அவனைக்காணும் போதெல்லாம், ஏதோ ஒரு எதிரியைப் பார்ப்பது போலப் பார்ப்பாள்.
கணவன் படுக்கை அறைக்கு வரும் முன்பே தான் அங்கு சென்று படுத்திருப்பாள். அவன் அங்கு வந்து அவளை நெருங்கி இழுத்தால், முதுகைக்காட்டிக் கொண்டு படுப்பாள். அடிக்கடி, ஆற்றாமையால் பெருமூச்சு விட்டுக்கொள்வாள். கிட்ட நெருங்கினால் முழங்கையால் இடித்துத் தள்ளுவாள். தன் கணவனிடம் கூட தனது மேனி அழகைக் காட்டிக்கொள்ள விருப்பம் இல்லாதவளாய், பெரிய ஆடை அணிந்து, அங்கத்தை சுத்தமாக மறைத்துக்கொள்வாள். அவன் அவளைக்கூடிக்கலக்க விருப்பம் தெரிவித்தால், உன் தகுதிக்கு வேறு எவளையாவது போய் கூடிக் கலந்து கொள் என எக்காளமாகப் பேசுவாள். கணவன், படுக்கையில் அமர்ந்து வெற்றிலை மடித்துக்கொடுத்தால், அதை வாங்கி ஆசையோடு தின்னாமல், அவன் கையிலிருந்த படியே தட்டி, அது மண்மீது படும்படிச்செய்வாள்.
அவன் அவளிடத்தில் இனிமையான சொற்களைப் பேசும்போது, ஈவு இரக்கமின்றி, கொடூரமான வார்த்தைகளை அள்ளி வீசுவாள். கணவன் உண்மையிலேயே எந்தத் தவறும் செய்யாமல் இருந்தாலும் அவன் மீது பொய்க்குற்றம் சாட்டி, அவதூறு பேசுவாள். இது போன்ற நடத்தைகளைக் கொண்டிருக்கும் பெண்ணிடம் ஒரு ஆண் எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கை வைத்துக்கொள்ளக்கூடாது என எச்சரிக்கிறது காமசூத்திரம்.
தவிர, எந்தெந்தப் பெண்கள் உடலுறவு கொள்ளத் தகுதியற்றவள் என்பதையும் காமசூத்திரம் கோடிட்டுக்காட்டுகிறது....அவர்கள் எப்படிப்பட்ட பெண்கள் எனக் கொஞ்சம் பார்க்கலாமா...?
மாதவிலக்காகி இருக்கும் பெண்கள், குழந்தை பெற்ற (புதிதாக) பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள், வெகு தூரம் நடந்து அலுத்துப்போனவள், தன்னை மறக்கும்படி மதுபானம் அருந்தி போதையில் மிதக்கும் பெண், நாட்டியம் ஆடிக் களைப்புடன் இருப்பவள், கொடிய பால்வினை நோயால் பீடிக்கப்பட்டவள், 6 மாதக் கர்ப்பிணியாக இருக்கும் பெண், கணவனை விட்டு, உடலுறவுக்காக அடுத்த ஆண்களை நாடும் பெண்கள், அதிகப்பசியால் வருந்துபவள், பருவம் அடையாத பெண்கள், உடலில் துர்நாற்றம் வீசும் பெண்கள், வயதில் கணவனை விட மூத்தவள், கணவனிடத்தில் எப்போதும் கோபமாகப் பேசுபவள், இது போன்ற நடத்தையை உடைய பெண்களை ஆண்கள் ஒரு போதும் கூடிக்கலக்கக்கூடாது என்கிறது காமசூத்திரம்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக