வியாழன், 28 ஜனவரி, 2010

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பேட்டரிகளின் வகைகள்

கம்ப்யூட்டர் மின்சாரத்தில் யு.பி.எஸ். போன்ற சாதனங்களின் துணை கொண்டு இயங்கினாலும் அதனுள் சில பேட்டரிகள் இருக்கின்றன. அவை எவை? என்ன வகை என்று பார்க்கலாம். #

கம்ப்யூட்டர் பேட்டரிகளை மூன்று வகைப் படுத்தலாம். பேக்கப் பேட்டரி (backup battery), பிரிட்ஜ் பேட்டரி (bridge battery), மற்றும் மெயின் பேட்டரி (main battery). பேக்கப் பேட்டரியை சீமாஸ் பேட்டரி (CMOS battery) என்றும் சொல்கிறோம். கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்கிற செட்டிங்குகளை எல்லாம் இந்த பேட்டரிதான் உயிரோடு வைத்திருக்க உதவுகிறது. கம்ப்யூட்டரை இயங்காமல் மின்சாரத்தை நிறுத்தி வைத்த போதும் ஏற்கனவே உள்ளீடு செய்த தகவல்களை மெமரியில் வைத்திருக்க உதவுகிறது. நேரம், தேதி போன்றவற்றையும் இதுதான் நினைவில் வைத்திருக்க உதவுகிறது. அதனால் தான் இந்த தகவல்களை எல்லாம் ஒவ்வொரு முறை ரீபூட் செய்திடும்போதும் நாம் கம்ப்யூட்டருக்குள் இட வேண்டியதில்லை. பிரிட்ஜ் பேட்டரி என்பது லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படுவது.

மெயின் பேட்டரிக்குப் பதிலாக இதனைக் கம்ப்யூட்டரில் வைத்துப் பயனபடுத்துகிறோம். இதனைப் பயன்படுத்தி மெயின் பேட்டரி முழுவதுமாகச் செயல் இழக்கவிடாமல் வைத்திருக்கலாம். மெயின் பேட்டரியும் லேப் டாப் கம்ப்யூட்டரில்தான் பயன்படுத்தப்படுகிறது. லேப் டாப் கம்ப்யூட்டரை மெயின் பிளக்கில் இணைத்துப் பயன்படுத்தாத போது அதற்குத் தேவையான மின்சக்தியை இந்த வகை பேட்டரிகள் தான் தருகின்றன.

இனி இந்த பேட்டரிகளில் திறன் அடிப்படையில், அதன் உட்பொருள் அடிப்படையில் உள்ள சில வகைகளை அறியலாம். இவை LIION, NICAD, LIPOLYMER, NIMH and SLA என வகைப்படும். முதல் வகையான LIION என்பது Lithium Ion என்பதன் சுருக்கமாகும். பேட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் பயன்படுத்தப்படுகையில் உயர் அழுத்த மின்சக்தி தேவைப்படும்போது இந்த வகை பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஒரு பாதுகாப்பு சர்க்யூட் (protector circuit) தேவைப்படும். இவை சற்று விலை கூடுதலானவை.

அடுத்ததாக NICAD என்பது Nickel Cadmium ஐக் குறிக்கும். இவ்வகை பேட்டரிகள் தான் கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பேசப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் ஆகும். நீண்ட நாள் உழைக்கும் வகை வேண்டும்போதும் அதிக மின்சக்தி ஓட்டம் தேவைப்படுகையிலும் இவ்வகை பேட்டரிகளே நாடப்படுகின்றன. இவற்றின் விலையும் வாங்கக் கூடிய வகையில் இருக்கும்.

NIMH என்பது Nickel Metal Hydride ஐக் குறிக்கும். இது நிக்கல் கேட்மியம் பேட்டரிகளைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதனுடைய சைக்கிள் லைப் நிக்கல் கேட்மியம் பேட்டரியைக் காட்டிலும் குறைவானதாகும். குறைவான கரண்ட் லோட் கொடுக்கும்.

அடுத்த வகை SLA எனப்படும் Sealed Lead Acid Battery பேட்டரிகளாகும். அதிகமான மின்சக்தி தேவைப்படுகையில் இவ்வகை பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இது அதிக எடையுடையதாக இருக்கும். அடுத்தது லித்தியம் பாலிமர் பேட்டரி. இதனை LIPOLYMER என அழைக்கிறார்கள். இவை LIION வகை பேட்டரி வகையின் குறைந்த விலை பேட்டரியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல