திருமணத்திற்கு முன்பு தனது ஆண்மையை பெண்ணிடம் சோதிப்பது, லேபில் ஸ்பெர்ம் கவுண்ட் செய்து பார்ப்பது போன்றவை யெல்லாம் அதிகமாகிவிட்டது. பெரும்பாலான இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். இது ஒன்றும் தவறு அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.
இயற்கைக்கு மாறாக இத்தகையச் செயல்களைச் செய்வதால் அதில்தான் நாட்டம் இருக்கும். எனக்கு உறவுகொள்ள பிடிக்கவில்லை என்று திருமணமாகியும் சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். புணர்ச்சியில் ஈடுபட்டாலும் திருப்திப்படுத்த முடிவதில்லை.
ஆண்மைக்கு பலம் முக்கிய அம்சம். சிறுவயதில் ஒரு கவர்ச்சியான பெண் போஸ்டரைப் பார்த்தால் இருக்கும் உணர்ச்சி வயது ஆக ஆகக்குறையும். இதில் ஹார்மோன்களின் பங்குமுண்டு.
அளவு சீராக இருந்தால் என்றும் இளமைதான். வாரம் ஓரிரு முறை இருக் கலாம். இதற்காக சிகிச்சைக் கொடுக்கா தீர்கள். நமது மூத்திரப்பை நிறைந் திருக்கும்போது விரைப்பு அதிகமாக இருக்கும். எனவேதான் அதி காலையில் விறைப்புடன் இருக்கும். இதை வைத்தே உங்கள் ஆண்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து விடலாம்.
மது, போதை, சர்க்கரை வியாதி, பால்வினை நோய்கள் இருந்தால் ஆண் மைக் குறைவு இருக்கும். இதுகூடக் குறைவுதான். மனப்பிராந்தியை விட்டு விடுங்கள். குறை இருந்தால் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெறுங்கள். மனம், உடல் வளர்ச்சி சீராக இருந்தால் தான் ஆண்மை சிறப்பாக இருக்கும்.
இவ்வாறே, சிலருக்குத் துரித ஸ்கலிதம் ஏற்படுவதாலும் ஆண்மைக் குறைந்துவிட்டதோ என சிலர் பயப்படுவார்கள். உண்மையில், இவ்வாறு இருந்தால் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களுடைய ஹார்மோன்கள் நன்கு சுரந்து அவ்வப்போது உங்கள் சூழ் நிலைக்கேற்ப ஏற்படும் பால் உணர்வுகள் தூக்கத்தின்போது துரித ஸ்கலிதமாக பிரதிபலிக்கிறது. தினசரி ஏற்பட்டால் கெடுதல்தான். விந்து சக்தி உடலை விட்டு வெளியேறும்போது களைப்பு, வேலையில் நாட்டமின்மை போன்றவை இயல்பான வாழ்க்கையை பாதிக்கும்.
இவ்வாறு இருந்தால் மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். பாலி யல் உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். பாலுணர்வைத் தூண்டும் படங்கள் பார்ப்பதை தவிருங்கள்.
மலச்சிக்கல், சிறுநீர்ப் பாதையில் தொற்றுநோய் கிருமிகள், புகைப்பழக்கம், மதுப் பழக்கம் போன்றவை இருந்தாலும் துரித ஸ்கலிதம் ஏற்படும். உடல் குறைகளை தெரிந்துகொள்ள அருகிலுள்ள ஹோமியோபதி மருத்துவர் மூலம் உடல் குறிகளுக்கேற்ப தேர்ந்தெடுத்து அளிக்கும் மருந்துகளை எடுத்து வாருங்கள். குணம் கிடைக்கும்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக