என் நிசப்த இரவுகளில்
இருட்டின் சங்கீதம்
இசைத்துக்
கொண்டிருக்கின்றேன்...!
இலட்சியம்
அலட்சியம் செய்யப்படுகின்ற
எனதான வாலிபம்
தோல்வித் தெருக்களில்
தோள் கோர்த்து
உலாவுகின்றன...!
ஒரு மயான
அமைதியின் போது
இதயம் சலனப்படுகிறது
என் மனக் கண்ணில்
கற்கள் எறியப்படுகின்றன...!
வென்று விடுவேன்
என்ற வேகத்தில்
வாழ்க்கைப் பந்தயத்தில்
ஓடிக் கொண்டிருக்கின்றேன்
வெற்றியைத் தவிர
மற்ற அனைத்துமே
என்னை வேடிக்கை பார்த்து
சிரிக்கின்றன...!
ஏதோ என்
இரவுகள் பிரசவிக்கும்
கனவுகளின் கைங்கரியத்தில்
ஜீவிதம் நகர்கிறது
எதுவித ஜீவனோபாயம்
இல்லாமலேயே...!
ஆக்கம்:எஸ்.ஜனூஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக