வேர்டில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். திடீரென்று ஏதேனும் ஓர் இடத்தில் இந்த இரண்டு செல்களையும் பிரித்துக் காட்டுவதற்குப் பதிலாக இணைந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? ஆங்கிலத்தில் இதைத்தானே மெர்ஜ் செல் என்று கூறுகிறார்கள். எப்படி இந்த செல்களை மட்டும் இணைப்பது? என்று யோசிக்கிறீர்களா? அதே போல ஏதேனும் ஒரு செல்லை சிறு பிரிவுகளாக அமைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? இதை ஸ்பிளிட் செல் என்றல்லவா சொல்கிறோம். ஆம் இவற்றை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம். படத்தில் பாருங்கள். மூன்று செல்களாக இருவாக்கிலும் முதலில் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாகக் கீழே ஒரு வரிசையில் உள்ள மூன்று செல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் வளதுபுறம் பாருங்கள். மூன்றாவது வரிசையில் உள்ள ஒரு செல் இரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மெர்ஜ் மற்றும் ஸ்பிளிட் செயல்பாடுகளை மேற்கொள்ள என்ன கட்டளைகள் கொடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
முதலில் செல்களை இணைப்பது, (மெர்ஜ் செய்வது) எப்படி என்று பார்ப்போம். இங்கு இணைப்பது என்பது இரண்டு அல்லது அதற்கும் மேலே உள்ள செல்களின் இடையே உள்ள கோடுகளை எடுத்து ஒரே பெரிய செல்லாக அமைப்பது. இதற்கு பெரிய கட்டளைகள் எல்லாம் வேண்டாம். நம்புங்கள். இரண்டு மவுஸ் கிளிக்குகளில் மேற்கொள்ளலாம். முதலில் எந்த இரு செல்களை மெர்ஜ் செய்திட வேண்டுமோ அவற்றை செலக்ட் செய்திடவும். மவுஸ் பட்டனை அழுத்திப் பிடித்து தேவையான செல்கள் செலக்ட் ஆகும் வரை வைத்திருந்து பின் விடுவிக்கவும். இப்போது அந்த செல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். பின் செய்ய வேண்டிய வேலைக்கு இரு வழிகள் உள்ளன. Tables and Borders toolbar என்ற டூல் பாருக்குச் செல்லுங்கள். இதில் உள்ள Merge button என்பதனைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது டேபிள் (Table) மெனு சென்று (Merge Cells) என்ற ஆப்ஷனை மவுஸால் தட்டவும். அல்லது டேபிள் மீதாக ரைட் கிளிக் செய்து அதில் Merge Cells என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது பல செல்கள் ஒன்றாக இணைந்து ஒரே கட்டமாக ஆவதனைப் பார்க்கலாம்.
இனி அடுத்து ஸ்பிளிட் செய்வது குறித்துப் பார்ப்போம். மெர்ஜ் செல் என்ற செயல்முறைக்கு நேர் எதிரானதுதான் ஸ்பிளிட் செய்வது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பிரித்து அமைப்பதுதான் ஸ்பிளிட் செல் ஆகும். இதில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்பிளிட் ஆகும் போது சில வேளைகளில் டேபிள் பெரிதாகும். ஏனென்றால் ஒரு செல் குறைந்த பட்சம் ஓர் அளவில் இருக்க வேண்டும். பிரிக்க வேண்டிய செல்களை முன்பு கூறியபடி செலக்ட் செய்திடவும். அதன்பின் Split Cells என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கும் டேபிள் மெனு சென்று Split Cells ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Split Cells மீதாகக் கிளிக் செய்திடவும். இப்போது ஸ்பிளிட் செல் விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள செல்லின் உள்ளாக எத்தனை படுக்கை வரிசை (number of rows) மற்றும் நெட்டு வரிசை (number of columns) இருக்க வேண்டும் என்பதனை இடுக. பிறகு அந்தக் கட்டத்தில் ஓகே கிளிக் செய்திடவும்.
நேரடியாக பெரிய எழுத்துக்கள் கிடைக்க
வேர்ட் தொகுப்பில் ஆங்கிலச் சொல்லின் அனைத்து எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களிலோ, அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்துடனோ வேண்டும் என்றால் அதனைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் மற்றும் எப்3 கீகளை அழுத்துகிறோம். இது நமக்கு மூன்று ஆப்ஷன்களைத் தருகிறது. முற்றிலும் சிறிய எழுத்துக்கள், முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்து மற்றும் அனைத்தும் பெரிய எழுத்து. எனக்கு இந்த சுழற்சி எல்லாம் வேண்டாம்.
முதல் முயற்சியிலேயே அனைத்து எழுத்துக்களும் பெரிய எழுத்துக்களில் வேண்டும் என்றால் என எண்ணுபவர்களுக்கு ஒரு சுருக்க வழி உள்ளது. மாற்ற வேண்டிய சொல்லில் கொண்டு போய் உங்கள் கர்சரை நிறுத்துங்கள். அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. அதன் பின் கண்ட்ரோல் + ஷிப்ட் +ஏ (Ctrl + Shift + A) அழுத்தவும். நீங்கள் விரும்பியபடி அனைத்து எழுத்துக்களும் பெரிய எழுத்துக்களாக அமையும். மீண்டும் அதே போல கீகளை அழுத்த பழைய நிலைக்குத் திரும்பும்.
ஒரு சொல் என்றால் இதே போல் செயல்படலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் எனில் என்ன செய்திட வேண்டும்? அப்போது சொற்களை செலக்ட் செய்தே ஆக வேண்டும். தேர்ந்தெடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் கர்சரைக் கொண்டு சென்று வைத்துப் பின் Ctrl + Shift + A கீகளை அழுத்த வேண்டும். கேப்பிடல் லெட்டர்களில் தலைப்பு மற்றும் பெயர்களை அமைக்க விரும்புவர்களுக்கு இது ஒரு நல்ல வழி !!
வியாழன், 28 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக