஆனது எப்படி?

ஆனால், விசாரணை ஆவணத்தில் semen என்பது செம்மண் என படிக்கும் வகையில் Semman என குறிப்பிடப்பட்டுவிட்டது. இதை அடிப்படையாக வைத்து குழந்தையின் ஆடையில் செம்மண் கரை படிந்திருந்தாக எடுத்துக் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வாதிட்டதால், பிரகாஷை நீதிமன்றம் விடுதலை செய்தது.
வல்லுறவுக்கு எதிரான குரல்

இதனை எதிர்த்து குழந்தையின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பளித்த நீதிபதி, "போக்சோ சட்டத்தின் நோக்கம் மற்றும் எல்லைகளை உணராமல் கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தை எவ்வாறு சாட்சியமளிக்க முடியும் என்பதை உணராமல் இந்த வழக்கை விசாரித்துள்ளனர். மேலும், தாயின் மனநிலையையும் அவர்கள் உணரவில்லை" என நீதிபதி குறிப்பிட்டார்.

திருத்தி எழுதிய தீர்ப்பு

மேலும், ஆங்கில சொல்லை தமிழில் படித்த வகையில் வழக்கின் போக்கையே மாற்றிவிட்டனர். தங்களுக்கான அதிகாரத்தின்படி, வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறையிடம் இருந்து பெற்று முழுமையாக மனதை செலுத்தி விசாரணை நீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றமும், சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக வழங்கிவிட்டது. இதுபோன்ற வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்' எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

தொடர்ந்து, இரண்டரை வயது குழந்தைக்குப் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டதால், பிரகாஷுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி. பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தைக்கு மாநில அரசு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
 
என்ன பிரச்சனை? ஏன் இப்படி நடக்கிறது?

``போக்சோ வழக்குகளில் தட்டச்சு பிழையால் குற்றவாளிகள் தப்பிக்க முடியுமா?" என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

"திரூவாரூர் போக்சோ வழக்கில் தட்டச்சு பிழை காரணமாக, குற்றவாளியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

தவிர, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையை மறு விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியுள்ளனர். குழந்தையின் தாயையும் சிரமப்படுத்தியுள்ளனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் ஒரு முறைதான் விசாரணை நடத்த வேண்டும். இதில் போலீசாரின் அணுகுமுறை சரியில்லை என்றும் நீதிமன்றம் சாடியுள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய தேவநேயன், "இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பது மிகவும் கொடுமையான விஷயம். அந்த ஒரு விஷயத்தை விட்டுவிட்டு மற்ற அனைத்தையும் இந்த வழக்கில் கவனித்துள்ளனர். குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் எந்த அளவுக்கு அக்கறையோடு செயல்பட்டுள்ளனர் என்பதையும் இதன்மூலம் அறியலாம்.

2014ல் தேனி மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு 3 பேரால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017ம் ஆண்டு 3 பேருக்கும் தேனி பெண்கள் நீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுத்தது.

2019ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அந்த மூன்று பேரையும் விடுதலை செய்தது. காரணம், "இந்த வழக்கில் வழக்கு புத்தகத்தை போலீசார் சரியாகக் கடைபிடிக்கவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கை நான் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன்.



தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டில் 1,583 போக்சோ வழக்குகள் பதிவானதில் 193 வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், 213 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், ஆறு மாதத்துக்குள் போக்சோ வழக்குகளில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. 1,583 வழக்குகள் எங்கே.. 213 பேர் தண்டிக்கப்பட்டது எங்கே? இப்படிப்பட்ட நிலைமைதான் தமிழ்நாட்டில் உள்ளது.

சென்னைக்கு அருகில் இளைஞர் ஒருவர் 7 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து எரித்துவிட்டார். அந்த நபருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. காரணம், `90 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை' எனக் கூறி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு. ஊரறிந்த வழக்காகவும் இருந்தது. வெளியில் வந்த அந்த நபர், தனது தாயாரையும் படுகொலை செய்ததாக வழக்குப் பதிவானது.

எந்த நோக்கத்துக்காக போக்சோ பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளதோ, அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறாமல் இருப்பது பல்வேறு வழக்குகளில் இருந்து தெரிய வருகிறது.

பல இடங்களில் அந்தக் குழந்தையையே குற்றவாளியாக்கி தப்பித்துக் கொள்வதும் நடக்கிறது. காவல்நிலையங்களில் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்கு `குழந்தைகள் நல காவல் அலுவலர்' என்ற ஒருவர் இருக்க வேண்டும்.

எத்தனைக் காவல்நிலையங்களில் இந்தப் பதவிக்கு ஆட்கள் உள்ளனர்? அதனை சரியாக ஆய்வு செய்வதும் கிடையாது. தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இவற்றில் அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும்" என்றார் தேவநேயன்.
 
 ஆ.விஜயானந்த்
பிபிசி தமிழுக்காக
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல