கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 28) என்பவரே தன் மகளை கொலை செய்ததற்காக மேற்படி பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றி வருபவர் ராஜமாணிக்கம் இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 24). இவர்களது மகள் ஜீவிதா (10 மாத குழந்தை) கடந்த 2ஆம் தேதி, நடைபயிற்சி வண்டியில் விளையாடிய போது மாயமானாள்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ஜீவிதாவை கடத்தியதாக செய்தி பரவியது. பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் ராஜமாணிக்கம், பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த புதன்கிழமை வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து குழந்தை சடலமொன்றை மீட்டெடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பினர். பின்னர் குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது "கணவர் ராஜமாணிக்கம் குழந்தையை கண்டாலே எரிந்து விழுவார்' என சுப்புலட்சுமி தெரிவித்தார்.
இதில், சந்தேக மடைந்த பொலிஸார், ராஜமாணிக்கத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கிணற்றில் வீசி தானே கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குலம் வரு மாறு இந்த குழந்தை பிறந்ததும், நான் விபத்தில் சிக்கினேன். இதையடுத்து, ஜோதிடரிடம் ஆ லோசனை கேட்டேன். அவர்,"குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இந்த குழந்தையால் உனக்கு தொடர்ந்து பிரச்சினை ஏற்படும்' எனக் கூறினார். இதனால், எனது குழந்தை மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதை கொலை செய்வதாக முடிவெடுத்தேன். அதன் பிரகாரம் கடந்த 2ஆம் திகதி வழக்கம் போல வேலைக்கு சென்று எனது வீட்டிற்கு பின்புற தெருவில், புதிதாக கட்டும் வீட்டிற்கு இரும்பு கம்பி லோடு ஏற்றிக் கொண்டு வந்தேன்.
வண்டியில் இருந்து லோடு இறக்கிய போது, நான் மட்டும் பின்புறம் வழியாக வீட்டிற்கு வந்து, வெளியே நடைபயிற்சி வண்டியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று, கிணற்றில் வீசினேன்.
பின், மீண்டும் வேலைக்கு சென்று விட்டேன். மனைவி சந்தேகப்படாமல் இருக்க பொலிஸில் புகார் கொடுத்தேன் என்றார்.
மேற்படி சம்பவத்தில் தானே குற்றவாளி என ராஜமாணிக்கம் ஒப்புக் கொண்டதற்கமைய அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக