திங்கள், 6 செப்டம்பர், 2021

'சர்வைவர்': அர்ஜுன் வழங்கும் நிகழ்ச்சியில் என்ன மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்?

சர்வைவர் விளம்பர காட்சி
வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு, அந்த சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எப்போதும் பார்வையாளர்களிடையே வரவேற்பை பெறத் தவறியதில்லை.

அந்த வகையில், உலக அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான 'சர்வைவர்' தமிழில் 'ஜீ' (Zee) தமிழ் தொலைக்காட்சியில் இந்த மாதம் 12ம் தேதி முதல் இரவு 9.30க்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.

நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகிறார்.

பொதுவாக, இதுபோன்று உலக புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை தமிழில் மீளுருவாக்கம் செய்யுபோது அதற்கேற்றாற்போல, சில பல மாற்றங்களை செய்வார்கள். அந்த வகையில், தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும்? என்ன மாதிரியான சவால்களை போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள்?

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் முதல் எட்டு பேரை தொலைக்காட்சி தரப்பு யாரென்று அறிவித்து இருக்கிறார்கள். அதற்கு முன்பு 'சர்வைவர்' நிகழ்ச்சி குறித்தும், அது எங்கு தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
 
 எங்கு ஆரம்பிக்கப்பட்டது 'சர்வைவர்'?
சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கும் நடிகர் அர்ஜூன்
 
புகழ்பெற்ற ஸ்வீடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'எக்ஸ்பிடிஷன் ராபின்சன்', சார்லி பார்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்துதான் 'சர்வைவர்' நிகழ்ச்சி முதன் முதலாக 2000-ம் வருடம் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது.

அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட சீசன்களை கடந்திருக்கிறது இந்த 'சர்வைவர்'.

இருபது வருடங்களுக்கும் மேல் உலகளவில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றாலும் மனிதர்களை ஓரிடத்தில் வாழ்வாதாரத்திற்காக கொண்டு சேர்க்கும் போது அங்கு வெளிப்படும் குணங்கள், உண்மைத்தன்மை, மனித மனங்களின் பிரதிபலிப்பு ஆகியவற்றிற்காக இந்த நிகழ்ச்சி புகழ்பெற்றது.

'கான்செப்ட்' என்ன?

சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்களை களம் இறக்கி விடுவார்கள்.

இந்த 18 போட்டியாளர்களும் இரண்டு குழுக்களாக பிரிந்து, அடர்ந்த காட்டுக்குள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.

இதில், தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், நெருப்பு என அடிப்படையான தேவைகளையும் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த போட்டியில் போட்டியாளர்களுக்குள் தங்களுக்குள்ளே 'சர்வைவர்' யார் என தேர்ந்தெடுக்கவும், நீக்கவும் ஓட்டுகள் வழங்க அனுமதியளிக்கப்படும். போட்டியில் கொடுக்கப்படும் கடினமான சவால்களை சமாளித்து இறுதியில் மிஞ்சும் ஒருவரே நிகழ்ச்சியின் 'சர்வைவர்'.

கடினமான சவால்கள்
சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெறும் நடிகை விஜயலட்சுமி

முன்பே சொன்னது போல, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து இரண்டு தனித்தீவில் விட்டு விடுவார்கள். நடுவில் இருக்கும் மூன்றாவது தீவில் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் Task-க்காக வருவார்கள்.

தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் இருக்கும், ஜான்சிபார் தீவுகளில் நடக்கிறது. மொத்தம் 90 நாட்கள் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சவால்களோடு சேர்த்து, 90 நாட்கள் அங்கு 'சர்வைவ்' ஆவதற்கும் கடினமான சூழலே இருக்கும்.

மண் தரையில் படுப்பது, குடிநீர், உணவு, காட்டுக்குள் இருப்பிடம், குளிப்பது, பல் விளக்குவது என அன்றாட செயல்கள் அனைத்திற்குமே போட்டியாளர்கள் போராட வேண்டும். இரண்டு குழுக்களும் அணி மனப்பான்மையோடு செயல்படாது குழுக்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து வெளியே அனுப்புவது போல 'சர்வைவர்' நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த சவால்களை எல்லாம் சமாளித்து இறுதியில் நிகழ்ச்சியில் எஞ்சும் ஒருவரே 'சர்வைவர்' வெற்றி பட்டத்தை அடைவார். அதோடு சேர்த்து, பரிசுத்தொகையும் வழங்கப்படும். தமிழில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' நிகழ்ச்சி வெற்றியாளர்களுக்கு ஒரு கோடி என ஜீதமிழ் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு ஆப்பிரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட 'சர்வைவர்' நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களின் உணவுக்காகவே நடத்தப்பட்ட 'Task' எல்லாம் அங்கு புகழ் பெற்றது. சர்வைவல்க்காக எறும்புகளை உண்பது, மாட்டு மூளை, முட்டையின் ஓடுகளை தின்பது, தண்ணீர் பூச்சிகளை தின்பது என விதவிதமான சவால்கள் போட்டியாளர்களுக்கு தரப்படும்.

இதைத் தாண்டி, தீவுகளில் இருக்கும் பவளப்பாறைகளை சேதப்படுத்தியது, போட்டியாளர்களுக்குள் நடக்கும் சண்டைகள், தகாத வார்த்தைகள் உபயோகித்தததால் வெளியேற்றம் என 'சர்வைவர்' நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

இங்கு போட்டியாளர்கள் யார் யார்?

நடிகர் சிலம்பரசன், விஷால் என முன்னணி நடிகர்கள் பலரிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதன் பின்பே நடிகர் அர்ஜூன் நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

ஆனால், ஜீ தமிழ் தொலைக்காட்சி தரப்பு இது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அதேபோல, போட்டியாளர்கள் பட்டியலில், வனிதா விஜயகுமார், அனிகா சுரேந்திரன், வித்யு லேகா, ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரலங்கள் பெயர்கள் அடிபட்டது.

இதில் அனிகா சுரேந்திரன் தான் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் இல்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இதில் முதல் எட்டு நபர்களான நடிகர் நந்தா, விக்ராந்த், விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி, ஸ்ஷ்ருடி டாங்கே, உமாபதி, பெசண்ட் ரவி ஆகியோர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் சிலர் என அதிகாரப்பூர்வமாக ஜீ தமிழ் அறிவித்துள்ளது. மீதமுள்ள போட்டியாளர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழில் என்னென்ன மாற்றங்கள்?

நடிகர் அர்ஜூன்
 
தமிழுக்கு ஏற்றாற்போல என்னென்ன மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பது குறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'சர்வைவர்' நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பிடம் பேசினோம்.

'சர்வைவர்' நிகழ்ச்சி உலக அளவில் புகழ் பெற்ற ஒன்று என்பதால் அந்த நிகழ்ச்சியின் அடிப்படையை மாற்றாமல் கடினமான சவால்களைதான் போட்டியாளர்களுக்கு தர இருப்பதாக கூறினார்கள்.

அதேபோல, போட்டியாளர்கள் இருபாலரையும் சரிசமமான எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், அவர்கள் தவிர்த்து, தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் சர்வதேச அளவிலான வேறு சில போட்டியாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும், "போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் மற்றவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து அவர் நிகழ்ச்சியில் தொடர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதையும் முடிவு செய்வார்கள்" என்கின்றனர். 

ச. ஆனந்தப்பிரியா
பிபிசி தமிழுக்காக

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல