ஆண்களை பொறுத்த வரை சுமார் பதினொன்றரை வயதில் செகண்டரி செக்சுவல் கேரக்டர் என்று சொல்லக்கூடிய சில பாலுறுப்பு வளர்ச்சியை அடைகிறார்கள். இந்த உறுப்பு வளர்ச்சியானது 15 வயதை எட்டும் போது முழு வளர்ச்சி பெறுகிறது.
பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு சிலருக்கு எட்டு வயது முதலே தொடங்கி விட வாய்ப்பு உண்டு. உடலில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கொழுப்புச்சத்து சேர்ந்த பிறகு தான் மாதவிலக்கு என்ற உதிரப்போக்கு நடக்கும். கொழுப்பு அந்தக்குறிப்பிட்ட அளவுக்கு உடலில் சேர வில்லையென்றால் மாத விலக்கு தாமதமாகத்தான் வரும்.
சிறு வயது முதலே விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு கடும் உடற் பயிற்சி செய்து வரும் பெண்கள், மற்றும் நடனங்களில் ஆர்வம் காட்டி ஆடிவரும் பெண்களும் தங்கள் உடலில் கொழுப்பைச் சேர விடாமல் உடலுக்கு பயிற்சி கொடுப்பதால் உடலில் கொழுப்புச் சேராமல் அவர்களுக்கு மாதவிலக்கு வர மற்ற சாதாரணப் பெண்களை விட அதிக காலம் எடுக்கிறது.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக