திங்கள், 25 ஜனவரி, 2010

ஒரு சோக வரலாற்றின் குறை முடிவு (இறுதிப்பாகம்)

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலையும் இந்திய வம்சாவளியினர் தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்கள். ஒன்று 1954 ஜனவரியில் மற்றது 1954 ஒக்ரோபரில் இரண்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரவில்லை.


ஜவஹர்லால் நேரு 1964 மே 27ந் திகதி காலமாகியதைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி 1964 ஜூன் 9ந் திகதி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் 1964 ஒப்ரோபர் 30ந் திகதி செய்துகொண்ட ஒப்பந்தம் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியினரில் 300,000 பேரும் அவர்களின் பிற்சந்ததியினரும் இலங்கைப் பிரசாவுரிமை பெறுவர் என்பதும் 525,000 பேரையும் அவர்களின் பிற்சந்ததியினரையும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்பதும் இந்த ஒப்பந்தத்தின் பிரதான அம்சங்கள். அன்றைய கணக்கெடுப்பின்படி, எஞ்சியுள்ள 150,000 பேர் தொடர்பாகப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ¤ம் தமிழரசுக் கட்சியும் வன்மையாக எதிர்த்தன.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1970ம் ஆண்டு பதவிக்கு வந்த பின் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியும் 1974 ஜனவரி 27ந் திகதி ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட் டனர். சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தில் உள்ளடக்கப் படாத 150,000 பேரில் 75,000 பேருக்கு இலங்கைப் பிரசாவுரிமையும் 75,000 பேருக்கு இந்தியப் பிரசாவுரிமையும் வழங்குவதற்கான ஒப்பந்தமே இது.


சேர் ஜோன் கொத்தலாவல

விசேட சட்டங்கள்

எட்டாவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக 1977 ஜுலை 21ந் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. முதலில் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜே. ஆர். ஜயவர்தன புதிய அரசியலமைப்பு 1978ம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததும் நிறைவேற்று ஜனாதிபதியாகினார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் சேர்ந்தது. செளமிய மூர்த்தி தொண்டமான் கபினற் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஜே. ஆர். ஜயவர்த்தன விரும்பவில்லை. தான் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் வரை ஆறில் ஐந்து பெரும்பான்மை இருக்க வேண்டுமென விரும்பினார். அதனால், நக்சலைட் பூச்சாண்டி காட்டித் தேர்தலைப் பின்போடுவதற்கான சர்வசன வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

சிங்கள மக்கள் மத்தியில் அவரது அரசாங்கத்துக்கு எதிரான உணர்வலை வளர்ந்திருந்த நிலையில் சர்வசன வாக்கெடுப்பில் வெற்றியீட்டுவதற்கு இந்திய வம்சாவளியினரின் வாக்குகளிலேயே அவர் பெரிதும் தங்கியிருக்க வேண்டியிருந்தது. இந்த நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரசாவுரிமை இல்லாதிருக்கும் இந்திய வம்சாவளியினருக்குப் பிரசாவுரிமை வழங்குவதற்கு ஜே. ஆர். ஜயவர்தனவைச் சம்மதிக்க வைத்தது. இந்திய வம்சாவளியினருக்குப் பிரசாவுரிமையை மறுப்பதில் முன்னணி வகித்தவர்களில் ஒருவரான ஜே. ஆர். ஜயவர்தன தனது அரசியல் தேவை கருதி அம்மக்களுக்குப் பிரசாவுரிமை வழங்கச் சம்மதித்தார்.

சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி 300,000 பேருக்கு இலங்கைப் பிரசாவுரிமையும் 525,000 பேருக்கு இந்தியப் பிரசாவுரிமையும் வழங்க வேண்டும். சிறிமா- இந்திரா காந்தி ஒப்பந்தத்தின் படி 75,000 பேருக்கு இலங்கைப் பிரசாவுரி மையும் 75000 பேருக்கு இந்தியப் பிரசாவுரிமையும் வழங்க வேண்டும். இரண்டு ஒப்பந்தங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது, 375,000 பேர் இலங்கைப் பிரசாவுரிமைக்கும் 600,000 பேர் இந்தியப் பிரசாவுரிமைக்கும் உரித்துடையோர்.

இந்தியப் பிரசாவுரிமைக்கு 506,000 பேர் மாத்திரம் விண்ணப்பித்திருந்தனர். எஞ்சியுள்ள 94,000 பேருடன் இலங்கைப் பிரசாவுரி மைக்கு உரித்துடைய 375,000 பேரையும் சேர்த்து 469,000 பேருக்குப் பிரசாவுரிமை வழங்குவதற்காக 1986ம் ஆண்டின் 5வது இலக்க நாடற்றோருக்குப் பிரசாவுரிமை வழங்கும் சட்டம் (Grant of Citizenship to stateless persons Act No:5 0f 1986) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி சட்டத்தில் குறிப்பிட்ட 469000 பேரில் 236,000 பேருக்கு மாத்திரம் பிரசாவுரிமை வழங்கப்பட்ட தால் எஞ்சிய 233,000 பேருக்கும் இலங்கைப் பிரசாவுரிமை வழங்குவதற்காக 1988ம் ஆண்டின் 39வது இலக்க நாடற்றோருக்குப் பிரசாவுரிமை வழங்கல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் (Grant of Citizenship to stateless persons (Special Parliament Act) நிறைவேற்றப்பட்டது.

இந்தியப் பிரசாவுரிமைக்க விண்ணப்பித்த 506,000 பேரில் சிலருக்கு இந்தியப் பிரசாவுரிமை கிடைக்கவில்லை. வேறு சிலர் இந்தியப் பிரசாவுரிமை கிடைத்தும் இலங்கையிலேயே தங்கிவிட்டனர்.

இந்த நிலையில், பிரசாவுரிமை இல்லாத எல்லோருக்கும் பிரசாவுரிமை வழங்கும் நோக்கில் 2003ம் ஆண்டின் 35வது இலக்க இந்திய வம்சாவளியினருக்குப் பிரசாவுரிமை வழங்கல் சட்டம் (Grant of Citizenship to persons of Indian origin Act No:35 0f 2003) நிறைவேற்றப்பட்டது. 1960 ஒக்டோபர் 30ந் திகதியிலிருந் இலங்கையில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் அவர்களின் பிற்சந்ததியினருக்கும் இலங்கைப் பிரசாவுரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இச் சட்டம் கொண்டிருந்தது.


முழுமை பெறவில்லை

பிரசாவுரிமை இல்லாதிருந்த இந்திய வம்சாவளியினர் அனைவரும் மேற்கூறிய மூன்று சட்டங்களின் மூலம் பிரசாவுரிமை பெற்றனர். எனினும் இவர்களின் பிரசாவுரிமை முழுமை பெற்றுவிட்டதெனக் கூற முடியாது.

இம்மூன்று சட்டங்களும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்படாததால் இவற்றைச் சாதாரண பெரும்பான்மை மூலம் திருத்துவதற்கோ நீக்குவதற்கோ முடியும்.

இது ஒரு குறைபாடு. இம்மூன்று சட்டங்களும் நிறைவேற்றப்படுவதற்கு முன் பிரசாவுரிமை பெற்றவர்களுக்கும் இச் சட்டங்களின் மூலம் பிரசாவுரிமை பெற்றவர் ளுக்கும் இடையே உரிமைகள் மற்றும் அந்தஸ்தைப் பொறுத்த வரையில் வேறுபாடு இருப்பது இன்னொரு குறைபாடு.

அரசியலமைப்பின் 26வது சரத்து பிரசாவுரிமை தொடர்பானது. ஒரு பிரசைக்குரிய உரிமைகளும் அந்தஸ்தும் 26 (1)வது சரத்து முதல் 26 (4) வது சரத்து வரை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அடுத்த சரத்தாகிய 26 (5) இவ்வந்தஸ்தும் உரிமைகளும் எவ்வகையான பிரசைகளுக்கு உரித்தானவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அந்தச் சரத்தை முழுமையாகப் பார்ப்போம்.


சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் இரு பிரதமர்களும் கைச்சாத்திடுகின்றனர்.


“வம்சாவளியாகவோ பிரசாவுரிமை தொடர்பான ஏதேனுமொரு சட்டத்தின் பிரகாரம் பதிவு செய்யப்பட்டதன் மூலமோ, இவ்வரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு உடனடியாக முந்திய காலத்தில் இலங்கைப் பிரசையாக உள்ள ஒவ்வொருவரும் இச் சரத்தின் மேலேயுள்ள ஏற்பாடுகளில் சொல்லப்பட்டுள்ள அந்தஸ்துக்கும் உரிமைகளுக்கும் உரித்துடையோராவர்”

அரசியலமைப்பின் 26 (1) வது சரத்து முதல் 26 (4) வது சரத்து வரை சொல்லப்பட்டுள்ள அந்தஸ்தும் உரிமைகளுமே இங்கு குறிப்பிடப்படுபவை. அரசியலமைப்பு 1978 ஓகஸ்ட் 31ந் திகதி நடைமுறைக்கு வந்தது. அத்திகதிக்கு உடனடியாக முந்திய காலத்தில் பிரசாவுரிமை பெற்றவர்கள் மாத்திரமே இவ்வந்தஸ்துக்கும் உரிமைகளுக்கும் உரித்துடையோர் என்பது 26 (5) வது சரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, 1978 ஓகஸ்ட் 31ந் திகதிக்கும் பின்னர் நிறைவேற்றப்பட்டனவான மூன்று சட்டங்களின் மூலம் பிரசாவுரிமை பெற்றவர்கள் பிரசைகளுக்கு உரியனவாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அந்தஸ்துக்கும் உரிமைகளுக்கும் உரித்துடையோரல்லர்.

1988ம் ஆண்டின் 39வது இலக்க நாடற்றோருக்கும் பிரசாவுரிமை வழங்கல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 2வது சரத்து இலங்கையின் ஏனைய பிரசைகள் சட்டத்தின் பிரகாரம் உரித்துடையோராயுள்ள சகல உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் இச்சட்டத்தின் கீழ் பிரசாவுரிமை பெறுவோரும் உரித்துடையோர் எனக் கூறுகின்ற போதிலும் அரசியலமைப்பின் 26 (6) வது சரத்தின் கீழ் இது வலுவிழக்கின்றது. அரசியலமைப்பின் 26 (6) வது சரத்தை முழுமையாகப் பார்ப்போம்.

பிரசாவுரிமை தொடர்பாக நடைமுறையில் உள்ளனவான சகல எழுதப்பட்ட சட்டங்களும் பிரசாவுரிமை பற்றிக் குறிப்பிடுவனவான சகல எழுதப்பட்ட சட்டங்களும் இச்சரத்துக்கு மேலேயுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகவே அர்த்தம் கொள்ளப்படல் வேண்டும்”

அதாவது எந்தச் சட்டத்தில் என்ன தான் சொல்லப்பட்டிருந்தாலும், அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் அந்தஸ்துக்கும் உரிமைகளுக்கும் 1978 ஓகஸ்ட் 31ந் திகதிக்கு முன் பிரசாவுரிமை பெற்றவர்கள் மாத்திரயே உரித்துடையோர் என்பது தெளிவாகின்றது.

பிரசாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரில் ஒரு பிரிவினர் மாத்திரம் அரசியலமைப்பில் சொல்லப்பட்ட அந்தஸ்துக்கும் உரிமைகளுக்கும் சட்ட ரீதியாக உரித்துடையோராகவும் இன்னொரு பிரிவினர் அவற்றுக்கு உரித்து இல்லாதோராகவும் இருப்பது மிகப்பெரிய முரண்பாடு.

நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் ஒரு சிறு திருத்தம் செய்வதன் மூலம் இந்த முரண்பாட்டை நீக்க முடியும். அரசியலமைப்பின் 26 (5) வது சரத்தில் ‘இவ்வரசியல் அமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு உடனடியாக முந்திய காலத்தில் என்பதையடுத்து ‘அல்லது பின்னர் பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டத்தின் அல்லது சட்டங்களின் பிரகாரம்’ என்ற தொடரை உட்புகுத்துவதன் மூலம் இத் திருத்தத்தைச் செய்யலாம்.

சிவா சுப்பிரமணியம்

Thinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல