மெக்கா 1979 - சௌதி வரலாற்றை மாற்றிய மசூதி முற்றுகை
ஒரு மத போதகரும் அவருடைய சீடர்களும் மெக்காவில் மசூதியை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு, இஸ்லாமியர்களின் புனித இடத்தை கொலைக்களமாக மாற்றி நாற்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்த முற்றுகை, முஸ்லிம் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, சௌதி அரேபிய வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது என்று பிபிசியின் எலி மெல்க்கி கூறுகிறார்.