டூப்ளிகேட் பைல் ஒன்று தயாரிக்க
பைல் ஒன்றின் நகலை இன்னொரு டிரைவில் பதிந்து வைப்பது நமக்கு நல்லது. ஓர் இடத்தில் உள்ளது அழிந்து போனால் இன்னொரு இடத்தில் உள்ளதைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் இது போல டூப்ளிகேட் பைல்களைத் தயாரிக்க பல வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
டெஸ்க் டாப் அல்லது போல்டரில் உங்களுடைய கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறு டெஸ்க்டாப்பின் இன்னொரு இடத்திற்கு அல்லது இன்னொரு விண்டோவிற்கு இழுத்துச் செல்லுங்கள். இப்போது அந்த பைலின் ஐகானின் நகல் இழுத்துச் செல்லப்படுவதனைப் பார்க்கலாம். அதில் ஒரு கூட்டல் அடையாளம் இருப்பதனைக் காணலாம். இது பைலுக்கான நகல் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது என்பதனைக் குறிக்கிறது.
இப்போது மவுஸ் பட்டனை விட்டுவிட்டால் அந்த இடத்தில் பைல் அல்லது போல்டரின் இன்னொரு நகல் இருப்பதனைக் காணலாம். அதன் பெயர் இருக்கும் இடத்தில் Copy of என்ற முன் ஒட்டுடன் பைலின் பெயர் இருப்பதனைக் காணலாம். இதனை நீங்கள் வேறு பெயரில் இருக்க வேண்டும் என எண்ணினால் அதன் பெயரை மாற்றிக் கொள்ளலாம். இந்த செயல்பாட்டிற்கு இன்னொரு வழியும் உள்ளது. பைலின் பெயரில் கர்சரை வைத்து மவுஸின் வலது பக்கத்தினைக் கிளிக் செய்து அழுத்திப் பிடிக்கவும். பிடித்தவாறே அதனை அப்படியே இழுத்துச் சென்று எந்த இன்னொரு இடத்தில் அதாவது டிரைவில் அல்லது போல்டரில் இந்த பைலின் இன்னொரு நகல் வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த இடத்திற்குக் கொண்டு சென்று மவுஸை அழுத்துவதனை விட்டுவிடவும். இப்போது ஒரு சிறிய கட்டமாக மெனு ஒன்று தோன்றும். அதில் Copy Here, Move here, Create Shortcut here, Cancel என்ற நான்கு பிரிவுகள் இருக்கும். முதல் கட்டத்தினைக் (Copy Here) கிளிக் செய்தால் பைலின் நகல் ஒன்று நீங்கள் இருக்கும் போல்டரில் அல்லது டைரக்டரியில் கிடைக்கும். இரண்டாவது (Move here) கட்டத்தினைத் தேர்ந்தெடுத்தால் இங்கிருக்கும் பைல் அங்கு சென்று பதியப்படும். மூன்றாவது கட்டத்தினைத் (Create Shortcut here) தேர்ந்தெடுத்தால் பைலுக்கான ஷார்ட் கட் எனப்படும் சுருக்கு வழி ஏற்படுத்தப்படும். இதெல்லாம் வேண்டாம் ஆளை விடுங்க என்று எண்ணுகிறீர்களா. கடைசியில் உள்ள Cancel என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.
வியாழன், 28 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக