சுடுகாட்டில் முதல் நாள் எரியூட்டப்பட்ட பிணத்தின் சாம்பரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்ட இவர்கள் நேற்று முன் தினம் வழமை போல அபிஷேக வழிபாடு செய்வதற்கு மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜயினி மகா காளேஸ்வர் கோவிலுக்கு வந்தார்கள். .
பின்னர் அருகிலிருந்த அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய இவர்கள், சங்குமால் அருகே முக்திதாம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்ட பிணத்தின் சாம்பரை சேகரித்து, எதிரில் உள்ள படித்துறையில் சிவலிங்கத்தை வைத்து, சாம்பரால் அபிஷேகம் செய்தனர். இதைத் தொடர்ந்து பால், பன்னீர் மற்றும் இளநீராலும் அபிஷேகம் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து உலகில் அமைதி வேண்டி ஜெப மும் செய்தனர்.
இது குறித்து பக்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்: அவசரமான இந்த யுகத்தில், மனிதர்கள் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு, பணம் சம்பாதிப்பதால் மனிதாபிமானம் குறைந்து உள்ளது. எவ்வளவுதான் சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்தாலும், இறுதியில் மனிதர்கள் அனைவரும் சாம்பராகின்றனர்.
இதை உணர்த்தும் வகையில்தான் லிங் கத்திற்கு சாம்பலால் பூஜை செய்யப்படுகிறது. மனிதர்களும் இதை உணர்ந்து, ஒரு வருக்கொருவர் சண்டையில்லாமல், ஒற்று மையுடன் வாழவும், அமைதி நிலவவும், இந்த பூஜை நடத்தப்பட்டது என்றார்.
மேற்படிப் பூஜைகளைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், நேற்று ருத்ரபூஜை செய்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக