டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் காரணமாகத்தான் ஆண்களிடம் முரட்டுத்தனம், கனமான பொருட்களைத் தூக்கும் பலம், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காதத்தன்மை போன்ற எல்லா குணங்களும் அமைகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த ஹார்மோன் குறையும்போது செக்சில் நாட்டம் குறைதல், மன நிலைகளில் மாற்றம், உடல் நலன்களில் ஏற்ற இறக்கம், மன அழுத்தம், தசைகள் கரைதல், காரணமே இல்லாமல் மனச்சோர்வு, உறுப்பு விரைக்காத நிலை, உறக்கமின்மை, மறதி, பதற்றம் போன்றவை ஏற்படும்.
பொதுவாக இந்தப் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் அளவுக்கு அதிகமாக குண்டாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடற் பயிற்சி செய்யாதவர்கள், புகைப்பவர்கள், மிக அதிகமாகக் குடிப்ப வர்கள் என்ற இயல்பை உடையவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹார்மோன் இழப்பை செய்ய பல்வேறு மாத்திரைகள் மற்றும் ஊசிகளும், ஜெல்களும் கூட உள்ளன.
டெஸ்டோஸ்டீரான் ஊசியின் பக்க விளைவாக கல்லீரல் பிரச்சினை, ரத்தம் கெட்டிப்படுதல், புராஸ்டேட் கட்டிகள் துரிதமடைதல் போன்றவையும், மாத் திரைகளால் நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் நிலையும், கல்லீரல் சேதமும், ஜெல் மற்றும் பட்டிகளால் புராஸ்டேட் பிரச்சினைகளும் அதிகரிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
வயதாக வயதாக இந்த ஹார்மோன் சுரப்புக் குறைவடையும்போது, பலவித பாதிப்புகள் உடலளவிலும், மனதளவிலும் தோன்றுவதால், நடுத்தர வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக