தென் கிழக்கு நகரான ஐவன்சிஸி லுள்ள மருத்துவமனையில் மகளிர் நோயொன்றுக்கான சத்திர சிகிச்சையை மேற்கொண்ட ஸ்டென்கா கொபெக்கோவா (Zdenka Kopeckova, 66) என்ற மேற்படி பெண், அந்த சத்திர சிகிச்சையையடுத்து கடுமையான வயிற்று வலியால் துன்பப்பட்டார்.
இது தொடர்பாக ஸ்டென்கா கொபெக்கோவா விபரிக்கையில், ""எனக்கு தாங்கொண்ணா வலி ஏற்பட்டது. எவருமே எனக்கு உதவ முடியாது என்பது புரிந்தது.
அதனால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். நான் ஒரு கிண்ண மதுவில் மாத்திரைகளைக் கலந்து குடித்தும் தூக்கிட்டும் தற்கொலை செய்ய முயற்சித்தேன்'' என்று கூறி னார். இறுதியில் தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் அவர் சென்ற போது, அவர்கள் தமது தவறை மறைக்கும் கமாக வலி நீக்கி மருந்துகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவர் தனது வயிற்றில் என்ன உள்ளது என்பதை அறிய எக்ஸ்ரே படம் எடுக்க மருத்துவர்களை கோரிய போது, அவரை அவசியமின்றி "எக்ஸ்ரே' கதிர்ப்புக்கு உள்ளாக்க தாம் தயாராக இல்லை என அவர்கள் தெவித்துள்ளனர்.
இந் நிலையில் இவ்விவகாரம் மருத்துவ நிலைய பணிப்பாளரிடம் கொண்டு செல்லப்பட்ட பின்பே உண்மை அம்பலமாகி யுள்ளது.
அதனையடுத்து உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற் கொண்டு கொபெக்கோவா வின் வயிற்றிலிருந்த மருத்துவ உபகரணம் அகற்றப்பட்டுள்ளது.
மேற்படி மருத்துவ உபகரணம் தமது மருத்துவமனைக்கு யது எனத் தெவித்த மருத்துவம னைப் பணிப்பாளர் ஜரோமிர் ஹறுப்ஸ், மேற்படி தவறைச் செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
இந் நிலையில் கொபெக்கோவா மேற்படி மருத்துவமனையிட மிருந்து பெருந்தொகை நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக