பித்தானியாவைச் சேர்ந்த ரேய் கொஸ்லிங் (Ray Gosling 70 வயது) என்ற இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், கடந்த திங்கட்கிழமை "பி பி சி" ஊடகத்தில் வெளியான "இன்ஸைட் அவுட்' நிகழ்ச்சியில் தனது ஓரினச் சேர்க்கை காதலனை கருணைக் கொலை செய்ததாக தெரிவித்ததையடுத்தே கைது செய்யப்பட் டுள்ளார்.
மருத்துவ சிகிச்சை எதுவும் பயனளிக்காத நிலையில் தனது அன்புக்குய காதலன் வேதனையில் துடிப்பதை பார்க்கப் பொறுக்காதே மேற்படி கருணைக் கொலை செய்ததாக அவர் கூறினார்.
"நோயில் படுத்த படுக்கையாக இருந்த எனது காதலனை காப்பாற்ற வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். எனக்கு வேறு வழி தெயவில்லை. அருகிலிருந்த தலையணையை எடுத்து அவனின் முகத்தில் அழுத்தினேன்".
ஒரு சில வினாடிகளில் அவனது உயிர் பிரிந்து விட்டது. இது நான் அவனுக்கு செய்த மாபெரும் உதவி என நான் கருதுகிறேன்.அவனைப் பிரிந்து நான் துயரம் அடைந்திருக்கிறேன்.
ஆனால் அத்துயரத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் நோயின் பாதிப்பை அவன் எத்தனை நாள் தாங்குவது?'' என்று அவர் வினவினார்.
சட்ட மற்றும் அற ரீதியான தற்கொலைக்கு உதவுவது என்பது தொடர்பில் மேற்படி "பி பி சி" நிகழ்ச்சியில் விமர்சனம் செய்கையிலேயே அவர் இத்தகவலை தெவித்தார்.
ரே கொஸ்லிங்கிற்கு எதிரான குற்றம் நிரூ பிக்கப்படும் பட்சத்தில், அவர் ஆகக் கூடி யது 14 வருட சிறைத்தண்டனையை எதிர் கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக