திங்கள், 25 ஜனவரி, 2010

ஈழத் தமிழரின் உரிமைப் போராட்ட வரலாற்றை நினைவு கூரும் செல்வநாயகம் ஸ்தூபி (பாகம் 4)

வீரசிங்கம் மண்டபம்


செல்வநாயகம் நினைவுக் கோபுரம்


உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு தெற்காக வீதிக்கு அருகில் வீரசிங்கம் மண்டபம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் பண்பாட்டு நிலையமாக இது விளங்குகின்றது. இக்கட்டிடம் கீழ்ந்தளத்தோடு நான்கு மாடிகளைக் கொண்டிருக்கின்றது. மாடிகளில் வேறு அரச அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கீழ்த்தளத்தில் யாழ்ப்பாணத்தின் கலாசார நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்ற அரங்குள்ளது. இந்த அரங்கில் மேடையேறாத நிகழ்ச்சிகளே கிடையாது. நடன அரங்கேற்றங்கள், கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்வுகள் எனப் பல மேடையேறியுள்ளன. யாழ்ப்பாணப் பிரதேசம் கூட்டுறவில் முதன்மையானது. கூட்டுறவு என்பதற்கு யாழ்ப்பாணத்தை இலங்கை முழுவதும் உதாரணமாகக் கொள்வர். கூட்டுறவின் தந்தையாகத் திகழ்ந்தவர் வீரசிங்கப் பெரியார் ஆவார். இவர் நினைவாக இக்கட்டிடத்தை அமைந்துள்ளார்கள்.


யாழ்ப்பாணத்தில் கலை நிகழ்வுகள் நடைபெறும் கலாசார மண்டபங்கள் சில இருந்தன். பழைய யாழ்ப்பாண மாநகர சபையின் கட்டிடத்தில் இருந்த நகர மண்டபம், முற்றவெளியில் அமைந்திருந்த திறந்தவெளி அரங்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபம் நல்லூர் ஆதீனம், இளங்கலைஞர் மண்டபம், நல்லூர் கம்பன் கோட்டம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கன. நகர மண்டபம் திறந்தவெளி அரங்கு என்பன யுத்தத்தின் காரணமாகச் சிதைந்து விட்டன. சிதிலமாகக் கிடக்கின்றன. கோட்டை யுத்தத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட கட்டிடம் வீரசிங்கம் மண்டபமாகும். கோட்டையைப் பார்த்தபடி நேரெதிரே இம்மண்டபம் இருந்தமையால் இம்மண்டபத்துள் இராணும் நிலைகொண்டுவிடலாம் என ஐயப்பட்ட போராளிகள் இம்மண்டபத்தை எரியூட்டினர். கட்டிடத்தின் திடம் காரணமாக கீழ்ப்பகுதியும் முதலாம் தளமும் சேதமடைந்தன. யுத்தம் முடிவடைந்த பின்னர் இம் மண்டபம் திருத்தி மீளமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் 4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடந்தேறியது. இம்மண்டபத்தினுள் அமைந்திருந்த சக்தி வானொலி ஒரு தடவை அடித்து நொருக்கப்பட்டது. இன்று யாழ்ப்பாணத்தின் கலாசாரச் சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது.


முற்றவெளி முனியப்பர் கோயில்

யாழ்ப்பாணம் தபாற்கந்தோர் கட்டிடம்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே முற்றவெ ளி முனியப்பர் கோயில் இருக்கின்றது. ஆரம்பத்தில் இது ஒரு சின்னக்கோயிலாக இருந்தது. கிராமக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. மிகச்சிறிய மண்டபக் கோயிலாக இருந்தது. ஆரம்பத்தில் முனியப்பருக்கு வருடா வருடம் கோழி, ஆடு என்பன பலிகொடுக்கப்பட்டு வந்தன. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி அதன் பின்னர் முஸ்லிம்களின் ஆரம்பப் பண்டசாலையை அழித்து யாழ்ப்பாணக் கோட்டைக்கு அத்திவாரம் இட்டபோது இக்கோயில் அங்கிருந்தது. கோட்டை கட்டத்திட்டமிட்ட போர்த்துக்கேயர் இக்கோயிலை அவ்விடத்திலிருந்து அகற்ற விரும்பவில்லை. இவ்விடத்தைப் பார்க்க வந்த போர்த்துக்கேய கொமுசாரி வன் கூன்ஸ் என்பானின் குதிரை தறிகெட்டு திடீரென ஓடத் தொடங்கியதாம். விழுந்து விடும் நிலைக்கு அவன் வந்துவிட்ட நிலையில் குதிரை முனியப்பர் கோயிலுக்கு முன் மதம் அடங்கி திடீரென நின்றது. முனியப்பரிடம் ஏதோ சக்தி இருப்பதாக நினைத்த கொமுசாரி கோயிலைத் தவிர்த்து யாழ்ப்பாணக் கோட்டையை அமைக்கப் பணித்தான். முனியப்பருக்குப் பலி கொடுத்துவிட்டு கோட்டை, கட்டப்படத் தொடங்கியதாம். இன்று முனியப்பர் கோயில் படிப்படியாக பெரிய கோயிலாக மாறிவிட்டது. வருடாந்த உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.


தபாற் கந்தோர்,
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்.

கோட்டை யுத்தம் காரணமாக முற்றவெளியை அண்டிக் காணப்பட்ட கட்டிடங்கள் யாவும் அழிந்து போயின. கோட்டைக்குள்ளிருந்து ஏவப்பட்ட செல்களினாலும், போராளிகளினால் ஏவப்பட்ட ஷெல்களினாலும் இக்கட்டிடங்கள் அழிவுற்றன. யாழ்ப்பாணக் கூட்டுறவுச் சங்கங்கத்தின் மாடிக் கட்டிடம் யாழ்ப்பாணம் தபாற்கந்தோர் கட்டிடம் என்பன அவற்றில் சிலவாகும். இராணுவம் குடிபுகுந்து நிலை கொண்டு விடலாம் என்பதால் தீயிடப்பட்ட வீரசிங்கம் மண்டபம் போன்று யாழ்ப்பாண தபாற்கந்தோர் கட்டிடமும் எரியூட்டப்பட்டது. இவை பாவனைக்கு உதவாதனவாகவே காணப்படுகின்றன.


பழைய முனியப்பர் கோயில்

தபால் கந்தோரில் பிரித்தானியர் காலத் தூண்கள் மாத்திரம் எஞ்சி நின்றன. பலருடைய முயற்சியினால் புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் அமைந்துள்ளன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் புனரமைக்கப்பட்ட போது கீழ்ப்புறக் கடைகளோடு இரண்டு மாடிக் கட்டிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாடிகளில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கொண்டிருக்கின்றன. இக்கட்டிடத்தில் நல்லதொரு கேட்போர் கூடம் அமைந்துள்ளமை வரப்பிரசாதமாகும்.


புதிய முனியப்பர் கோயில்

1869 ஆம் ஆண்டு யாழ்பாணத் தபால் கந்தோர் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது தபாற் கந்தோர் சீதாரியில் (பறங்கித் தெரு) அமைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வங்கிக் கட்டிடத்தையே விலைக்கு வாங்கி அக்கட்டிடத்தில் யாழ்ப்பாணத்தின் தபாற் கந்தோர் தொடங்கப்பட்டது. 1880 ஏப்பிரல் 1ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளைக்கு மாட்டு வண்டி மூலமாக தபால் கொண்டு செல்லும் குத்தகையை நல்லூர் ச. ஆசைப்பிள்ளை என்பவர் எடுத்தார். 1917 வரை இச்சேவை நடந்தது. பின்னர் குதிரை கோச்சி மூலம் நடந்தது.

கொழும்பிலிருந்து தபால் கோச்சி வருகின்ற நாள் யாழ்ப்பாணம் தபால் கந்தோரில் திருவிழா நாளாகும். 1895 ஜனவரி மாதம் தபால் அதிபர் (போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்) யாழ்ப்பாணத்துக்கு வந்தார். பல்வேறு குறைபாடுகளையும் விசாரிப்பதற்காக அவர் வருகை. வண்ணார் பண்ணையில் தபால் கந்தோர் ஒன்று திறப்பது சம்பந்தமாகவும், சில தபால் ஊழியர்கள் கடிதங்களை விநியோகித்துவிட்டு தேவைப்படின் கடிதம் பெற்றோருக்கு வாசித்துக் காட்டியும் பதில் வரைந்தும் கொடுப்பதில்லை என்ற முறைப்பாட்டையும் விசாரிக்க வந்திருந்தார்.


மணிக்கூட்டு கோபுரம்

யாழ்ப்பாணம் முற்றவெளியில் மிகப் பழைய வரலாற்றுச் சின்னம் ஒன்றுள்ளது. அதுவே மணிக்கூட்டுக் கோபுரமாகும். அது 1875 ஆம் ஆணணணடினைச் சேர்ந்ததாகும். அதன் கட்டமைப்பு செம்மையாக இருக்கின்றது. ஆனால் கடந்த இரு தசாப்தங்களாக நேரம் காட்டுவதில்லை. கோட்டை யுத்தத்தின் போது மணிக்கூட்டுக் கோபுரமும் பாதிப்படைந்தது. ஆனால் ஒரு நூற்றாண்டாக இது நேரத்தை துல்லியமாகக் காட்டி வந்தது.

1875 ஆம் ஆண்டு, இலங்கைக்கு வேல்ஸ் இளவரசர் வருகை தந்தார். அவ்வேளை இலங்கைத் தேசாதிபதியாகவிருந்தனர். சேர் ஜேம்ஸ் லோங்டன் ஆவார். அவர்கள் இருவரின் ஞாபகார்த்த


உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம்


மாக இந்த மணிக்கூட்டுக் கோபுரம் கட்டப்பட்டது. இம்மணிக்கூட்டுக் கோபுரத்தைக் கட்டுவதற்கு ரூபா 6000 வழங்கப்பட்டது. வேல்ஸ் இளவரசருக்கு அன்பளிப்பாக ஞாபகப் பொருள் வழங்குவதற்காக ரூபா 4000 அதற்கென நியமிக்கப்பட்ட சபையால் யாழ்ப்பாண ஊர் மக்கள் சேகரித்தனர். இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைக் கட்டுவதற்கான வரைப்படத்தை அரச கட்டிடக்கலை நிபுணரான சிமித் என்பவர் வரைந்தார். இக்கட்டிடம் கட்டி முடிக்கப்ப ட்டது. வேல்ஸ் இளவரசருக்கான யாழ்ப்பாண நகைகள் அடங்கிய பெட்டியை க. கனகரெத்தின முதலியார் வழங்கினார்.

இம்மணிக் கூட்டுக் கோபுரத்துக்கான மணிக்கூடுகளை அன்பளிப்பாக வழங்குமாறு பிரித்தானிய ஸ்தானிகராலயத்திடம் அக்கால மாநகர ஆணையாளரால் கோரிக்கை தரப்பட்டது. கோரிக்கை ஏற்கப்பட்டு மணிக்கூடுகள் பொருத்தப்பட்டன. அவை விரைவில் செயலிழந்து போயின.


செல்வா நினைவுக் கோபுரம்

யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தின் தென் கோடியில் செல்வநாயகம் நினைவுத் தூபி காணப்படுகின்றது. மேடையொன்றில் இத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. இத்தூபிக்கு முன் தந்தை செல்வநாயகத்தின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 31-03-1898 இல் தந்தை செல்வநாயகம் மலேசியாவில் பிறந்தார். அவரது தந்தையார் வேலுப்பிள்ளை தொல்புரத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் படித்தார். பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க சமகால மாணவர் தந்தை அவர்கள் சட்டத்தரணியாவார். 1948 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழ் காங்கிரசிலிருந்து விலகிய தந்தை செல்வா தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். விலகியபோது இன்று இந்தியத் தமிழருக்கு அநீதி இழைக்கப்படுகின்றது நாளை மொழிப்பிரச்சினை வரும் போது இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இதே கதி நேரிடும். எனவே இப்போதே நாமெல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என்றார். வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சியென்றும் இலங்கை ரீதியில் சமஷ்டிக் கட்சியென்றும் இது அழைக்கப்பட்டது. ‘சிங்களம் மட்டும் அரச மொழிச்சட்டத்தை எதிர்த்து காலி முகத்திடலில் ஆதரவாளர்களோடு இணைந்து சத்தியாக்கிரகம் செய்த போது சத்தியாக்கிரகிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 1961 இல் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் சாத்வீக சத்தியாக்கிரகம் புரிந்தார். ஆதரவாளர்களுடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1970 பொதுத் தேர்தலில் 13 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றார். 1972 அரசியல் யாப்பை எரித்தார். எதிர்த்தார். தமிழ் மக்களின் ஏகபோக ஆதரவை அவரது அரசியல் நடவடிக்கைகள் பெற்றிருந்தன. எனினும் தந்தை செல்வநாயகத்தின் கோட்பாட்டை எந்தச் சிங்களக் கட்சியும் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஏற்க மறுத்ததே கதையாளது. செல்வா- பண்டாநாயக்க ஒப்பந்தம் செல்வா- டட்லி ஒப்பந்தம் என்பன செயலிழந்து போயின. 1979 இல் வட்டுக்கோட்டையில் எடுக்கப் பட்ட தீர்மானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், இ. தொ. கா. தொழிற் சங்கம், என்பன தமிழரசுடன் இணைந்தன. இதற்கு தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்னம்பலம், செள. தொண்டமான் என்போர் கூட்டாகத் தலைமை ஏற்றனர். தமிழருக்கென தனி நாடு அமைத்தல் அவசியமென முடிவாகியது. செல்வா 26-04-1977 இல் மரணமானதும் இத்தூபியுள்ள இடத்தில் தகனம் செய்யப்பட்டார். தந்தை செல்வா அறங்காவல் குழு ஒன்று நிறுவப்பட்டது. இன்று பேராயர் சு. ஜெபநேசன் தலைவராகவும் போரா சிரியர் க. சந்திசீலன் செயலாளராக வும், எஸ். குலநாயகம் தனாதிகாரி யாகவும் உள்ளனர். அறங்காவல் குழுவில் கலாநிதி க.குணராசா, சங்கர் ஆகியோர் அங்கத்தவராக இருக்கின்றனர். தந்தை செல்வாவின் நினைவு நாட்கள் இத்தூபியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இது கட்சி பேதமின்றிக் கொண்டாடப்படுகி ன்றது. வடக்கில் படிப்படியாக ஆயு தக் கலாசாரம் உருவாக்குவதற்கு இக் கட்சியின் இளைஞர் குழு காரணமாக அமைந்தது.

Thinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல