கவரிமான் என்றொரு மான் வகையே கிடையாது. இமயமலையில் இருக்கும் ஒரு வகைக் காட்டு மாடு, சடைமுடியுடன் இருக்கும். கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரில் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.
இதைத்தான் திருவள்ளுவர், ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’ என்கிறார். மற்றபடி கவரிமான் அல்ல அது. அன்னப்பறவை போல, நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம் கவரிமான்.
புதன், 10 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக