ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

தமிழ்க்கூட்டமைப்பின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி பற்றி கடந்த வாரம் ஊடகங்கள் பிரதான செய்திகளை வெளியிட்டன. இந்த வாரம் கூட்டமைப்பினுள்ளே எழுந்துள்ள நெருக்கடிகளைப் பற்றிய செய்திகளும் வதந்திகளும் அதிகமாக உலாவந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக கூட்டமைப்பு உடைந்து இரண்டாகவோ மூன்றாகவோ மாறிவிடலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இந்தப் பத்தியை எழுதும் போது கூட கூட்டமைப்பை மீள் நிலைக்குக் கொண்டுவருவதற்கான கூட்டம் நடந்து கொண்டேயிருந்தது. அதேவேளை கூட்டமைப்பை உடைந்து விடாமல் பாதுகாக்கும் முயற்சிகளும் பல தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இப்போது கூட்டமைப்புச் சந்தித்துள்ள நெருக்கடிக்கு முதற்காரணம் அதனுள்ளிருக்கும் ஜனநாயகம் பூரணமாக இல்லாமையே.
தமிழ்ச் சூழலிலுள்ள ஜனநாயகப் போதாமை கூட்டமைப்பினுள்ளும் நிறைந்திருக்கிறது.

பல கட்சிகள், பலவித அபிப்பிராயமுடையோர், பலவகையான அரசியல் அணுகு முறைகள், நிலைப்பாடுகளையுடை யோர் உள்ள ஒரு கூட்டு அமைப்பில் முக்கியமாக இருக்கவேண்டியது ஜனநாயகமாகும்.
ஜனநாயகம் இருந்தால்தான் அங்கே கலந்துரையாடவும் அபிப்பிராயங்களைத் தெரிவிக்கவும் முடியும். விவாதிக்கவும் கூடித் தீர்மானம் எடுக்கவும் இயலும். எந்தப் பிரச்சினைகளுக்கும் ஒரு பொது நிலைப்பாட்டை எட்டக் கூடியதாக இருக்கும்.

ஜனநாயகம் இல்லை என்றால், அங்கே அக நெருக்கடிகளும் குழுவாதம் முரண்களும் சந்தேகங்களும் அணிகளும் போட்டிகளும் இயல்பாக ஏற்படும். இது எதிர்த்தரப்பினருக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை அதிகக்கும். மட்டுமல்ல, ஒரு கூட்டமைப்பு என்பது பல நிலைப்பட்டவர்களை முக்கியமான அடிப்படை அம்சங்களில் ஒருங்கிணைப்பதாகும்.

அப்படி ஒருங்கிணைக்கும் போது அதற்குள்ளிருக்கும் பல முரண்களையும் பிடிவாத நிலைகளையும் தன்மைப்படும் விவகாரங்களையும் கையாளக் கூடிய பொறுப்பு அதன் தலைமைக்குண்டு. இதற்கு அந்தத் தலைமைத்துவம் உச்சமான சகிப்புத் தன்மையையும் விவேகத்தையும் கொண்டிருக்க வேண்டும். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் ஏற்றுக் கொள்ளவும் கூடிய மனப்பக்குவத்தை இந்தத் தலைமை பெற்றிருப்பது அவசியம். தீர்மானங்களை எடுக்கவும் எல்லாத்தரப்பையும் அங்கீகத்து ஆளுகை செய்யக் கூடிய ஆளுமையும் ஒரு கூட்டு அமைப்பின் தலைமைக்குயது.

கூட்டமைப்பின் தொடக்க காலந்தொட்டே அதனுள் ஏகப்பட்ட முரண்கள் இருந்துள்ளன.
கடந்த எட்டு ஆண்டுகளாக நிலவி வந்த இந்த அக முரண்கள் தீர்க்கப்படாத நிலையில் இன்று அவை ஒரு முடிவெல்லையை எட்டியுள்ளன. இத்தகைய ஒரு நிலை நிச்சயம் ஏற்பட்டே தீரும் என எதிர்பார்க்கப்பட்டதுதான். அதிலும் அண்மைக்காலத்தில் இது பொதுமக்களிடம் அதிக கோபத்தையும் கவலைகளையும் சலிப்பையும் நம்பிக்கையின்மைகளையும் கூட ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பிரச்சினைகளுக்கும் முரண்களுக்கும் எப்போதோ தீர்வைக் கண்டிருக்க வேண்டும்.

அத்தகைய ஒரு நிலை எட்டப்பட்டிருக்குமானால் இன்று இத்தகைய நெருக்கடி நிலை ஏற் பட்டடிருக்காது.

இந்த நிலைமைக்குக் காரணம், கூட்டமைப்பைப் பற்றிய அபிப்பிராயங்களை பொதுவாக வெளியில் முள் வைப்பதற்கான மனப்பாங்கு தமிழ் அரசியல் தமிழ் ஊடக தமிழ்ச் சமுகத்தினரிடையே இருக்கவில்லை.

எல்லாவற்றையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட சங்கதிகளாகவே பார்த்துப் பழகிவிட்ட ஒரு வளர்ச்சி நிலையின் காரணமாக, யதார்த்தத்தில் உள்ள பிரச்சினைகளையே அதற்குய அவசியத் தேவைகளைக் கருதி அணுகாமல் விலக்கிவைக்கும் மரபு தற்போது தமிழ்ச் சூழலில் உருவாகிவிட்டது. அது மட்டுமல்ல அது வளர்ந்தும் விட்டது. அப்படி அதை மீறி இந்த விவகாரம் அல்லது இந்த அமைப்பின் நிலைமை விமர்சிக்கப்பட்டால் அது குற்றத்துக்குயதாகவும் பார்க்கப்பட்டது.
அத்துடன் அதற்குக் கடும் மறுப்புகளும் இருந்து வருகிறது. விமர்சனத்தை குறைகூறுவதாவும் பலவீனப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்றும் விளங்கிக் கொள்கிற தவறு இன்னும் பொது அபிப்பிராயமாக இருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

விமர்சனம் இல்லை என்றால் வளர்ச்சி இல்லை. ஜனநாயகம் இல்லை என்பார்கள்.
இந்த இரண்டும் இல்லாததன் காரணமாக தமிழர்கள் அடுத்தடுத்துச் சந்தித்து வருகின்ற பேரிழப்புகளும் நெருக்கடிகளும் கவனிக்க வேண்டியவை. இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலைமையும் இதன் ஒரு விளைவே.

இன்றைய உலகில் ஜனநாயகம் ஒரு தன்மை அம்சம். நமக்கு அது பழக்கப்படவில்லை என்பதற்காக அதை நாம் விலக்கிவிடடியாது. "ஈழத்தமிழர்கள் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டே வருகிறார்கள்' என்று ஒரு நண்பர் சொன்னபோது "அப்படிச் சொல்வதை விடவும் அவர்கள் தாங்களாகவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்' என்றார் ஒரு இந்திய ஊடகவியலாள நண்பர். இது வெளியே இருக்கும் ஒருவர் ஏதோ வேடிக்கைக்காகச் சொன்ன விசயம் அல்ல. அவரது தொடர் அவதானிப்பில் புலப்பட்ட விசயம் இது. எனவே இத்தகைய பின்புலத்தில்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் கொண்டிருக்கும் சவால்களும் வந்து நிற்கின்றன. தமிழ் மக்கள் பிராந்திய, சர்வதேச, சிங்கள அரசியலால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்போது அவர்கள் தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் கட்சிகளாலும் பாதிக்கப்பட்டே இருக்கின்றனர். பல கட்சிகள், பல தலைமைகள் இருக்கின்ற போதும் தமிழர்களின் அரசியலை எப்படி, யார் முன்னெடுப்பது என்ற கேள்வி இன்று பெரியதாக எழுந்திருக்கிறது.

மரபார்ந்த மனோநிலையின் வெளிப்பாட்டின்படி தமிழ்மக்களிடம் செல்வாக்கைப் பெற்ற தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். இது அந்த அமைப்புக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வாய்ப்பு. என்னதான் மக்களறிந்த குறைபாடுகளை அந்த அமைப்புக் கொண்டிருந்தபோதும் அதற்கு மக்களிடம் ஒரு குறிப்பிட்ட இடம் இருந்தது. ஆனால், இந்த நிலையை தங்க வைப்பதற்கு பெரும் பாடு படவேண்டியுள்ளது.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ்' கூட்டு என்பதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குள்ளேயே கூட்டைப் பாதுகாக்க வேண்டிய ஒரு நிலைமை இன்று அதற்கு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை "ஏனைய தமிழ்க்கட்சிகளுடனும் எதிர்காலத்தில் கூட்டு வைக்கப்படும், அதற்கான பேச்சுகள் நடக்கின்றன' என அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள்ளேயே கூட்டமைப்பிலேயே கூட்டைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன அடிப்படைக் காரணம் என்று ஏற்கெனவே கூறப்பட்டுள்ளபோதும் அவசியங்கருதி மேலும் சில விடயங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

கூட்டமைப்பில் பல கட்சிகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை எந்தக் கட்சிகளையும் சாராத ஒரு அணியினரும் கூட்டமைப்பினுள் இருக்கின்றனர். இவர்கள் சரிபாதிவரையானோராவர். தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுப்பதற்கான ஒரு அரசியல் அணியின் தேவை பற்றியும் உதிரியாக இருக்கும் கட்சிகளையும் தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு பலமான கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் என விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த காலத்தில் பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டதன் படி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது சகலரும் அறிந்த சங்கதி.

பின்னர் கூட்டமைப்புக்கு ஒரு பொதுச் சின்னத்தை உருவாக்குவதற்கு அல்லது இந்த அமைப்பை ஒரு செழுமையான அமைப்பாகவும் பலமான அணியாகவும் மாற்றுவதற்கு ஆரம்பத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் பின்னர் அந்த முயற்சிகள் நடைறைப்படுத்தப்படவில்லை.
பதிலாக அணிசார்ந்த செயற்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது என கூட்டமைப்பின் செயற்பாடுகளை அவதானித்து வருவோர் கூறுகின்றனர். இதில் கட்சி சாராத அணியினர் பல சந்தர்ப்பங்களிலும் ஒதுக்கப்பட்டு வந்தனர்.
அதிலும் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் இவர்களின் முக்கியத்துவம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அத்துடன் இவர்களில் சிலர் மீது அதிருப்தியான செய்திகளும் வெளிவந்து கொண்டிருந்தன.
ஆனால், கூட்டமைப்பு பலமாகவும் சரியான முறையிலும் இருந்திருக்குமானால் உண்மையில் அவ்வாறு செயற்படுவோன் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

புதியவர்களைக் கட்சியில் இணைத்துக் கொள்ளல், புது முகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என தமக்குச் சார்பான ஒரு மாற்று முயற்சியை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், புதுமுகங்களுக்குத் தாம் மறுப்புத் தெவிக்கவில்லை என்றும் அந்தப் புதுமுகங்கள் ஒரு தரப்பின் விருப்பங்களின் அடிப்படையில் அமையாமல், ஏனையவர்களுடைய தெரிவின்படி அமைய வேண்டும் என ஏனைய உறுப்பினர்கள் தெவிக்கின்றனர்.

குறிப்பாக எந்த முடிவுகளும் தெரிவுகளும் கட்சியின் பொதுத் தெரிவாகவும் பொது முடிவுகளின் அடிப்படையிலும் சமநிலையிலும் அமையவேண்டும் என மறு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர் எனத் தெவிக்கப்படுகிறது.

இதை மறுத்துவரும் மறு அணியினர், கட்சியின் தலைமைப் பீடம் எடுக்கின்ற முடிவே இறுதியானது. அதுவே நடைறைப்படுத்தப்படும் எனத் தெவிக்கின்றனர். அத்துடன், இந்தியாவின் ஆலோசனைப்படியும் அதன் அனுசரணைப் படியும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைக் காணவேண்டும் என்றும் இவர்கள் தெவித்து வருகின்றனர்.

ஆகவே இப்படி ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும் முரண் நிலைப் போக்குகளும் விடாப்பிடியான முரண்பாடுகளுமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திணறிக் கொண்டிருக்கிறது.
புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் நெறிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் ஒரு பலமான தரப்பு இல்லாமையே இந்த நிலைமைக்குக் காரணம் எனச் சிலர் கூறுகின்றனர்.

ஜனநாயகம் சயான அரசியல் பார்வையும் மதிநுட்பம் தலைமைத்துவ ஆளுமையும் குறைபாடாக இருப்பதுவே இந்த முரண்களுக்கும் பிளவுகளுக்கும் நெருக்கடிக்கும் காரணம் என இன்னொரு சாரார் தெவிக்கின்றனர்.

ஏறக்குறைய இவை எல்லாம் இணைந்த குறைபாடுகளும் சீரின்மையுமே அடுத்தடுத்து தமிழ்மக்களின் அரசியல் இப்படி நெருக்கடி நிலைக்குள்ளாவதற்குக் காரணமாகும். இதை இந்தச் சந்தர்ப்பத்திலாவது கண்டு கொள்ளவில்லை என்றால், இன்னும் துயரம் பின்னடைவும் தவிர்க்க முடியாதது.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களும் மக்கள் அமைப்புகளும் இந்த நிலைகுறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில் ஒரு புதிய தரப்பு சூழலின் தேவை கருதி உதயமாவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

கிருஷ்ணர்த்தி அரவிந்தன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல