சனி, 6 மார்ச், 2010

ரஞ்சிதா தற்கொலைக்கு முயன்றாரா?

இணயங்களில் வெளியான செய்திகலின் தொகுப்பு


நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்


பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீடர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்ற நித்ய தர்மானந்தா புகார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோவை ரகசியமாக எடுத்த இவர் இன்று சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் முன் தஞ்சம் அடைந்தார்.

அப்போது நித்யானந்தா-ரஞ்சிதா முழு லீலைகள் அடங்கிய வீடியோ சிடியை கமிஷ்னரிடம் தந்தார்.

பின்னர் அவர் அளித்த புகாரில், ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா சீரழித்துள்ளதாகவும், ஒரு கனடா நாட்டுப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நித்யானந்தாவிடம் சீடர்கள் ஏமாறுவதைத் தடுக்கவே இந்த வீடியோவை எடு்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


வழக்குகள் பெங்களூருக்கு மாற்றம்:


இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,

லெனின் கொடுத்த புகாரின்பேரில் சாமியார் நித்யானந்தா மத உணர்வை துன்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல், மிரட்டல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் லெனின் நித்யானந்தரின் படுக்கை அறை காட்சிகள் அடங்கிய சி.டி. ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் வழக்குகள் அனைத்தும் அந்த மாநில போலீசாருக்கு மாற்றப்படும்.

இதற்கான ஏற்பாடுகள் தமிழக டிஜிபி மூலம் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக கர்நாடக போலீசாருக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் தமிழக போலீசார் செய்வார்கள் என்றார்.

பர்மா பஜாரில் ரஞ்சிதா-நித்யானந்தா சி.டிக்கள் அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, 'அப்படியா' என்றார் கமிஷ்னர்.

லெனின் தந்துள்ள சாமியாரின் சி.டி. எவ்வளவு நேரம் ஓடுகிறது என்று கேட்டதற்கு, நான் சி.டி.யை பார்க்கவில்லை என்றார். அப்போது அருகில் இருந்த துணைக் கமிஷனர் ஸ்ரீதர் கூறுகையில், இந்த சிடி இரண்டரை மணி நேரம் ஓடுகிறது என்றார்.

சாமியாருடன் படுக்கை அறையில் இருப்பது நடிகை ரஞ்சிதா தானா என்று கேட்டதற்கு 'ஆம், அவர் ரஞ்சிதா தான்' என்று கமிஷ்னர் பதிலளித்தார்

நித்யானந்தரை சிக்க வைத்த சக்தி?

ரஞ்சிதாவும், நித்யானந்தரும் ஹரித்துவார் பக்கம் ஓடியிருக்கலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்!
சில தமிழ்சினிமா முக்கியஸ்தர்கள் ரஞ்சிதாவை காப்பாற்றவும், அவருக்கு ஆறுதல் சொல்லவும் துடிக்கிறார்களாம். ஆனால் அவர்களுக்கே சிக்கவில்லை ரஞ்சிதா.

இந்நிலையில் ராகசுதா, யுவராணி, உள்ளிட்ட வேறு சில நடிகைகளும் கலக்கமடைந்திருக்கிறார்களாம். ருசி கண்ட பூனை பசியில்லாவிட்டாலும் பாய்ந்திருக்குமே? அந்த வீடியோ கிடைக்குமா என்று லென்ஸ் வைத்துத் தேடிக் கொண்டிருக்கிறது மீடியாவும். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நித்யானந்தரை மாட்ட வைத்த சக்தி எது என்று கேள்வியும் எழாமல் இல்லை. நித்யானந்தர் தரப்பில் பிரேமானந்தா என்பவர் மீது குற்றம் சாட்டுக்கிறார்கள். அவரது கைங்கர்யம்தான் இது என்றும், வீடியோவில் இருப்பது அத்தனையும் கிராபிக்ஸ் என்றும் கூறுகிறது சாமியார் தரப்பு. (இவ்வளவு சிறப்பாக கிராபிக்ஸ் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இங்கு இருந்தால் ரஜினி, அஜீத் கால்ஷீட் இல்லாமலே அவர்களை வைத்து படம் எடுக்கலாம் போலிருக்கிறதே!)

கோடம்பாக்க பெரும்புள்ளிகளில் சிலர் தங்களுக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டதன்படி, நித்யானந்தத்திற்கும், கர்நாடக அரசியலை கலக்கி வரும் ஒரு பெரும் தலைவருக்கும் நெடுநாட்களாக பகை நிலவி வந்ததாம். அங்கு ஏராளமான நிலங்களை வாங்கி குவித்து வரும் அந்த தலைவர், ஒரே எதிரியாக பாவித்தது சாமியாரைதானாம். ஏன்? நில விவகாரத்தில் தலைவருக்கு போட்டியாக நிலத்தை வாங்கி குவித்தாராம் சாமியார். தலைவர் கண் வைத்த இடங்களையெல்லாம் அவரைவிட அதிக விலை கொடுப்பதாக கூறி கிரயம் செய்து கொண்ட சாமியார் மீது தலைவருக்கு செம கோபம். 75 ஏக்கரில் திராட்சை தோட்டமே இருக்கிறதாம் சாமியாருக்கு பெங்களூரில். அதுவும் தலைவருக்கு போக வேண்டிய இடம் என்கிறார்கள் அந்த முக்கிய புள்ளிகள்.

சாமியாரை அடக்க மட்டுமல்ல, ஒரேயடியாக அந்த ஊரைவிட்டே ஓட வைக்க நினைத்தார் தலைவர். சாமியாரின் மெய் காவலர்களை போல சுற்றி வரும் சிலரிடம் நைச்சியமாக பேசியே இந்த வீடியோ படத்தை எடுக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. (இப்போது அவர் நினைத்தது நடந்துவிட்டதல்லவா?)

இதற்கிடையில் நெடுநாட்களாக சாமியாருடன் பழகி வரும் ரஞ்சிதா, முதலில் ஆசிரமம் பக்கம் போனதே, தான் இயக்கப்போகும் டெலி பிலிமுக்கு பைனான்ஸ் கேட்கதானாம். அங்கு பாசிட்டிவான பதில் கிடைக்க அங்கேயே தங்கிவிட்டார் அவர். இன்னும் நெருக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து ஒரு டி.வி சேனலே துவங்குகிற அளவுக்கு திட்டம் போட்டார்களாம். அதற்கு பிள்ளையார் சுழி போடுவதற்குள் விதி செமத்தியாக போட்டு விட்டது இருவரையும்!

இன்னொரு சந்தேகத்தையும் கிளப்புகிறார்கள் கோடம்பாக்க புள்ளிகளில் வேறு சிலர். இந்த வீடியோவை எடுக்க சொன்னதே ரஞ்சிதாவாக இருக்கலாம். ஏனென்றால் முழு வீடியோவை பார்க்கும் போது சில காட்சிகள் சிந்திக்க வைக்கிறது. நித்யானந்தர் லைட்டை நிறுத்த முயல, ரஞ்சிதா அவரை தடுக்கிறார். பின்பு லைட் நிறுத்தப்பட்ட பின்பு ஒரு ஃபோகஸ் லைட்டை வேறு பக்கம் திருப்பி வைத்து கொஞ்சம் வெளிச்சம் பரவவும் விடுகிறார். கேமிராவுக்கு சாதகமாக செயல்படுகிறாரோ என்ற எண்ணத்தையே விதைக்கிறது இந்த செயல் என்கிறார்கள்.

ரஞ்சிதா தற்கொலைக்கு முயன்றாரா?

சாமியாருடன் உல்லாசமாக இருந்த ஆபாசப் படங்கள் வெளியாகிவிட்டதால், அந்த அதிர்ச்சியில் தற்கொலை க்கு முயன்றார் நடிகை ரஞ்சிதா என அவருக்கு ஆதரவான சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

பிரம்மச்சாரி மற்றும் பரமஹம்ஸ என்று தன்னைக் கூறிக்கொண்ட சாமியார் நித்யானந்தமும், நடிகை ரஞ்சிதாவும் செக்ஸ் உறவு கொண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியாகி உலகை அதிர வைத்தன.

இரண்டு நாள் அமைதி காத்த சாமியார் தரப்பு, பின்னர் இது போலியான வீடியோ என்றது.

ஆனால் சாமியாரிடமும் விசாரித்துவிட்டே இந்த வீடியோவை ஒளிபரப்பியதாக சன் தொலைக்காட்சி நேற்று அறிவித்தது. போலி வீடியோ என்று நித்யானந்தா தரப்பு மறுத்தாலும், அதை நிரூபிக்க தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

இந் நிலையில் பிரச்சனையின் மையப்புள்ளியான ரஞ்சிதா இருக்கும் இடம் தெரியவில்லை. அவரது வீடு பூட்டிக் கிடக்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள தனது நெருங்கிய தோழியின் வீட்டில் அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஞ்சிதாவை போலீசார் விசாரணை நடத்துவதற்காக தேடுகிறார்கள். ராவண் படத்துக்கு டப்பிங் பேச மணிரத்னமும் அவரது யூனிட்டாரும் கூடத் தேடுகிறார்கள்.

ரஞ்சிதாவுக்கு உதவ நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகளும் தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் ரஞ்சிதாவின் கணவர் ராகேஷ் மேனன் குடும்பத்தினரும் அவமானத்தால் நொறுங்கி போய் உள்ளனராம். ராகேஷ் மேனன் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. கணவருடன் இருப்பதாகவே ரஞ்சிதாவும் கூறிவந்தார். ஆனால் தனியாகவே வசித்து வந்தார்.

தானும் சாமியாரும் உள்ள ஆபாசக் காட்சிகள் வெளியானதால் ரஞ்சிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சிலர் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், சில தினங்களாக ரஞ்சிதா பற்றி வெளியாகும் செய்திகளின் தீவிரத்தைத் தணிப்பதற்காகவும், ரஞ்சிதாவைத் தேடும் போலீசாரின் வேகத்தை மட்டுப்படுத்தவும் இந்த 'தற்கொலை முயற்சி' செய்தியை அவருக்கு வேண்டிய சிலர் பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.


நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு?

நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் அளிக்கவோ, அவருக்கு எதிராக திரும்பவோ முடியாது என்று நடிகை ரஞ்சிதா கூறி விட்டதாக அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது.

நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சி போலியானது, அது கிராபிக்ஸ் வேலை என்று நித்தியானந்தா பீடத்தின் பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார். மேலும், சாமியாருக்கு எதிராக புகார் அளிக்குமாறு ரஞ்சிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் ரஞ்சிதாவோ, சாமியாருக்கு எதிராக புகார் தரவோ, எதிராக செயல்படவோ முடியாது என்று உறுதிபடக் கூறி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் ரஞ்சிதா புகார் கொடுத்தால் மட்டுமே சாமியார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான வாய்ப்புகள் உண்டு. எனவே ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் ரஞ்சிதா நழுவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஞ்சிதா எப்படி நித்தியானந்தாவுடன் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை மகளான நடிகை ராக சுதாதான், ரஞ்சிதாவை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாராம். கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து போயிருந்த ரஞ்சிதாவை, ராக சுதாதான், பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் ஆறுதல் அளித்துள்ளார்.

ஆசிரம சூழல் ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இதையடுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். அங்கு பல மணி நேரம் தியானம் செய்வாராம். யோகா குறித்த ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தாராம்.

மேலும் நித்தியானந்தர் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக அவரது அறையைக் கூட ரஞ்சிதாதான் சுத்தம் செய்வாராம். அப்போதுதான் நித்தியானந்தாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டதாம்.

இந்த சமயத்தில்தான் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளது ஆசிரமத்திலேயே இருந்து வந்த நித்தியானந்தா எதிர்ப்பு கோஷ்டி. இவர்கள் செய்த சதியில்தான் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் மாட்டிக் கொண்டு விட்டதாக கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் இதேபோல உலா வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா.
32 வயதிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் அமைத்து உலகம் முழுவதும் மடத்துக்கு 1500 கிளைகள் உருவாக்கிய நித்யானந்தா மீது வேறு சில மடங்களின் சாமியார்களுக்கு பொறாமை இருந்ததாம்.

அவர்களும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியைத் தூண்டி விட்டு, நித்தியானந்தாவை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள்.

இப்படி பல முனைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள், பொறாமைகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நித்தியானந்தாவை, இன்று ரஞ்சிதா மூலம் வீழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.
ரஞ்சிதா – நித்யா… லிங்க் கொடுத்த தயாரிப்பாளர்!!

நடிகை ரஞ்சிதாவுக்கும் நித்யானந்த சாமியாருக்கும் இடையே லிங்க் கொடுத்தவர் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தயாரிப்பாளர் பார்க்க அடக்கமாகத் தெரிபவர். இசைஞானி போன்றவர்களிடம் நல்ல பெயர் பெறுமளவு ‘நடிப்புத் திறமை’ கொண்டவர்.
‘மதரின்’ பெயரில் இவர் தயாரித்த படத்தில் மட்டும்தான் மரியாதை இருந்தது… ஆனால் இவர் செய்த காரியங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து இவர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் சிதைத்துவிட்டது.

இவர்தான் சாமியாரிடம் ரஞ்சிதாவை நேரடியாக அழைத்துப் போனாராம்.

நடிகையின் தனிப்பட்ட விவகாரங்களும் தயாரிப்பாளருக்கு அத்துபடி. அதேபோல சாமியாருக்கும் இவர் மிகமிக நெருக்கமானவராம். அவரது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதே இவரது கடமையாக இருந்திருக்கிறது. ரஞ்சிதாவின் மனக்காயத்துக்கு மருந்தாக சாமியாருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இந்தத் தயாரிப்பாளர். அதற்கு பதில் வெகுமானமும் அவருக்கு நிறையவே கிடைத்துள்ளது!

ரஞ்சிதாவைப் போலவே இன்னும் சில கவர்ச்சிகரமான, ஆனால் முன்னாள் கனவுக் கன்னிகளாக மாறிப்போன (அதாவது அந்த தயாரிப்பாளர் காலத்தில் முன்னணியில் இருந்தவர்கள்) சில நடிகைகளை சாமியாருடன் கோர்த்துவிட்டதில் தயாரிப்பாளரின் ரோல் அபாரமாம்!

நித்யானந்தா மீது வழக்குப்பதிவு:
நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு


நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

2 பிரிவுகளில் வழக்கு

கோவை கணபதி பூசாரிபாளையம் மணியகாரன்பாளையத்தை சேர்ந்தவர் டி.எம்.விஸ்வநாத். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் `ஆன்மிகத்தின் பெயரால் நித்யானந்தா பொது மக்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து காணிக்கை, நன்கொடை மற்றும் கட்டணம் ஆகிய வழிகளில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு பணம் வசூலித்து அதனை தன் சுயலாபத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். கோவை மாநகரில் `பகவத் கீதை சத் சங்கம்' என்ற பெயரில் பெரிய அளவிலான பொருட்செலவில் முகாமை நடத்தி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நித்யானந்தாவை கைது செய்து விசாரிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

அவருடைய மனுவின் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 (மோசடி), 295 ஏ (மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த முடிவு

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாக சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்கும் இடம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் பதிவாகும் புகார்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

கமிஷனர் அலுவலகத்தில்...

இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரம வக்கீல் ஸ்ரீதர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நித்யானந்தா சுவாமிகள் தலைமறைவாகவில்லை. அவர் 18-ந் தேதிக்கு பிறகு சென்னை வருவார்'' என்று தெரிவித்தார்.

ரஞ்சிதா மீது...

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை வக்கீல் ராஜலட்சுமி என்பவர் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

நித்யானந்தா, நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிட்டது, பிளஸ்-2 பரீட்சை எழுதும் மாணவ-மாணவிகளை பெரிதும் பாதித்து விட்டது. எதிர்காலத்தில் இது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிடாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதே போல் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் சபீர் என்பவர் கொடுத்த புகாரில், நடிகை ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.


நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், திரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி:

சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா?

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. இனிமேல் நான் போகமாட்டேன். நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றார் த்ரிஷா.

போலீஸ் கட்டுப்பாட்டில் நித்யானந்தா ஆசிரமம்

சாமியார் நித்யானந்தா, 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திருந்த பிடதி ஆசிரமத்தை, போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆசிரமத்தில் தங்கிருந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.

தமிழகம், கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது இன்னமும் தெரியவில்லை. இரு மாநில போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மைசூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் அங்கு தேடினர்; அங்கு அவர் இல்லை.பெங்களுரு அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரம பீடத்திலுள்ள சீடர்களுக்கு, சாமியார் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு, ராம் நகர் மாவட்ட கலெக்டர் சிவசங்கர் நேற்று முன்தினம் மாலை வரை கெடு விதித்திருந்தார்.

ஆனால், சாமியார் எங்கு இருக்கிறார் என்று யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.கலெக்டர் விதித்த கெடு முடிந்ததால், அவரது உத்தரவின் பெயரில் பெங்களூரு - மைசூரு ரோட்டில் பிடதி நகரில், 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தை, நேற்று காலை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஆசிரமத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் பெண்களும் அடங்குவர். அவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். அங்கு தங்கியிருந்தவர்கள், ஒருவர் பின் ஒருவராக ஆசிரமத்தை காலி செய்து வருகின்றனர்.ஆசிரமத்தில் வெளிநாட்டவர்கள் தங்குவதற்கு, ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய, "ஆனந்த நிவாஸ்' கட்டும் பணி நடந்து வந்தது. தற்போதைய பிரச்னையால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.



நித்யானந்தர் லீலை : நிர்வாகிகள் ஓட்டம்



நித்யானந்தாவிடமிருந்து மகனை மீட்க கமிஷனரிடம் புகார்!

செக்ஸ் சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து தங்களது மகனை மீட்டுத் தரும்படி சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். சென்னை மணலி நியூடவுனை சேர்ந்தவர் வாசன் இவர் சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் தனது மகன் மெய்யிறை (24) என்பவரை மீட்டு தரும்படி நேற்று புகார் அளித்துள்ளார். அவர் புகாரில் கூறியிருப்பதாவது..

எனது மகன் மெய்யிறை டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படித்துள்ளார். நித்யானந்தாவின் ஆசிரம யோகா பயிற்சி ஆர்வத்தால், நித்யானந்தாவிடம் எனது மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் எனது மகன் சேர்ந்துவிட்டான். பல முறை அங்கு சென்று, என்னுடைய மகனை வரும்படி அழைத்தேன். என்னைத் தேடி இங்கு யாரும் வர வேண்டாமென்று கூறிவிட்டான். தாய் அழைத்தால் வருவான் என்பதற்காக எனது மனைவியையும் ஆசிரமத்திற்கு அழைத்து சென்று அவனை அழைத்தேன் அப்போதும் நான் வரமாட்டேன் என்று கண்டிப்பாக கூறிவிட்டான்.

சில மாதங்களுக்கு முன், என் மகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது வாழ்க்கை கல்வி கற்பதாகக் கூறினான்.. கடந்த சில நாட்களாக நித்யானந்தா பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன. இதனால், எனது மகனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று தோன்றுகிறது. நித்யானந்தாவின் அந்தரங்கம் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆசிரமத்தை விட்டு வெளியே விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று மெய்யிறை தொலைபேசியில் கூறினான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்கள் உடனே நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மகனை மீட்பதற்காக பெங்களூரு விரைந்தோம்.

ஆனால், எங்களை ஆசிரமத்தின் உள்ளே அனுமதிக்காமல் காவலாளிகள் எங்களை விரட்டி வெளியேற்றினர். நித்யானந்தா ஆசிரமத்தில் அடைபட்டுள்ள எனது மகன் மெய்யிறைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நித்யானந்தாவிடம் இருந்து எனது மகனை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மெய்யிறையின் பெற்றோர் புகாரில் கூறியுள்ளனர். புகாரை பெற்ற புறநகர் கமிஷனர் ஜாங்கிட், எண்ணூர் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.


நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா

நித்யானந்த சாமியார் ஒரு மோசடிப் பேர்வழி. அவரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார் நடிகை தாரா.

கன்னடத்தில் முன்னணி நடிகை கம் அரசியல்வாதி இந்த தாரா. தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர்.

நித்யானந்தரின் மிகத் தீவிரமான பக்தை இந்த தாரா. நித்யானந்தமே பக்தர்களுக்கு 'நித்திய ஆனந்தம்' என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. நித்யானந்தத்துக்காக பல ரியல் எஸ்டேட் டீல்களில் இவர் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கன்னடத் திரையுலகில் நித்யானந்தன் புகழ் பரப்புவதில் முன்னணியில் இருந்தார்.

தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்.

இந்த நிலையில் நித்யானந்தன் - ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

அவர் கூறுகையில், "என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இந்த பக்தர்களை ஏமாற்ற எப்படி நித்யானந்தனுக்கு மனசு வந்தது. இனி மனித உருவில் சாமிகள் என்று சொல்லும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த ரஞ்சிதா விவகாரத்தின் முழுப் பின்னணியையும் வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த மாதிரி போலிச் சாமியார்களை ஒழிக்க வேண்டும்...!" என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல