பிறவியிலேயே இருதயத்தில் ஏற்படும் சில கோளாறுகள்தான் இந்த "ப்ளூபேபி'க்கான காரணம். அதாவது, பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு இருதயத்தில் நான்கு விதமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதைத் தான் "டெட்ராலஜி ஒப் ஃபேலட்' என்கின்றனர்.
இருதயத்திலே உள்ள நான்கு அறைகளில் கீழ் அறைகளுக்கு இடையில் உள்ள (வலது மற்றும் இடது வென்ட்க்கிள்) சுவரில் ஓட்டை விழுந்து, அறைகளுக்கு இடையே இரத்தம் கலந்துவிடும். வலது தமனியும், இடது தமனியும் இடம் மாறியிருக்கும். இரு தமனியும் ஒரே அறையில் இடம் பெற்றிருக்கும்.
இந்தக் குறைபாடுகளுள்ள குழந்தைகள் தான் "ப்ளுõ பேபி' எனப்படும் விநோத வியாதிக்கு ஆளாகின்றன. ஒக்ஸிஜன் அதிகமுள்ள இரத்தம் நல்ல சிவப்பு நிறத்திலும், குறைவாக உள்ள இரத்தம் கருநீல நிறத்திலும் இருக்கும். இந்த குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளின் உடல் ஊதா நிறத்தில் இருக்கும்.
கறுப்பான குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு இருந்தால், வெளிப்படையாகக் கண்டறிவது சுலபமில்லை. குழந்தை பிறந்த மூன்று மாதத்தில், இந்தக் குறை பாடு வெளியே தெரியவரும். சில குழந்தைகள் அழுதால், உடல் நீல நிறத்துக்கு மாறும். தொடர்ந்து அழுதால் மயங்கி, உணர்விழந்துவிடும்.
உறைந்த நிலையில் இரத்தம் இருக்கும் என்பதால், மூளைக்குச் செல்லும் இரத்தம் குறைந்து வலிப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இந்த பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்காத நிலையில், சில குழந்தைகள் உணர்விழந்த நிலையிலேயே உயிழக்கும் அபாயம் உண்டு.
இந்த பாதிப்புள்ள குழந்தைகளின் இருதயம் துடிக்கும் சத்தம் லப்டப் என்று இருக்காது. இடையிடையே "கிர்ர்ர்' என்ற சத்தம் வரும். இருதயப்பகுதியின் மேல் கையை வைத்தாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்த்தால் மிகத் தெளிவாக இதைக் கண்டுபிடித்து விடலாம். டாக்டர் மட்டுமன்றி நேர்ஸ்களும் கூட இதை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.
எக்ஸ்ரே, இ.சி.ஜி. எக்கோகார்டியோகிராபி, ஆஞ்சியோ சோதனைகள் மூலமாக இதை தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். மூன்று வயதுக் குழந்தையில் இருந்து 30 வயது வரையிலான இளைஞர் வரை பலருக்கு "ப்ளூ பேபி' பாதிப்பு உண்டாகலாம் என்பது தான் ஆச்சரியமான விஷயம். இந்த பாதிப்பை ஆபரேஷன் செய்து எளிதாகக் குணப்படுத்தலாம்.
தென்னிந்திய கே.ஜி மருத்துவமனையில் இதுவரையிலும் "ப்ளுபேபி' பாதிப்புக்குள்ளான இரண்டாயிரம் குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை செய்யப்பட் டுள்ளது. எல்லாக் குழந்தைகளுமே ஆரோக் கியமாக இருக்கின்றனர். இத்தகைய பாதிப்புக் குள்ளாகும் குழந்தைகளுக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் 10 வயதைத் தாண்டுவதே சிரமம். சிலர் மருத்துவ அதிசயமாக 30 வயதையும் தாண்டி இருப்பதுண்டு.
ஆனால் அவர்களால் எந்த செயலையுமே செய்ய முடியாது. வேகமாக நடக்கக்கூட முடியாது. இதனால் இந்த அறிகுறிகள் தெரிந்தால் அந்தக் குழந்தைகளுக்கு உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய, உரிய மருத்துவர்களை அணுகவேண்டியது பெற்றோரின் கடமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக