அம்ஸ்டர்டாமிலுள்ள ஸிபோல் விமான நிலையத்தில் 101 பயணிகளுடன் ஜெட் விமானத்தை செலுத்த தயாரான வேளை 41 வய்தான சுவீடனைச் சேர்ந்த மேற்படி போலி விமானி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரென்டன் விமான சேவைக்கு (Corendon Airlines) சொந்தமான இந்த "போயிங் 737' விமானமானது துருக்கியின் அங்காரா நகருக்கு புறப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம், பிரித்தானியா, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விமான சேவைக் கம்பனிகளில் மேற்படி போலி விமானி கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் அவர் விமான சேவைகளால் நடத்தப்பட்ட விமானிகளுக்கான பரீட்சைகளிலும் ஒருவாறு சித்தியடைந்துள்ளார்.
எனினும் இந்த விமானி விமானங்களில் பிறிது விமானிகளுடன் இணைந்தே சேவையாற்றி வந்ததாகவும் தனித்து சேவையாற்ற வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக