விடியோ கேம்ஸ் விளையாட தனியாக விடியோ கேம் விளையாடும் சாதனம் தேவையில்லை. கம்ப்யூட்டரிலேயே அருமையாக விளையாடலாம். அதற்கான புரோகிராம்களை அமைத்து இயக்கினாலே போதும். ஆனால் பலரும் இதற்கு அடிமை ஆகிறார்கள். பிறரின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள், பெண் நண்பர்கள், மனைவிகள் நிச்சயமாய் நாம் இந்த விளையாட்டுக்களை விளையாடுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் நாம் அவர்களையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் மறக்கிறோம் அல்லவா? ஆனால் எதிலும் நன்மைகளும் தீமைகளும் இருப்பது போல இவ்வகை விளையாட்டுக் களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. அவற்றை இங்கு காணலாம். முதலில் நன்மைகளைக் காணலாம்.
1. மன அழுத்தக் குறைவு : நம்மில் மன அழுத்தம் ஏற்படாவதர்களே இல்லை எனலாம். ஏதேனும் ஒரு செயல் நம்மை அதிகம் சிந்திக்க வைத்து நம்மை அழுத்திக் கொண்டே தான் இருக்கும். இந்தச் சூழ்நிலையில் கம்ப்யூட்டருடனே வரும் டெட்ரிஸ் மற்றும் மைன்ஸ்வீப்பர் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது நம் மன அழுத்தத்தினைக் குறைக்கும். விளையாட்டுக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நம் திறமையைச் சோதிப்பதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம் மன அழுத்தம் சிறிது சிறிதாக விலகத் தொடங்கும்.
2. லாஜிக் திறன் வளர்ச்சி: அநேகமாக அனைத்து விளையாட்டுக்களும் நம் சிந்தனையை முறைப் படுத்துகின்றன. இந்நாளைய கல்வி முறை கற்றுக் கொடுக்க மறந்த திறன்களில் இதுவும் ஒன்று. தர்க்க ரீதியான சிந்தனை யை வளர்த்துக் கொள்வது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கம்ப்யூட்டர் மற்றும் விடியோ விளையாட்டுக்கள் இதனை வளர்க்கின்றன.
3. விரைந்து முடிவெடுக்கும் திறன் : தர்க்க ரீதியான சிந்தனை என்பது தேவையான ஒன்று தான். ஆனால் இது நேரத்தை வளர்த்து சில நேரங்களில் நம்மை மிக மெதுவாகச் செயல்பட வைத்திடும். நமக்கு வேகமான சிந்தனைத் திறன் அவசியம் தேவைப்படுகிறது. இதனால் நாம் விரைவாக சில முடிவுகளை எடுக்க முடியும். பெரும்பாலான விளையாட்டுக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய செயல்களைப் பட்டியல் படுத்தி நம்மை விரைவாக முடிவெடுத்து செயல்பட வைக்கின்றன. எனவே கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் இந்த விரைவாக முடிவெடுக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.
பாதகமான விளைவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஒரு சிலவற்றைப் பட்டியலிடலாம். கம்ப்யூட்டரை வேறு சில கணிக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணம் மறைந்துவிடும். எப்போதும் விளையாட்டுக்களையே இயக்கி விளையாடச் சொல்லும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அலுவலகத்தினை விட்டுச் செல்கையில் தன் மேஜையில் உள்ள கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு விளையாட்டினை அரை மணி விளையாடிவிட்டுத்தான் செல்கிறார். ஏறத்தாழ அடிமை ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எதற்கு கம்ப்யூட்டரை வாங்கினோமோ அந்த நோக்கம் போய் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் வந்துவிடும். இதனால் கல்வி கற்றல், ஆய்வு மேற்கொள்ளல் மற்றும் அலுவலகப் பணிகளை இயக்குதல் ஆகியவற்றிற்கென கம்ப்யூட்டர் வாங்கியவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பின் தங்கும் நிலை ஏற்படும். குறிப்பாக மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுக்கும் அவர்களுடைய பெற்றோர்கள் இதனைக் கண்காணிக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாட் டுக்களை விளையாடினால் முதலில் அவர்களைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பின்னர் அவர்களின் விளையாடும் நேரம் அதிகரித்தால் கொஞ்சம் கொஞ்சமாக எச்சரித்து அவர்களை அப்பழக்கத் திலிருந்து விலக்க வேண்டும். அலுவலகத்தில் ஊழியர்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த எச்சரிக்கை நடவடிக்கையைச் சிறிது தீவிரமாகவே மேற்கொண்டு பணி நேரத்தில் யாரும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களில் ஈடுபடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களும் கத்தியைக் கையாள்வது போன்ற ஒரு செயலாகத்தான் தெரியும். கவனமாக நமக்குத் தேவையான அளவில் கையாண்டுவிட்டு பின்னர் கத்தியைப் பாதுகாப்பாக வைத்துவிடுவது போல விளையாட்டுக்களை ஓய்விற்காகவும் புத்துணர்ச்சி பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வியாழன், 28 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக