திங்கள், 25 ஜனவரி, 2010

யாழ் நினைவுச் சின்னங்களாக நிற்கும் நடுகற்கள் (பாகம் 3)

யாழ்ப்பாணக் கோட்டையை அடுத்த நாம் தரிசிக்க வேண்டிய இடம் பொதுசன நூல் நிலையமாகும். யாழ்ப்பாணக் கோட்டைக்குக் கிழக்கே கம்பீரமாக இம்மாடிக் கட்டடம் காணப்படுகின்றது. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் வரலாற்றில் யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது. விலை மதிக்க முடியாத பல நூல்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. உலகில் எங்கும் பெறமுடியாத கையெழுத்துப் பிரதிகளையும் பனையோலை ஏடுகளையும் கொண்டிருந்தது. 1981 ஆம் ஆண்டில் 99000 அறிவு நூல்களை ஒருங்கே கொண்டிருந்தது.


யாழ்ப்பாணப் பெருமக்கள் பலர் ஆரம்பத்தில் ஒன்றுசேர்ந்து 1934 ஆகஸ்ட் 1ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள மின்சார நிலையத்துக்கு எதிராகவுள்ள கடைகளில் ஒன்றினை வாடகைக்கு எடுத்து ஒரு வாசிகசாலை ஒன்றினை ஆரம்பித்தார்கள். பலர் கூடி வாசித்தார்கள். இதுவே முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வாசிகசாலை 1935 ஆம் ஆண்டு கோலாகலமாக உள்ளூராட்சி சபையான யாழ்ப்பாணத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த வாசிகசாலையை முதலியார் சி. இராசநாயகம் முகாமையாளர் செல்லப்பா ஆகியோர் கையளித்தனர்.

உள்ளூராட்சி மன்றத்தின் தலைவராகவிருந்த திரு. நல்லையா இவ்வாசிக சாலையைப் பொறுப்பெடுத்தார். அன்று அவ்வாசிகசாலையில் 844 நூல்கள் இருந்தன. பெரியகடையில் இயங்கிய வாசிகசாலை இடம் போதாமையால் பறங்கித் தெருவிலுள்ள கடையொன்றுக்கு மாறியது. அங்கும் இடவசதி போதாமையால் வாடி விட்டிற்கு அருகிலுள்ள மழவராயர் என்பவரின் மாடி வீட்டிற்கு மாறியது. இங்கு விசாலமான இடவசதி கிடைத்தது. இந்நூலகத்தின் முதலாவது நூலகராக இராசரெத்தினம் என்பவர் கடமையாற்றினார். பன்னிரண்டு ஆண்டுகள் இவர் கடமை ஆற்றினார். அதன் பின்னர் 1947 இல் க. நாகரெத்தினம் என்பவர் நூலகராகப் பணியாற்றினார்.

ஐசக் தம்பையா, நாயன்மார்கட்டு வைத்தியர் இராமநாதன், நல்லூர் ஞானப்பிரகாசர், ந. சி. கந்தையாபிள்ளை, ரி. எச். சுப்பையா, எம். பி. வன்னியசிங்கம், முதலியார் குலசபாநாதன், உள்ளூராட்சி அமைச்சர் திருச்செல்வம் மற்றும் சமய தாபனங்கள் இந்நுலகத்துக்கு ஏராளமான நூல்களை வழங்கினர். சுதந்திர இலங்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபையானது அதன் மேயராக சாம் சபாபதி வந்தார். அவர் இந்த நூலகத்தைப் புதிதாக ஒரு கட்டடத்தில் அமைக்க விரும்பினார். அவர் எண்ணம் நிறைவுபெற்றது. 1952 இல் யாழ்ப்பாண மத்திய நூலக சபை எனும் அளுநர் சபை ஆரம்பிக்கப்பட்டது.

வீரசிங்கா, லோங்பிதா, பிரித்தானியர் ஸ்தானிகர் செசிங் சையெல், அமெரிக்க ஸ்தானிகர் பிலிப் குறோஸ், இந்திய அதிகாரி சித்தாச்சாரி, நகர பிதா ஆகியோர் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை 1954 இல் இட்டனர். யாழ்ப்பாண பொது சன நூலகக் கட்டட வேலைகள் நடைபெற்றன. 1956 ஆம் ஆண்டு முதலாவது தளத்தோடு நகர பிதா அல்பிரெட் துரையப்பாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திரு. இ. வே. பாக்கியநாதன் நூலகராக நியமிக்கப்பட்டார். அவர் காலத்தில் நூலகம் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி கண்டது.

தென் கிழக்காசியாவிலேயே சிறந்த நூலகமாக மாறியது. உடமைகள் பாதுகாப்புப் பீடம், காட்சிக் கூடம், நூல் இரவல் வழங்கும் பகுதி, சிறுவர் பகுதி, வாசிகசாலைப் பகுதி, கேட்போர் கூடம், வலது குறைந்தோர் பகுதி, நூற் களஞ்சியப் பகுதி, உடனுதவும் பகுதி, விசேட சேர்க்கைப் பகுதி, கட்புல செவிப்புலப் பகுதி, படிப்போர் கூடம், நிர்வாகஸ்தர் பகுதி, கலைக்கூடம் எனப் பல பகுதிகள் அமைக்கப்பட்டன. நாடே இந்த நூலகத்தால் பயன் பெற்றது.

1981, மே 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வன்செயல்கள் ஆரம்பமாகின. இரண்டாம் நாள் இந்தப் பொது நூலகக் கட்டடம் எரியூட்டப்பட்டது. ‘பொலிஸ் மா அதிபரும் பிரிகேடியர் வீரதுங்கவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக யூன் 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொதுசன நூலகத்திற்கு தீயிட்டனர். ஏறத்தாழ 97000 நூல்கள் எரிந்து கருகிப் போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேல் பெறற்கரிய நூல்கள் பல எரிந்து போயின’ என எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் கவலையோடு குறிப்பிட்டார். அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்திவிட்டு நூலகக் கதவைக் கொத்தித் திறந்து, உள்ளே நுழைந்து அட்டூழியங்கள் புரிந்தனர். நூலகம் எரிந்து காரை பெயர் ந்து போனது.

நூலகத்திலிருந்து ஒரு ஏடு தானும் தப்பவில்லை. இதன் நட்டத்தை மதிப்பிட்ட திரு. லயனல் பெர்னாண்டோ ஒரு கோடி ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அதனை வழங்க ஜனாதிபதி அவர்கள் ஒப்புக்கொண்டார். 20 இலட்சம் உடனடியாக வழங்கப்பட்டது. ஆணையாளர் சி. வி. கே. சிவஞானத்தின் முயற்சியால் நூலகம் புனருத்தாரணம் செய்து மீண்டும் 4.6.1984 இல் திறக்கப்பட்டது. யாழ். நகரத்தின் வரலாற்றுச் சின்னம் இந்தப் பொதுசன நூலகமாகும்.

பொதுசன நூல்நிலையத்துக்கு அருகில் முற்றவெளியில் துரையப்பா விளையாட்டரங்கு அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு சிறப்பான விளையாட்டரங்கு இதுவாகும். இவ்விளையாட்டரங்கில் உதைபந்தாட்டம் முக்கியமான விளையாட்டாகும். இந்த விளையாட்டரங்கினை யாழ்ப்பாண அன்றைய மேயர் அல்பிரட் துரையப்பா நிறுவினார். அவர் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் சுடப்பட்டதும் இந்த விளையாட்டரங்கு திறக்கப்பட்டது. கலைவிழாக்கள் அனைத்தும் இந்த விளையாட்டரங்கில் நடத்தப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளில் ஒன்று aகல் தியேட்டர் ஆகும். யாழ்ப்பாணத்தில் பழையதும் புதியதுமாகப் பல சினிமாத் தியேட்டர்கள் உள்ளன. ஆனால் aகல் தியேட்டர் அதன் சவுன்ட் சிஸ்ரத்துக்காக மக்களால் இன்றும் நினைவு கூரப்படுகின்றது. aகல் தியேட்டர் ஒரு தகரக் கொட்டகை ஆகும். மிகப் பழைய தியேட்டர். ஆங்கிலப் படங்கள் திரையிடும் சினிமாக் கொட்டகை. அத்தியேட்டரின் உடைவுற்ற எச்சங்கள் அதனை நினைவுபடுத்துகின்றன.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் பத்து நடுகற்கள் நினைவுச் சின்னங்களாக நிற்கின்றன. அவை தமிழாராய்ச்சி மாநாட்டின் மரணமடைந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டவை. 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடத்துவதென தமிழராய்ச்சிக் குழு தீர்மானித்தது. தவத்திரு தனினாயகம் அவர்களும் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களும் யாழ்ப்பாணத்தில் நடத்துவதெனத் திடமாக முடிவெடுத்திருந்தனர். அவ்வேளை யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராகவிருந்த திரு.

அல்பிரட் துரையப்பா உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டாம் அதற்கான சூழ்நிலை இல்லையென அனுமதி மறுத்தார். கொழும்பில் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துங்கள் அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக இலங்கை அரசு அறிவித்தது. எனினும் அரச நிர்வாகத்தின் ஆதரவின்றி யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அரச நிர்வாகத்துக்கும் குறிப்பாக மாநகர சபைக்கும் பொலிசாருக்கும் முறுகல் நிலை காணப்பட்டது. பிரச்சினை இறுதி நாள் ஏற்பட்டது.

முற்றவெளியில் அமைந்திருக்கும் வீரசிங்கம் மண்டபத்தில் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நடந்தன. சனக் கூட்டம் அலை மோதியது. பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்த மக்களை வீரசிங்கம் மண்டபத்திற்குள் அடக்க முடியவில்லை. கூட்டத்தை வெளியில் வைக்குமாறு கோரிக்கை எழுந்தது. கூட்டத்தை வீரசிங்கம் மண்டபத்துக்கு முன் வைப்பதென முடிவாகியது. அம்முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்தில் முன் மேடை அமைக்கப்பட்டது. மக்கள் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இருக்கும் முற்றவெளி வீதியை மறித்து அமர்ந்தனர். ஜனார்த்தனன் என்பவர் பேசிக்கொண்டிருக்கும் போது பிரச்சினை ஆரம்பமானது.

வீதி வழியே வந்த பொலிஸார் (ஏ. எஸ். பி உட்பட) வெளி யேற முடியவில்லை. மக்கள் அடைத்து அமர்ந்திருந்தார்கள் அனுமதி பெறாமல் வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே கூட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டப் பட்டது. போக்குவரத்துக்கு இடைஞ்சல் புரிவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மக்கள் பொலிசாரை வீதி வழியே செல்ல அனுமதிக்கவில்லை. அமர்ந்திருந்தார்கள். திரும்பிச் சென்ற பொலிசார் சனக் கூட்டத்தைக் கலைப்பதற்குரிய ஆயத்தங்களுடன் வந்தனர். துப்பாக் கிகள், அடிப்பதற்குரிய கொட்டன்கள், தடுப்பதற்குரிய கவசங்களுடன் வந்தனர்.

கண்மூடித்தனமாக வீதியில் அமர்ந் திருந்த மக்களைத் தாக்கத் தொடங்கவே, மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். ஆகாயத்தினை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் பல செய்தனர். துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு மின்சார வயர்கள் அறுந்து தொங்கத் தொடங்கின. சிதறி ஓடிய மக்களில் சிலர் அந்த வயர்களில் சிக்குண்டனர் மின்சாரம் தாக்கி அடுத்த கணமே பலியாகினர். அவ்வாறு ஒன்பது பெயரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் மரணமடைந்த மக்களின் நினைவாக முதலில் 5 அடி சுற்றுக்கொண்ட தனித்தூண் ஒன்று நிறுவப்பட்டது. அத்தூண் விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. அதன்பின்னர் ஒன்பது சிறிய தூண்களும் பெரிய தூண் ஒன்றும் நிறுவப்பட்டன. நினைவுச் செப்பேடும் பொறிக்கப்பட்டது. பின்னர் அந்த நினைவுத் தூபிகளைச் சுற்றி அலங்கார மதில் கட்டப்பட்டு, முன்பக்கத்தில் தோரணவளை கட்டப்பட்டு, எழுத்துக்களும் பொறிக்கப்பட்டன. இவை புளொட் அமைப்பினால் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் நிதியைக் கொண்டு அமைக்கப்பட்டன. இன்று அவ்வாறே காணப்படுகின்றன. நினைவு நாளன்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்து வருன்றனர்.

Thinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல