திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்க முயற்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!

'விதியேஇ விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ' என்று மகா கவிஞன் பாரதி தன் இனத்தின் நிலை கண்டு கண்ணீர் விட்டான். இன்றும் அதே அங்கலாய்ப்புடன் தமிழினம் கண்ணீர் சிந்த வேண்டிய நிலையே விதியாகிவிட்டது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும் நம்பிக்கை சிதையாமல் நிமிர்ந்து நிற்கும் புலம்பெயர் தமிழினத்தின்மீது புதியதொரு தாக்குதல் எதிர்பாராத திசையிலிருந்து நிகழ்த்தப்பட்டுள்ளது. தாயக மண்ணில் சிதைக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தை தூக்கி நிறுத்தப் போராடிவரும் புலம்பெயர் சமூகத்தின் மன உறுதி மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா சம்பந்தன் அவர்களே தொடுத்திருப்பது தமிழர் மனங்களைக் கொதி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களத்தில் நின்று போராடிய விடுதலைப் புலிகள்இ சர்வதேச தளத்தில் தமிழீழ மக்களுக்கான நியாயங்களைக் கொண்டு செல்லும் அரசியல் இயக்கமாக விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇ இன்று முகவரி இழக்கும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷஇ நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றியை ஈட்டுவதன் மூலம் தமிழ் மக்களின் மீதான சிங்கள தேசத்தின் மேலாதிக்கத்தைத் தெடரும் அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளார்.
இதற்குச் சமாந்தரமாகஇ தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்க முயற்சி செய்யும் முயற்சியை இந்தியா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக மேற்கொண்டு வருகின்றது. 1947 அக்ரோபரில் பாக்கிஸ்தான் ஆதரவு சக்திகளின் கைகளுக்குள் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் இன்றுவரை தமது விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். அந்த நிலைக்கீடான முயற்சியே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுஇ பானைக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த கதையையே நினைவு படுத்துகின்றது. இதனால்தான்இ இலங்கைத் தீவில் உருவான சிங்கள - தமிழ் முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தமிழீழ நிலப்பரப்பில் கால் பதிக்க முயன்ற இந்தியாவை விடுதலைப் புலிகள் அங்கிருந்து பலோத்காரமாக வெளியேற்றினார்கள்.

தற்போதுஇ ஈழத் தமிழர்களின் தற்காப்புப் பலம் சிதறடிக்கப்பட்ட நிலையில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக மீண்டும் தமிழீழ மண்ணில் நிலை கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது. வடக்கு - கிழக்காகத் தமிழர் தாயகம் பிரிக்கப்பட்ட நிலையில்இ கிழக்கு வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழர் தாயகத்தை மீண்டும் ஒன்றிணைக்க மறுத்துவரும் மகிந்த ராஜபக்ஷவை அச்சுறுத்தி 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமூலாக்க முயன்றாலும்இ முன்னைய ஏற்பாட்டின் பிரகாரம் வடக்குடன் கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டுமாயின் கிழக்கில் அதற்கான வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில்இ கிழக்கின் நடாத்தப்படும் எந்த வாக்கெடுப்பும் தமிழர்களுக்குச் சார்பானதாக இல்லாத அளவிற்கு சிங்கள குடிபரம்பல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படிஇ இலங்கைத் தீவினூடான சீனாவின் முற்றுகையைத் தடுத்து நிறுத்த முயலும் இந்தியா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக வடக்கில் நிலை கொள்ள முயற்சிக்கிறது. இதற்காகஇ உலக வழமைக்கு மாறாக டெல்லியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கான ஆலோசனையும்இ அங்கீகாரமும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரிக்கும் இந்தியாஇ இலங்கைத் தீவைத் தொடர் கொதிநிலைக்குள் வைத்திருப்பதன் மூலம் தனது தெற்காசியப் பிராந்தியத்தின் தலைமை நிலையைத் தக்க வைத்துக்கொள்ள பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. அதற்குப் பெரும் தடையாக இருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் யுத்தத்தில் சிங்கள இனவாதத்துடன் கரம் கோத்துக்கொண்ட இந்தியாஇ அதன் காரணமாக ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாகிப் பெருத்து வரும் இந்திய எதிர்நிலைவாதத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக இல்லாமல் ஆக்குவதற்குப் பெரு முயற்சி எடுத்து வருகின்றது. ஈழத் தமிழர்கள் மீதான இந்த இந்திய ஆக்கிரமிப்புவாதம்இ தமிழீழத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு இரத்தம் சிந்தும் தேசமாகவே மாற்றப் போகின்றது.

தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பதற்கான ஈழத் தமிழர்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர்இ அதுவரை தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா தனக்கான ஊடுருவு தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்வரைஇ அவர்கள் இட்ட பணிகளை மட்டுமே முடித்துப் பழகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தற்போது இந்தியா இட்ட பணிகளை நிறைவேற்றும் கட்சியாக மாற்றம் பெற்றுவிட்டது. எப்படியாவதுஇ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் சக்தியாகத் தொடர வைப்பதற்கு முற்பட்ட தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் திரு. சம்பந்தர் அவர்களது அண்மைக்கால நடவடிக்கைகளால் கொதித்துப்போயுள்ளார்கள்.

திரு. சம்பந்தர் அவர்கள் சனிக்கிழமை கனடியத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த கருத்துக்கள் அவர் மேற்கொள்ளவிருக்கும் துரோகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஷவெற்றுக் கோசங்கள் எழுப்பிவிட்டுஇ செயற்படாமல் இருப்பவர்களுக்கு; வேட்பாளர் நியமனம் வழங்கப்படமாட்டாதுஷ என்று உண்மையான தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கும் தனது நிலைப்பாட்டிற்கு விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும்இ நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு சம்பந்தன் அவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் தான் ஆற்றிய பணியினைப் பட்டியலிடாமல் தவிர்த்துக் கொண்டார். தமிழ்த் தேசிய உணர்வாளர்களான திரு. கஜேந்திரன்இ திருமதி பத்மினி சிதம்பரநாதன்இ திரு. சிவாஜிலிங்கம் போன்றவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலங்களைத் தடுத்து நிறுத்துவதற்காகப் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுடன் இணைந்து போராட்டங்களைஇ ஊர்வலங்களைஇ மாநாடுகளையாவது நடாத்தினார்கள். திரு. சம்பந்தன் அவர்கள் பாடசாலைச் சிறுவர்கள் அதிபரிடம் முறையிடச் செல்வது போல்இ அடுத்துத் தன்னை வழிநடாத்தக் கூடிய இந்தியாவிடம் அவ்வப்போது முறையிட்டதைத் தவிர உருப்படியாக எதனையும் செய்யவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் முள்வேலி முகாம்களுக்குள் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் சிறை வைத்துச் சித்திரவதை செய்யப்பட்ட போதுஇ அங்கு சென்று பார்வையிடத் தமக்கு அனுமதி வழங்கவில்லை என்பதற்காகவாவது சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக அறவழிப் போராட்டத்தைக் கூட மேற்கொள்ளவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும்இ அதன் முன்னரும்இ பின்னரும் நடந்தஇ நடைபெற்று வருகின்ற சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக அயர்லாந்தில் இடம்பெற்ற நீதி விசாரணையில் தமிழீழ மக்களது அரசியல் சக்தியின் தலைவர் என்ற தகுதி வழங்கப்பட்ட திரு. சம்பந்தன் அவர்கள் சாட்சியம் அளிப்பதை தவிர்த்துக்கொண்ட கொடுமையையும் தமிழ்த் தேசியம் சிதைக்கப்படக் கூடாது என்ற தமிழீழ மக்களின் சிந்தனையால் மன்னிக்கப்பட்டதை சம்பந்தன் அவர்கள் இலகுவாக மறந்துவிட்டார்.

திரு. சம்பந்தன் அவர்களது இந்த இந்திய சார்பு நிலைப்பாடானது ஈழத் தமிழர்களுக்கு எதையும் வழங்கப் போவதில்லை. தமிழீழக் கோட்பாட்டை நிராகரிக்கும் இந்தியாவின் கைக்கூலிகளாக மாறுவது தமிழீழ மக்களையும்இ மண்ணையும் மீட்பதற்கு உதவப் போவதில்லை. எனவேஇ தமிழ்த் தேசிய உணர்வாளர்களுடன் மோதுவதைத் தவிர்த்துஇ தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் சாத்தியமான பாதையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பயணிக்க வேண்டும். தவறினால்இ மக்கள் சக்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இரக்கம் காட்டாமல் தண்டிக்கும் என்பதை தவறாகப் பயணிக்க முற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழநாடு
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல