குறிப்பாக திருமணத் திற்கு பின்பாக சில குறைபாடுகளை அவர்களாக ஓரளவு அனுமானித்துக் கொண்டு மருத்துவர்களை தேடி செல்கின்றார்கள். அப்படி வருகின்றபோது எந்தவித கூச்சமும் இன்றி என்னால் மனைவியுடன் முழுமையாக இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை எனது ஆணுறுப்பில் ஏதாவது குறைபாடு உள்ளதா? என்று கேட்டுக் கொண்டு அதற்குரிய சிகிச்சை பெறவும், திருமணமாகி சில ஆண்டுகளாகி விட்டது எனினும் எனக்கு குழந்தையில்லை, எனது பிறப்புறுப்பில் ஏதேனும் கோளாறு இருக்கின்றதா டாக்டர் என்று கேட்டு சிகிச்சை பெறவும் பலர் செல்கிறார்கள். நகர்புறம் மட்டுமல்ல கிராமப்புறத்தில் இருக்கின்றவர்கள்கூட இத்தகைய பிரச்சினையை களைந்துகொள்ள மருத்துவர்களை தேடி செல்கிறார்கள். மேலும் தம்பதிகளாக குழந்தையின்மைக்கு அவரவர் ஊர்களில் உள்ள குடும்ப டாக்டர்களையோ அல்லது மகப்பேறு மருத்து வர்களையோ பார்க்கின்றபோது கணவன் மனைவி இருவரையும் பரிசோதித் துவிட்டு பெண்ணிடம் எந்த குறைபாடும் இல்லை, ஆணிடம்தான் ஏதோ குறை பாடு உள்ளது என்று பரிந்துரை செய்து அனுப்புவதும் உண்டு. அப்படி வருபவர்களுக்கு எல்லா சோதனைகளும் செய்து பார்க்கின்ற போது அவர்களின் குறை கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
ஆணுறுப்பில் உள்ள குறைபாட்டை திருமணத்திற்கு முன்பே கண்டறிய முடியுமா?
சிறு குழந்தைகளாக ஆண் குழந்தைகள் இருக்கின்ற போது புத்தி சாலியான பெற்றோர்கள் இதனை கண்டுபிடித்து எங்களிடம் அழைத்து வரு வதுண்டு. சிறுநீர் சரியாக போகவில்லை, முன்புற சதை அடைத்து கொண்டுள்ளது, அல்லது ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் இரண்டு விரைகளில் ஒன்று தான் இருக்கின்றது என்பதை சில பெற்றோர்கள் கண்டுபிடித்து விடுகின்றனர். ஆண் குழந்தையின் பிறப்புறுப்பு சரியாக உள்ளதா என்பதை எல்லா பெற்றோர்களும் பார்க்க வேண்டும். அப்படி பார்த்து ஏதாவது சந்தேகம் இருந்தால் யுராலாஜிஸ்டுகளை அணுக வேண்டும். குழந்தை பிராயத்திலேயே இத்தகைய குறைபாடு இருப்பதை கண்டறிந்தால் மிக எளிதில் சிகிச்சையளித்து குணப்படுத்திவிடலாம். ஆனால் பலர் திருமணத்திற்கு பின்னரே இந்த குறைபாடுகளை உணர்ந்து டாக்டர்களை நாடி வருகின்றனர்




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக