Nicole Minetti appeared on Italian TV before becoming a dental hygienist
இளம் பெண்கள் மற்றும் விலைமாதுக்களுடனான பாலியல் தொடர்புகளால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனியின் கவனம் தற்போது கவர்ச்சிகரமான பெண் பல் பராமரிப் பாளர் ஒருவரின் பக்கம் திசை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகோலி மினெற்றி (Nicole Minetti) என்ற மேற்படி பெண் மீது தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அவரை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிராந்திய தேர்தலில் வேட்பாளராக போட்டியிட பெர்லுஸ்கொனி (73 வயது) தெரிவு செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் மனநோயால் பாதிக் கப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி பெர்லுஸ்கொனியின் இரு பற் கள் உடைந்த போது, அவருக்கு சிகிச்சை வழங்கியவர் நிகோலி மினெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அழகிய நிகோலி மினெற்றியின் கவனிப்பில் மனதை இழந்த பெர் லுஸ்கொனி, அவரை வட இத்தாலியிலுள்ள லொம் பார்டி பிராந்தியத்தில் தனது மக்கள் விடுதலை கட்சியின் வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்துள்ளார்.
Multi-talented? Miss Minetti had been on a programme called Colorado Cafe
நிகோலி மின்னெற்றி பல் மருத்துவ பராமரிப்பாளராக பணியாற்றுவதற்கு முன் பல்வேறு நிகழ்ச்சி களிலும் நடனமாடியுள்ளார். அவர் கொலரா டோ விடுதியில் ஆடிய நடனம் பெர்லுஸ் கொனிக்கு உடைமையாகவுள்ள தொலைக் காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டது.
லொம்பார்டி பிராந்தியத்துக்கான வேட்பாளர்கள் பட்டியலில் நிகோலி மினெற்றியு டன் பெர்லுஸ்கொனியால் அளவையாளராக நியமிக்கப்பட்ட பிரான்செஸ்கோ மக்னானோ, பிரதமருக்கு சொந்தமான ஏசி மிலான் உதைப்பந்தாட்ட கழகத்தில் உடலியல் சிகிச்சையாளராக பணியாற்றும் ஜியோர்கி யோ புரிசெல்லி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
பெர்லுஸ்கொனியும் (Berlusconi) அவரது முன்னாள் மனைவி வெரோனிக்கா லாரியோவும் (Veronica Lario)
பெர்லுஸ்கொனியின் இளம் பெண்களுடனான பாலியல் தொடர்புகளால் அதிருப்திய டைந்த அவரது மனைவி வெரோனிக்கா லாரியோ (53 வயது), கடந்த வருடம் அவரை விவாகரத்து செய்வதாக அறிவிப்புச் செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக