தமிழே தெரியாத தமன்னாவாக இருந்தாலும் சரி, தமிழ் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கும் த்ரிஷாவாக இருந்தாலும் சரி... முதல் கேள்வியாக ரஞ்சிதாவின் பலான மேட்டர் பற்றித்தான் கேட்பதென்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.
கவர்ச்சி நடிகை சோனாவிடமும் நேற்று அதே கேள்வியை வீசினர்.
சொந்தமாக படம் தயாரிக்கிறாராம் சோனா. இந்தப் படத்துக்காக சில நிருபர்களை அழைத்து 'கவரேஜ்' பண்ணச் சொல்லியிருக்கிறார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, ' செக்ஸ் புகாருக்குள்ளான நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா பற்றி உங்கள் கருத்து என்ன?'
இதற்கு பதிலளித்த சோனா, "அதில் என்ன தப்பு இருக்கு? இருவரும் விருப்பப்பட்டுத்தானே அப்படி நடந்து கொண்டார்கள். அது அவர்கள் விருப்பம். அதுபற்றி மேற்கொண்டு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை..." என்றார்.
"உங்களை திருமணம் செய்துகொள்வதற்கு நிறைய பேர் ஆசைப்படுவதாக முன்பு கூறியிருந்தீர்கள். உங்கள் கணவரை தேர்ந்தெடுத்து விட்டீர்களா?" என்று கேட்டதற்கு,
"இனிமேல் நான் ஆண்களை நம்ப மாட்டேன். எல்லோருமே காரியவாதிகள். நான் ஒளிவு மறைவு இல்லாதவள். திறந்த மனதுடன் பேசுபவள். என்னை எந்த ஆணும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். யாராவது என்னிடம் வந்து, 'நீங்க அழகா இருக்கீங்க (?!)' என்று வழிந்தால், நான் கண்டுகொள்வதில்லை. ஏறக்குறைய ஞானி ஆகிவிட்டேன்..." என்றார்.
சினிமாவிலும் நிஜத்திலும் இனி சேலை கட்டவே விரும்புகிறாராம் சோனா... பெரிய கலாச்சாரப் புரட்சிதான்!
எல்லா நடிகைகளும் ரஞ்சிதா அல்ல!-தமன்னா
எல்லா நடிகைகளையும ரஞ்சிதா போல நினைத்துக் கொள்ளக் கூடாது. அவர் தப்பு செய்தார் என்பதால் எல்லோருமே அப்படியா செய்வார்கள் என்கிறார் நடிகை தமன்னா.
பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், நான் கோவிலுக்குப் போவேன். சாமி கும்பிடுவேன். அதோடு சரி. அளவுக்கதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை.
ரஞ்சிதா பற்றி நான் என்ன சொல்ல... அது அவர் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது...." என்றார்.
சூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவருடனும் நடித்துள்ளீர்களே... இவர்களில் யார் உங்களுக்கு வசதியாக இருந்தார் என்ற கேள்வியை நிருபர்கள் கேட்க, சற்று நேரம் யோசித்தவர் இப்படிச் சொன்னார்:
"அயன் படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்தேன், அவருடன் நடிப்பதற்கு முன்பே நான் அவருடைய ரசிகை. முதன்முதலாக அவருடன் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆனால் கார்த்தி அப்படியல்ல அவர் எப்போது பார்த்தாலும் தமாஷ் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார். அதனால் அவருடன் நடிக்கும் போது பதற்றமில்லை. காதல் காட்சிகளில் நடிக்கும் போது சவுகரியமாகவே இருந்தது. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நைஸ்... கம்ஃபர்ட்!" என்றார்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக